Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 30 மார்ச், 2015

மன்னிக்க மாட்டாய்! உன் மனமிரங்கி..!நீங்கள் ஒருவரை மன்னிக்காத பொழுது இரண்டு நபருக்கு இங்கு தீங்கு செய்கிறீர்கள். ஒன்று உங்கள் எதிராளி. இன்னொருவர் நீங்கள் தான்.
மன்னியாமை குறித்து இயேசு ஒரு உவமைக்கதை சொன்னார்.
ஒரு பணியாளன், தனது முதலாளியிடம் பத்தாயிரம் தாலந்து கடனாக வாங்குகிறார். ஒருமுறை அவனை அழைத்து, வாங்கிய கடனைக் கொடுத்து தீர்க்கும் படி கட்டளையிடுகிறார். பணியாளனோ, அது விஷயத்தில் பொறுமையாய் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறான்.

அதைக் கேட்ட அவனுடைய முதலாளி, அவன் மீது மனமிரங்கி, அவனை மன்னித்து கடனை ரத்து செய்து விடுதலை பண்ணுகிறார். இந்த பணியாளனுக்கு ஒரு பணியாளன் இருந்தான். அவன் தன் முதலாளியிடம், நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தான். அதைத் திருப்பித்தரக் கேட்டான். அவன் தன்னால் தற்போது தர இயலாது என சொல்லவே, அவனது தொண்டையை நெரித்து காவலில் இட்டான்.

இதைக் கேள்விப்பட்ட முதலாளி, தன் பணியாளனின் மன்னிப்பை ரத்து செய்து, ""பொல்லா ஊழியக்காரனே! என்னை வேண்டிக் கொண்ட படியினால் நீ பட்ட கடனை முழுதையும் மன்னித்து விட்டேன். நான் உனக்கு இரங்கினது போல் நீயும் உன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமா!'' என்று சொல்லி அவன் மீது கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்கு கொடுத்து தீர்க்குமளவும்- உபாதிக்கிறவர்களிடத்தில் (தண்டனை கொடுப்பவர்களிடம்) அவனை ஒப்புக் கொடுத்தான்.

ஆகையால், நீங்கள் யாரையாவது மன்னியாதிருந்தால், உங்களுடைய மன்னிப்பு ரத்து ஆகும் வாய்ப்பு உள்ளது... ஆம்.... ஆமை குளத்தைக் கெடுக்கும். மன்னியாமை இருதயத்தைக் கெடுக்கும்.

பைபிள் சொல்வதைக் கேளுங்கள்.
* நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமல் போனால் என் பரமபிதாவும், உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.(மத்தேயு 6:37).
* மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். அப்போது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள். அத்துடன் விடுதலைப் பண்ணப்படுவீர்கள்.(லூக்கா 6:37)
பாபு.ஜெ.பீட்டர்

இறை அலைகள் -Irai Alaikal -Vol-1 (Oppuravu Paadalhal)Oppuravu Paadalhal Vol-1
Fr.S.Agilan SDB
Don Bosco Mission
St.Antony's Church
Vilathikulam
Tuticorin


Appa Un Pillai Appa Naan Appa Nee Yesu Yesu Irakkathin Ethanai Natkal Yen Yesuvae En Pizhaiyellam Kannivu Kaatum Thanthai Thanthayin

போகப்போக தெரியும் உன் நிலைமை என்ன புரியும்!ஒருஅழுக்குத்துணி பேசுகிறது.
""முன்னொரு நாளில் நான் வண்ண வண்ணமாய் சிங்காரமாய் இருந்தேன். அவர்களின் கைகளில் நான் அழகிய துணியாக இருந்தேன். அவர்கள் என்னைக் கையிலெடுத்து என் அழகை ரசித்தனர். தங்கள் படுக்கை அறையில் எனக்கு சொகுசு இடம் அளித்தனர். முக்கியத்துவமும் பிரசித்தமும் அனுபவித்தேன். ஒருநாள் என்னைக் கிழே தள்ளி வெளியே எறிந்து விட்டனர்.
என்ன தவறு நிகழ்ந்தது? என்னை நேசித்து போற்றிய மக்கள் இவர்கள் தானே! எப்படி இவர்கள் என்னை இப்படி நடத்தலாம்? அதே முகங்கள்! அதே மக்கள்.
அப்பொழுது தான் குனிந்து என்னைப் பார்க்கத் துவங்கினேன்.

ஆம்..என் தோற்றம் முன்பிருந்தது போல் இல்லை. இடைவிடா உழைப்பினால் நைந்து போயிருந்தேன். எனது சேவையினால் பிரகாசம் இழந்திருந்தேன். இப்போது நான் கவர்ச்சியாய் இல்லை. ஒத்துக்கொள்ள விநோதமாகத்தான் இருந்தது. மக்கள் இப்போது என்னை விரும்பவுமில்லை, நேசிக்கவுமில்லை.

கடைத்தெருவில் கிடைத்த புதிய துணிகளை அவர்கள் பயன்படுத்தத் துவங்கினர். இந்தப் புதியவர்கள் உற்சாகமாகவும் இருந்தனர். என்னைப் போலவே முடிவடைவார்கள் என்ற எண்ணம் அவர்கள் இதயத்தில் உதிக்கவில்லை. நாள் போகப் போகத்தானே தெரியும்!''

இந்த அழுக்குத்துணியின் புலம்பல் போல மக்களும் நம்மைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வயதாகி விட்டால் தள்ளி விடுவார்கள். ""இந்நாள் வரைக்கும் உலகத்தின் குப்பையைப் போலவும், எல்லாரும் துடைத்துப் போடுகிற அழுக்கைப் போலவுமானோம்,'' என்று பவுல் எழுதின போது, இப்படித்தான் உணர்ந்திருப்பார்.

தேவனோ நம்மை எப்போதும் உபயோகப்படுத்துகிறார். அழுக்குத்துணியை உதறித்தள்ளியது போல உன்னை இந்த உலகம் தள்ளி விட்டதா! திடன் கொள்ளுங்கள். இயேசுவையும் உலகம் அப்படித்தானே நடத்தியது. ஆனால், இயேசு உன்னை ஒரு போதும் கைவிடமாட்டார்.

அதற்கு நீ செய்ய வேண்டியது என்ன? தேவன் உனக்கு கட்டளையிட்டதைச் செய்யும்படியாக முன்னேறிச் செல். உன் உழைப்பு வீணாகாது. ஒவ்வொரு ஜெபமும், ஒவ்வொரு போராட்டமும், நீ கொடுத்த ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு கலசம் தண்ணீரும் ஒவ்வொன்றும் கணக்கிடப்பட்டு பதிவாகி விட்டது.
தேவன் உன்னை பாரப்படுத்தினவற்றை செய்து கொண்டே இரு! உன் ஓட்டத்தை முடிக்க அவரே உன்னைப் பெலப்படுத்துவார்.
தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து

ஞாயிறு, 29 மார்ச், 2015

வம்பர்களிடம் நமக்கென்ன வேலை!வம்புக்காரர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், விலகிச் செல்வதே நல்லது என்கிறது பைபிள்.ஒரு ஆட்டுக்குட்டி, தன் தாயைப் பிரிந்து காட்டில் வழிதெரியாமல் போய்விட்டது. கடும் களைப்பால் தாகம் மேலிட, ஒரு ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. அப்போது ஒரு ஓநாய், ""ஏய் ஆடே! ஏன் தண்ணீரை கலக்குகிறாய்?'' என்றது.

வம்புக்கார ஓநாய் தன்னை அடித்து தின்னவே வந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்ட ஆட்டுக்குட்டி, ""நீ அந்தப் பக்கமாக நின்று தானே தண்ணீர் குடிக்கிறாய்? நீ குடித்த தண்ணீரின் மிச்சம் தானே நான் நிற்கும் இடத்திற்கு வருகிறது? அப்படியிருக்க, நான் தண்ணீரைக் கலக்குவதாக சொல்கிறாயே?'' என்றது.

""அதெல்லாம் இல்லை. நீ எங்கு நின்றாலும், தண்ணீரைக் கலக்கத்தான் செய்கிறாய்,'' என்ற ஓநாய், ""ஐயையோ! இங்கே நான் சாப்பிட வளர்த்திருந்த புல்லைத் தின்று விட்டாயா?'' என்று கத்தியது.

""நீ புல் சாப்பிடமாட்டாயே. அது எங்கள் உணவல்லவா? நீ இறைச்சி சாப்பிடுபவன் ஆயிற்றே,'' என்று பயத்துடனும் பணிவுடனும் கேட்டது. உடன் ஓநாய், ""சரியாகச் சொன்னாய். இதோ பார்! உன்னை அடித்து சாப்பிடுகிறேன்,'' என்று பாயவும், ஒரு அம்பு ஓநாயின் மீது தைக்கவும் சரியாக இருந்தது. 

அது அலறியபடியே உயிரை விட்டது. ஆட்டின் சொந்தக்காரன், ஆட்டைத் தேடி அங்கு வர, ஓநாய் அதன் மீது பாய்வதைப் பார்த்து, அம்பெய்து அதைக் கொன்று விட்டான். ஓநாயிடம் நெருங்கிச் சென்று வாக்குவாதம் செய்திருந்தால் ஆடு மடிந்திருக்கும். ஒதுங்கிப் போனதால் அது உயிர் தப்பியது.

""வாக்குவாதம் செய்ய வேண்டாம், அதனால், கேட்கிறவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய ஒரு பலனுமில்லை,'' என்ற பைபிள் வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.

செவ்வாய், 24 மார்ச், 2015

PASSION OF CHRIST MOVIE -தமிழில் -DownloadPASSION OF CHRIST MOVIE -தமிழில் -Download

PASSION OF CHRIST MOVIE -தமிழில் -Download

PASSION OF CHRIST MOVIE -தமிழில் -Download

                                                       DOWNLOAD THIS MOVIE

மறக்கக்கூடாத வசனம்!


ஒரு ஆற்றில் மழை காரணமாக கடும் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது.
ஆற்றங்கரையோரமாக நடந்து வந்த ஒரு சிறுமி, தண்ணீரில் தவறி விழுந்து விட்டாள். ஆற்றில் வேகமாக அடித்துச் செல்லப்பட்ட அவளை, கரையில் நின்ற மைக்கேல் என்பவர் பார்த்தார். சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்தார். வெள்ளம் அவரையும் இழுத்துச் சென்றது. எப்படியோ சிறுமியை தட்டுத்தடுமாறி பிடித்தார். ஆனாலும், கரைக்கு வர முடியாமல் அவரும் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தார்.

அந்நேரத்தில் பாலம் ஒன்றில், அவர்கள் மோதி நின்றனர். பாலமும் வெள்ளத்தில் சேதமடைந்திருந்தது. ஆனால் நீட்டிக் கொண்டிருந்த கம்பி ஒன்றை, மைக்கேல் பற்றிக்கொண்டார். கரையில் நின்ற மற்றவர்கள் கலங்கி நின்றார்கள். மீட்புப் படையினருக்கு தகவல் சென்றது. அவர்கள் வேகமாக வந்து இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். கரைக்கு வந்த பிறகு, மக்கள் மைக்கேலைப் பாராட்டினார்.

அவரைப்பற்றி விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் என்ன தெரியுமா?
"எனக்கு நீச்சல் தெரியாது!' என்பதுதான். ஆபத்தான நேரத்தில் அதை எதிர்த்துப் போராட கற்றுக்கொள்ள வேண்டும். அந்த ஆபத்தைச் சமாளிக்கத் தெரியாது என தயங்கி நிற்கக் கூடாது.

""நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள்; அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடே கூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை,'' என்கிறது பைபிள். இந்த வசனத்தை வாழ்நாள் முழுவதும் மறக்காதீர்கள்.

திங்கள், 23 மார்ச், 2015

தலைவர்களே! இது உங்கள் கண்ணில் படாதா!

  

அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் ஜார்ஜ் வாஷிங்டன் ராணுவ தளபதியாக இருந்தார். ராணுவத்தில் சிறு பணியில் இருந்த ஒருவரின் கீழிருந்த சில வீரர்கள், அந்தக் கடும் குளிர் காலத்தில் தாங்கள் செல்லும் வழியில் ஒரு பாலம் அமைக்கும் படியாக ஒரு பெரிய கட்டையை உந்தித் தள்ளிக் கொண்டிருப்பதை ஜார்ஜ் கண்டார். அதைத் தள்ளுவதால் வீரர்கள் களைப்படைந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டார். 

அந்த வீரர்களின் கண்காணிப்பாளரான அந்த பணியாளனோ தன் கையில் கோலுடன் ஒரு பக்கமாய் அங்கு நின்று கொண்டு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். இந்த நிலையில் வீரர்களுக்கு உதவி தேவை என்பதை கண்டு கொண்ட ஜார்ஜ் வாஷிங்டன், தானே முன் சென்று அவர்களுடன் சேர்ந்து கொண்டு, பளுவான அந்த கட்டையைத் தள்ளினார். முடிவில் நல்லதொரு பாலமும் அமைக்கப்பட்டது. 

அவர் தன் தொப்பியைச் சற்று தாழ்த்தி அணிந்திருந்தபடியால் பலரும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர் விடை பெறும் போது அந்த சிறிய பணியாளனை நோக்கி, ""நம் வீரர்கள் இவ்வளவு கடினமாகி பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தபோது, நீர் அவர்களுக்குச் சற்று உதவி செய்திருக்கலாமே'' என்றார்.
அவனோ, ""என் அடையாள சின்னத்தை நீர் பார்க்கவில்லையா? நான் ஒரு ராணுவ உத்தியோகஸ்தன்'' என்றான்.
ஜார்ஜ் வாஷிங்டன் தன் தொப்பியைச் சற்று உயர்த்தி, ""நான் ராணுவத்தளபதி! இன்னொரு முறை இப்படி ஒரு பளுவான கட்டையை தள்ள வேண்டியது வரும் போது, தயவு செய்து என்னைக் கூப்பிடுங்கள்,'' என்று கூறி விட்டு நகர்ந்தார். அந்த பணியாளன் அதிர்ச்சி அடைந்தான். தன்னைத் தாழ்த்தி பணிவிடை செய்த ஜார்ஜ் வாஷிங்டன் பின்னாளில் அமெரிக்காவின் ஜனாதிபதியானார். காரணம் அவருக்குள் கிறிஸ்துவின் சிந்தை இருந்தது. 
கிறிஸ்துவின் சிந்தை என்பது என்ன?

""அவர்(இயேசு கிறிஸ்து) தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே பொறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலனார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு மரணபரிந்தயம் அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார்.(பிலி.2: 5-8)
இப்படிப்பட்ட தாழ்மையின் சிந்தை நமக்கு அவசியம். 

தேவன் நமக்கு தந்திருக்கிற பொறுப்புக்களை நினைத்து பெருமைப்படாமல் பாக்கியமாக கருதுங்கள். தேவனே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறவர் என்பதை உணர்ந்து துன்மார்க்கரிடமும் தேவ மனுஷன் தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கிற அதிகாரங்களை தவறாய் பயன்படுத்தக் கூடாது. இயேசுகிறிஸ்து ராஜாதி ராஜாவாக இருந்தும் சாதாரண மனிதர்களான நம்முடைய கால்களைக் கழுவினார். இது தான் தலைவனாய் இருக்கிறவருடைய குணாதிசயம். ""தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்'' என்பதை உணர்ந்து கொள்வோம். 

ஞாயிறு, 15 மார்ச், 2015

காத்திருக்கிறது நீதியின் கிரீடம்
இரவு நேரத்தில் நான்கு திருடர்கள் வந்து கொண்டிருந்தனர். இருட்டாக இருந்ததால், வழியில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனை, மரக்கட்டை என நினைத்து ஒருவன் மிதித்து விட்டான். அலறி எழுந்த அவனிடம் திருடன், "தவறுதலா மரக்கட்டைன்னு நினைச்சுட்டேன்' என்றான்.
தூங்கியவனோ கோபத்தில்,"" எந்த மரக்கட்டையாவது பணப்பையோடு தூங்குமா?'' என்று கேட்டான்.

இதைக் கேட்டதும் திருடர்கள் குஷியாகி விட்டனர்.
எப்படியாவது அந்த பண முடிப்பை அபகரிக்க முடிவெடுத்தனர். ஆனால், அவனோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. நான்கு பேரையும் எதிர்த்துப் போராடினான். இறுதியில் அந்த மனிதனை கட்டிப் போட்டு விட்டு, அவனிடம் இருந்த பணப்பையைப் பிடுங்கினர்.

ஒரு திருடன் ஆர்வமுடன் பையைப் பிரித்து பார்த்தான். அதில் மிகவும் சொற்ப பணமே இருந்தது. திருடர்கள் எரிச்சலும், ஏமாற்றமும் அடைந்தார்கள். ஆக, அந்தப் போராட்டம் பயனற்றதாகிப் போனது. ""பூமியிலே போராட மனுஷனுக்கு காலம் குறிக்கப்பட்டிருக்கிறது''(யோபு.7:1) என்றும், ""நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்'' (எபே.5:16) என்றும் பைபிள் நமக்கு கூறுகிறது.
இந்த பொல்லாத காலத்தில் மனிதன் எதற்கெல்லாமோ போராடுகிறான். பதவிக்காகவும், பணத்துக்காகவும் பிரயாசைப்படுகிறான்.
""பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள். நாமோ அழிவில்லாத கிரீடத்தை பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்''(1கொரி.9:25) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்.நீங்கள் அழிவுள்ள கிரீடத்தை பெற்றுக் கொள்ள போராடுகிறீர்களா அல்லது அழிவில்லாத கிரீடத்தைப் பெற்றுக் கொள்ள போராடுகிறீர்களா?
""நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மாம்சத்தோடும், இரத்தத்தோடு மட்டுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு'' (எபே.6:11,12) என்கிறது பைபிள்.

பவுல் தனது ஊழியத்தின் முடிவில் ""நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருள்வார் எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருள்வார்'' (11 தீமோ.4:7,8)'' என்கிறார்.
உங்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். நீதியின் பாதையில் நடந்து வாழ்வை பயனுள்ளதாக்குங்கள்.

சனி, 14 மார்ச், 2015

நல்லா பேசுங்க! நல்லதையே பேசுங்க!ஒரு பெண் எங்கு சென்றாலும், யாரிடம் பேசினாலும் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பாள். அவளால் பல குடும்பங்களில் பிரிவினை, பிரச்னை உண்டானது. ஒருநாள் சபை போதகர் அவளை அழைத்து, சந்தைக்குப் போய் முழு கோழியை வாங்கி, வரும் வழியில் அதன் இறகுகளை உருவி கீழே போட்டுக் கொண்டே வரும்படி சொன்னார். அவளும் அப்படியே செய்தாள்.

மீண்டும் போதகர் அவளிடம், வந்த வழியே திரும்பிச் சென்று இறகுகளை எடுத்து வரும்படி கூறினார். அவளோ, ""ஐயா! எல்லாம் காற்றில் பறந்து போயிருக்குமே! எப்படி எடுக்க முடியும்?'' என்றாள்.
உடனே போதகர், ""இப்போது புரிகிறதா? நீ பேசுகிற வார்த்தைகளும் இதைப் போலத் தான்! மறுபடியும் பெற முடியாது. அவை 
காட்டுத்தீயைப் போல பரவி, சம்பந்தப்பட்டவர்களிடம் பிரச்னையை உண்டாக்குகிறது. அதை மீண்டும் சரி செய்ய உன்னால் முடியாது'' என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.

என் அன்பானவர்களே! 

  • நாக்கு பட்டயத்தைப் போல கூர்மையானது(சங்.64:3), 
  • சர்ப்பத்தைப் போல விஷமுள்ளது(சங்.140:3) 
  • வஞ்சனையாகப் பேசும்(சங் 5:9), புறங்கூறும்(சங்.15:3), 
  • ஏமாற்றும்(சங்.50:19), 
  • காயப்படுத்தும் (சங்.31:20), 
  • சபிக்கும்(ஒசி.7:16), 
  • அழிக்கும்(சங்.52:2), 
  • பொய் பேசும்(சங்.109:2). 

இப்படிப்பட்ட நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. எல்லா விலங்குகளையும் அடக்குகிறார்கள். ஆனால், தன் நாவை அடக்க முடியவில்லை. இரட்சிப்பு மட்டுமே அவனுடைய நாவின் பேச்சு வழக்குகளைக் கட்டுப்படுத்துகிறது (2 கொரி.5:17-18)

இன்றைய காலகட்டத்தில் அனேகர் தன்னுடைய நாவின் மூலமாகவே பிரச்னைகளில் அகப்பட்டு, துன்பத்தைச் சந்திக்கின்றனர். சிறிய உறுப்பாகிய இந்த நாக்கு, பெரிய உறவுகளையே பாதிக்க வைக்கும் ஆற்றல் உடையது. நாவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே உள்ளது. அவரிடம் நம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்கும் போது நல்லதை மட்டும் பேச வேண்டும் என்பதை நமக்கு போதிப்பார். எப்படி பேச வேண்டும் என்று ஆலோசனை தருவார். நம் பாதம் கல்லில் இடறாத படி அவர் நம்மை வழிநடத்துவார். நம் வாயோடு வாயாய் அவர் பேசி சமாதானத்தையும், அற்புதங்களையும் நிகழ்த்துவார்.

வேஷம் கலையும் ஒரு நாள்!ஒருவன் சில புறாக்களை நல்ல உணவு கொடுத்து வளர்த்தான். இதைக் கண்ட ஒரு காகம், தானும் புறாவாக வேஷமிட்டால், மற்ற புறாக்களோடு கலந்து உழைக்காமல் சாப்பிடலாமே என எண்ணியது.
சுண்ணாம்புக் குழியிலே புரண்டு எழுந்து தன்கரிய நிறத்தை வெளுப்பாக்கிக் கொண்டது. புறாக்களைப் போலவே, தத்தி தத்தி நடக்கவும் பழகிக் கொண்டது. அவன் புறாக்களுக்கு உணவிடும் நேரத்தில், அவற்றுடன் சேர்ந்து கொண்டது. வயிறார உணவு கிடைத்தது. இப்படியே அந்த காகம் அவனை பல நாட்களாக ஏமாற்றி வந்தது.

ஒருநாள் அந்தப் பக்கம் எலி ஒன்று செத்துக் கிடந்தது. அதைக் கண்ட காகங்கள் எல்லாம் கூடின. விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் கரைய ஆரம்பித்தன.
புறா வேஷத்தில் இருந்த காகத்திற்கும் அங்கு செல்ல ஆசை வந்தது. புறாக்களின் மத்தியில் தன்னையும் மறந்து "கா... கா...' என்று கரைந்தபடி எலியை நோக்கிப் பறந்தது. இதைக் கண்ட அந்த மனிதன் கோபம் கொண்டான்.
அதேநேரம், எலியைத் தின்று கொண்டிருந்த இடத்திற்குச் சென்ற அந்த "வெள்ளை' காகத்தை, மற்ற காகங்கள் தங்களைப் போல் அது இல்லையே என எண்ணி கொத்த ஆரம்பித்தன. அவற்றிடம் இருந்து தப்பிய காகம்,
புறாக்கூட்டத்தோடு சேர எண்ணி திரும்பியது. ஆனால், உண்மையை அறிந்த மனிதனோ, அதை அடித்து விரட்டினான்.

வேஷத்தால் விளைந்த விபரீதத்தை எண்ணி காகம் வருந்தியது.
இந்த கதையைப் படிக்கும் அருமையானவர்களே!
ஆலயத்திற்கு வரும் பலர் பயப்படுவது போலவும், ஊழியம் செய்வது போலவும் இருக்கிறார்கள். பக்தியுடன் இருக்கும் இந்த நபரே மதுக்கடையிலும் முதல் ஆளாக இருக்கிறாரே என்று பார்க்கும் போது மனம் கஷ்டப்படுகிறது. பாவங்களைச் செய்து விட்டு, ஆலயத்திற்கு மட்டும் சென்றால் போதும் என நினைக்கிற மாய்மால பக்தர்கள் பரலோகம் செல்ல முடியாது.
""நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன்'' (வெளி.3:15,16) என்று கூறுகிறார் இயேசு நாதர்.

""நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம்
இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்'' (ரோமர்.12:2)
வாழ்நாள் முழுதும் கிறிஸ்துவில் வாழ தீர்மானம் கொள்ளுங்கள். 

பணத்தை இப்படியும் மாற்றலாமே! - ஜான் வெஸ்லி


வருமானம் உயர உயர சுயநலத்தின் அளவும் உயர்ந்துகொண்டே போகிறது. 
வீட்டிற்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதில் தவறில்லை. ஆனால், ஆடம்பரத்தில் திளைத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பவர்களையே அதிகமாய்ப் பார்க்கிறோம். போதாக்குறைக்கு கொடிய பழக்கங்களுக்கும் இந்த அதிகபட்ச வருமானம், மக்களை இழுத்துச் செல்கிறது.

இங்கிலாந்தில் வசித்த ஜான்வெஸ்லி என்ற மதபோதகர் ஒருகாலத்தில் குறைந்த வருமானம் உடையவராக இருந்தார். ஆண்டு வருமானமே 30 பவுண்டுகள்தான். இதில் 2 பவுண்டை தர்மம் செய்வார். மீதி அவரது தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனார். அவரது வருமானமும் மிகமிக உயர்ந்து 1600 பவுண்டை எட்டியது. இதனால் அவர் தனது செலவுகளை உயர்த்திக் கொண்டார். வாழ்க்கை முறையே மாறிவிட்டது. ஏழையாக இருந்தபோது, நடந்ததையெல்லாம் மறந்து விட்டார். தன் வீட்டை அலங்கரித்தார். வரவேற்பறையில் விலையுயர்ந்த படங்களை வாங்கி மாட்டி வைத்தார். சம்பாதித்த பணம் காலியாகும் வரை செலவழித்தார்.
இந்த நேரத்தில் அந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்கார சிறுமி நுழைந்தாள். அப்போது குளிர்காலம். குளிரைத்தாங்கும் அளவிற்கு உரிய உடையை அவள் அணிந்திருக்கவில்லை. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்தச்சூழலை பார்த்த ஜான்வெஸ்லி மிகவும் வருத்தப்பட்டார். 

""தேவையற்ற விஷயங்களில் பணத்தை செலவழித்தோமே! அந்த பணத்தில் இவளுக்கு நான்கைந்து கோட் 
எடுத்துக் கொடுத்திருக்கலாமே? இவளைப்போல இந்த பூமியில் எத்தனையோ ஏழை சிறுமிகள் உணவின்றி, உடையின்றி தவித்துக் கொண்டிருப்பார்களே! அவர்களுக்கு உதவிஇருக்கலாமே!'' என்ற எண்ணம் ஏற்பட்டது.
அத்துடன்"கடவுள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?' என்றும் சிந்தித்தார். பணத்துக்கு அடிமையானதை எண்ணி வெட்கப்பட்டார். அதன்பிறகு மனம் மாறினார். தனக்கு கிடைத்த சம்பளத்தில், முன்பைப்போலவே 28 பவுண்டுக்குள் தனது செலவை நிறுத்திக் கொண்டார். மீதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுவார்.
தானதர்மம் செய்ததால் இவர் வருமான வரி கட்டவில்லை. அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்டனர். அதிக வருமானம் இருந்தும் ஏன் வரி கட்டவில்லை? என கேட்டனர். ஆனால், அவரது வீட்டை சோதனையிட்ட பிறகுதான் அங்கு 2 வெள்ளிக்கரண்டிகளைத் தவிர, வேறு எதுவுமே இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் அவரிடம் வரி வசூலிக்காமல் விட்டுவிட்டனர்.

பணம் நல்லதுதான்! ஆனால், அது தன்னை வைத்திருப்போரை தீமைக்கு இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. நமது கையில் பணம் வரும்போது, அத்தியாவசியமான தேவைகளுக்கு போக, மீதி பசியுள்ளவனுக்கு ஆகாரமாக மாற வேண்டும். தாகமுள்ளவனுக்கு பானமாக வேண்டும். அரை நிர்வாணத்துடன் திரிபவர்களுக்கு உடையாக வேண்டும். அனாதை குழந்தைகளுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும் அது ஆறுதலாக மாற வேண்டும். பார்வையற்றோருக்கு பார்வை கொடுக்கவும், முடமானவர்களுக்கு காலாகவும் மாற வேண்டும்.

அன்பின் அலைகள் - Anbin Alaigal Tamil Christian Tele Film

அன்பின் அலைகள் - Anbin Alaigal Tamil Christian Tele Film -ஊர் கதை 
அன்பின் அலைகள் - Anbin Alaigal Tamil Christian Tele Film
அன்பின் அலைகள் - Anbin Alaigal Tamil Christian Tele Film
வெள்ளி, 13 மார்ச், 2015

ஜீசஸ் திரைப்படம் 1300க்கும் மேற்பட்ட மொழிகளில் Jesus Movie in 1300 languvage - jesus movie in tamil Language


1979 -ல் எடுக்கப்பட்ட ஜீசஸ் திரைப்படம் பின்னர் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு வருகிறது .


ஜீசஸ் பிலிம் என்னும் மிகப் பெரிய நிறுவனம் இந்த திரைப்படத்தை தற்போது வரையிலும் 1321 மொழிகளில் டப்பிங் செய்து இருக்கிறது செய்தும் வருகிறது . எத்தனை மொழிகளில் என்பதை பார்க்க : 


ஜீசஸ் திரைப்படத்தை பார்க்க : 


ஆடியோ வடிவில் : 


சிறுவர்களுக்கான ஜீசஸ் திரைப்படம் :


You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular