Tamil christian song ,video songs ,message ,and more

புதன், 5 நவம்பர், 2014

வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்.

(Gen. 1:28–30; 2:16, 17) உடன்படிக்கை என்பது பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கையாகும். இருபகுதினரும் இந்த உடன்படிக்கையைக்  காத்துக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு , உடன்படிக்கை முறிவடையாமல் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இருவரில் ஒருவரின் செயற்பாட்டால் உடன்படிக்கை முறிவடையும் போது இருபகுதியினரும் பாதிக்கப்படுவார்கள்.
வேதாகமத்தில் பல உடன்படிக்கைகள் காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்பட்டதையும் அதனை மேற்கொண்டு நடந்திருந்தால் ஏற்பட்டிருக்கும்  நன்மைகளையும் அவை முறிவடைந்ததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் அவதானம் செலுத்துவோமாக.
  1. 1.      ஏதேன் தோட்டதில் ஆதாமுடன்செய்யப்பட்ட உடன்படிக்கை.:-
  • ஆண்டவர் முதல் மனிதனை உருவாக்கினார்.  Ge. 1:27
  • அவனை பல்கிப் பூமியை நிரப்பும்படி கட்டளையிட்டார் Ge.1;28
  • அவனுக்கு சகல மீருகங்கள் மீதும் ஆளுகையைக் கொடுத்தார் Ge.1:28
  • தோட்டத்பை பராமரித்து அதில் கிடைக்கும் பலனை அனுபவிக்க் கூறினார். Ge.1;29
  • நன்மை தீமை அறியும் மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடவேண்டாம் என்று கூறினார்.. அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்..(Gen 2:16


ஏதேன்தோட்டத்து உடன்படிக்கை மிகவும் முக்கியமானதாகவுள்ளது. இங்கு எல்லாக்கனிகளையும் நீங்கள்புசிக்கலாம், ஆனால் நன்மை தீமை அறிந்து கொள்ளும்  விருட்சத்தின் கனிகளை மட்டும் புசிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக சொன்னார். அது மட்டுமன்றி அதைச் சாப்பிட்டால் கண்டிப்பாகச் சாகவே சாவாய் என்று கூறினார். இங்கு இந்த உடன்படிக்கையை மீறும் பொழுது மரணம் நிச்சயம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இங்கு ஆண்டவர் சொல்லாமல் கூறியுள்ள விடயம் ஒன்று மறைந்து காணப்படுகின்றது, அதாவது அந்தக்கனியை மட்டும் நீ சாப்பிடாமல் எனது உடன்படிக்கையைக் காத்து நடந்தால் உனக்கு மரணமே இல்லை என்பதாகும்.. ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். Gen 3: 22-24)

இங்கு நாம் உற்றுநோக்கும் போது மிகவும் துக்கமான சம்பவத்தை காணமுடிகிறது. அதாவது ஜீவ்விருட்சத்தின் கனியை புசிப்பதற்குப்பதிலாக தடைசெய்யப்பட்ட பழத்தை உண்டு தனக்குத்தானே மரணத்தை வருவித்த்து மட்டுமல்லாமல் பரம்பரைக்கே மரணத்தை வருவித்துக் கொண்டார்கள். அதாவது முதலில் அவர்களுக்கு ஏற்பட்டது ஆவிக்குரிய மரணமாகும். அதன் விளைவு கர்த்தருடைய ஆவிக்கும் இவர்களுடைய ஆவிக்குமிடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இன்னும் விளக்கமாக கூறுவதானால் மனிதனுக்கு ஆண்டவரால்கொடுக்கப்பட்ட ஜீவ ஆத்துமாவின் ஒருபகுதியாகிய ஆவியின் செயற்பாடு அணைந்து போயிற்று .பாவம் ஆவியின் செயற்பாட்டை செயலிழக்கச் செய்யும். அதுமட்டுமல்லாமல் அசுத்த ஆவியின் செயற்பாட்டை உள்வாங்க சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆகவே உடன்படிக்கைகளை மீறாமல் வாழ முயற்சி செய்வோம்.

உடன்படிக்கைமேற்கொள்ளப்பட்டிருந்தால் கிடைத்திருக்கும் நன்மை:
   1 . மரணம் ஏற்பட்டிருக்காது.. நித்திய ஜீவன் ஏற்பட்டிருக்கும்
  1. 2.      ஏதேன்  தோட்டத்திலிருந்துவெளியேற்றப்பட்டிருக்கமாட்டார்கள்.
  2. 3.      பாவம் அற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்திருப்போம்.
  3. 4.      அனுதினமும் தேவனுடன் பேசிக் கொண்டிருந்திருப்போம்.

உடன்படிக்கை முறிவடைந்த்தால் ஏற்பட்ட தீமை  .
  1. 1.      பாவம் ஏற்பட்டது
  2. 2.      ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டமை.
  3. 3.      தேவனுக்கும் மனிதனுக்குமிடையில் தொடர்பற்ற நிலை.
  4. 4.      பிசாசுடன் மனிதனுக்கு தொடர்புகள்  ஏற்பட்டமை.
ஆதாமுடனான உடன்படிக்கை.மீறப்பட்டதனால் ஏற்பட்ட விளைவு.(Gen. 3:14–19)
ஆதாம் உடன்படிக்கையை ஏதேன் தோட்டத்தில் மீறியதனால்
சாபம் கொட்கப்பட்டது
  • வீழ்ச்சிக்குப்பிற்பாடு  கர்த்தர் பழையபாம்பை சபித்தார்,
  • அத்துடன் பாம்பிற்கும் ஏவாளுக்குமிடையில் பகையை உண்டாக்கினார்.
  • அத்துடன் பாம்பிற்கும் கிறிஸ்துவிற்குமிடையில் பகையை உண்டாக்கினார். ( ஸ்திரியின் வித்து கிறிஸ்துவாகும்)
  • சாத்தான் கிறிஸ்துவை காயப்படுத்துவான் என்றும் கிறிஸ்து பாம்பை அழித்துப் போடுவார் என்றும் சாபம் வந்தது.
  • பெண்கள் கணவனின் ஆளுகைக்குள் வருவார்கள் என்றும் பிள்ளை பெறும் போது வேதனையை அனுபவிப்பார்கள் என்றும் சாபமிடப்பட்டது.
  • பூமியான சபிக்கப்பட்டது பயிரிடும் காலங்களில் களைகளின் தொல்லையை அனுபவிப்பான் என்றும் கட்டளையிடப்பட்டது.
  • அவன் மரணமடையும்வரை நெற்றிவியர்வை சிந்தி வாழ்வான் என்றும் கட்டளையிடப்பட்டது.




மேற்கூறிய அத்தனை சாபஉடன்படிக்கைகளும் ஆதாம் உடன்படிக்கையை மீறியதனால் ஏற்பட்ட சாப உடன்படிக்கையாகும். அதாவது ஒவ்வொரு உடன்படிக்கைகளைமீறுதல்களுக்குப் பின்னால் அவை சாபத்தைக் கொண்டுவரும் என்பதை எம்மால் நன்கு உணரக்கூடியதாகவேயுள்ளது. மிகுந்த அவதானத்துடன் உடன்படிக்கைகளைக்  காத்துக் கொள்வோம்.

  1. நோவாவுன் செய்த உடன்படிக்கை (Gen. 8:20–9:27)
  • ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிற்பாடு ஜனங்கள் பாவம்செய்தபடியால் கர்த்தர் மனுஷனை உண்டாக்கியதற்காக மனஸ்தாப்ப்பட்டார். அதன்பயனாக நோவா என்கிறவரின் குடும்பத்தைத்தவிர மிகுதியானவர்களை உலகத்திலிருந்து அழித்துவிட முடிவு செய்து உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழித்தார்.
  • பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
  • உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
  • இனி மாம்சமானவைகளெல்லாம்ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவ தில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப் பிரளயம் உண்டாவதில்லை யென்றும், உங்களோடே என் உடன் படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவ ஜந்துக்களுக்கும்,
  •  நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடை யாளமாக: நான் என் வானவில்லை மேகத்தில் வைத்தேன்;
  • அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
  •  அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.
இங்கு ஜலப்பிரளயத்தினால் மக்களை அழித்த்தைக்குறித்து அவர் மனதில் சஞ்சலம் கொள்வது போல ஒருதேற்றத்தை எம்மால் அவதானிக்க முடிகிறது. மனிதனின் பாவச் செயல்களை ஏற்றுக் கொள்ளமுடியாமலே அவர்கோபங் கொண்டு மனிதவர்க்கம் அனைத்தையும் அழித்தார். நோவாவின் குடும்பத்திற்கூடாகவரும் சந்ததியாவது தன்னை ஆராதிக்கும் என்றும் தன்னோடு தொடர்பில் இருக்கும் என்றும் நம்பினார். அதுமட்டுமல்ல இந்தக்குடும்த்தினூடாகவே பிந்தின ஆதாமாகிய இயேசுவும் வரவேண்டியிருந்தபடியால் அவர் நோவா குடும்பத்தைக் காப்பாற்றினார்.
  • நோவாவிற்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். அதில் காம் என்பவனின் தவறாநடத்தைன காரணமாகச் சபிக்கப்பட்டான். அவன் சேம், யாபெத் என்பவர்களுக்கு அடிமையாகவே ஜீவித்தான்.
  • சேமுடைய சந்ததியில்மேசிய பிறப்பதற்கான கிருபையைக் கொடுத்தார்.
  • யாபேத் விருத்தியாகி சேமுடைய கூடாரங்களில் வாழ்ந்து வந்தான்.
இங்கும் தன்னை ஆராதிக்க மறந்த மக்களையேதேவன் பார்க்கிறார். தன்னை ஆராதிக்கும் படி எதிர்பார்த்தவர்கள் ஒருவரையும்  காணவில்லை. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும்,நெருப்பையும் வணங்கும் மக்களையே அவரால் காணமுடிந்த்து. உருவாக்கிய தேவனை மறந்து அவரால் உருவாக்கப்பட்டவற்றை வணங்குபவர்களையே அவரால் காணமுடிந்தது.

  1. ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை. (Gen. 12:1–3; 13:14–17; 15:1–8; 17:1–8)
ஆபிரகாம் தன்னை வணங்கவேண்டும் எனபதற்காகவும் அவர்மூலமாக தன்னை ஆராதிக்கும் ஜாதியொன்றை உருவாக்கவேண்டும் என்பதற்காகவும், அந்த ஜாதியின்மூலம் உலகத்திலுள்ள மற்ற ஜாதிகளெல்லாம் தானே மெய்யானதேவன் என்பதை அறிந்து தன்னை ஆராதிக்க வேண்டும் என்பதற்காகவுமே ஆபிரகாமை ஆண்டவர் தன் விருப்பத்தின்படி தெரிவு செய்தார். ஆபிராம்  ஊர் என்னம் தேசத்தில் வாழ்நத போது அவனது தனப்பன் சந்திரவணக்கம் (moon god)செய்பவராக இருந்.தார். அப்படியிருந்தும் ஆண்டவர் அந்தக்குடும்பத்தைத் தன்னை ஆராதிக்கும்படி ஆண்டவர் தெரிவு செய்தார். உன்னையும் அப்படியே ஆண்டவர் தெரிவு செய்துள்ளார் என்பதை  மறந்து போகாதே , அவருக்கு உண்மையாயிருந்து  ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வாயாக. ​ ​ ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை  நிபந்தனையற்றது. ஏனெனில் உடன்படிக்கைக்கா பலியிடப்பட்டபோது கர்த்தர் தாமே தனிமையாக  அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோனார். அங்கு ஆபிரகாம் பங்குபற்றவில்லை. அதனாலே இந்த உடன் படிக்கை நிபந்தனைகள் ஏதும் அற்றது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த உடன்படிக்கை கீழே காணப்படும் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது.




  1. 1.       நீ ஆசீர்வாதமாகவிருப்பான் 12:2
  2. உன்பேரைப் பெருமைப் படுத்துவேன் 12:2
  3. நீ மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவிருப்பாய்(12:2); எல்லாதேசத்தா ருக்கும் ஆசீர்வாதமாயிருப்பாய்(12:3);
  4. உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன், சபிக்கிறவர்களைச் சபிப்பேன். 12:3);

  1. கானான் தேசத்தை உனக்குத் தருவேன்( கானான்—பின்பு இஸ்ரவேல் பின்னபு—பாலஸ்தீனம்) 13:14, 15, 17);
    1. 6.      உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; 13:16; நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். (17:4 )  உன் சந்ததி வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாக  இருக்கும் என்றார். 15:5 உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணுவேன் 17:6  உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன் 17:6 உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.  17:6
    2. 7.      உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பேன். 17:7

நீயும் ஆண்டவரால் அழைக்கப்பட்டு அவருக்கு உண்மையாய் வாழ்ந்துவந்தால் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத் தத்தங்கள் யாவும் உனக்குரியதாக ஆக்கிக் கொள்ள முடியும்.
ஆபிராம் என்பதன் பொருள் தகப்பன் என்பதாகும் ஆபிரகாம் என்று தேவன் அவரது பெயரை மாற்றினார். அபிரகாம் என்பதன் பொருள் பல ஜாதிகளுக்குத் தகப்பன் என்பதாகும். கிறிஸ்துவை எற்றுக் கொண்டபின்பும் உன்னுடையபெரும் இவ்வாறு மாற்றப்படல் வேண்டும்.
  1. மோசேயுடன் செய்த உடன்படிக்கை. (Ex. 19:5; 20:1–31:18).
இந்த உடன்படிக்கை மிகவும் விசாலமானது. இதற்குள் 10 கற்பனைகளும் அடங்குகின்றன.கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளும், அயலவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் விளக்கிக் கூறப்படுகின்றன. (Ex. 20:1–26); சமூகவாழ்க்கைக்கான அனேக சட்டதிட்டங்கள்கொடுக்கப்பட்டுள்ள்ன. (Ex. 21:1–24:11); சமயவாழ்விற்கான விபரமான சட்டங்கள் இதில் அடங்குகின்றன. (Ex. 24:12–31:18).இவைகள் அனைத்தும் இஸ்ரவேல் தேசத்தாருக்குக் கொடுக்கப்பட்டதேயன்றி புறஜாதிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. இது ஒரு நிபந் தனையுடனான உடன்படிக்கையாகும், மனிதர்களின் கீழ்படில் அவசியமானதாகும், அதனால் இது மாமிசத்தில் பலவீனமானது (றொ. 8: 3)புதிய ஏற்பாட்டில் ( ஓய்வுநாளைத்தவிர )ஒன்பது கட்டளைகளும் திருப்பிக்கூறப்பட்டுள்ளன.

கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் அயலவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும்
1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். ” (Ex. 20:3).  6. “கொலை செய்யாதிருப்பாயாக. ” (Ex. 20:13). 
2. “சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; ” (Ex. 20:4).  7. “You shall not commit adultery” (Ex. 20:14). விபசாரம் செய்யாதிருப்பாயாக. 
3. “தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக;. ” (Ex. 20:7).  8. “You shall not steal” (Ex. 20:15). களவு செய்யாதிருப்பாயாக. 
4ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;” (Ex. 20:8).  9. “You shall not bear false witness against your neighbor” (Ex. 20:16).பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக
5“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” . (Ex. 20:12).  10.“பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக”; (Ex. 20:17).


.
                                      பாலஸ்தின உடன்படிக்கை .(Deut. 30:1–9)
இஸ்ரவேலர்கள் கர்த்தரை மறந்து அந்நியதெய்வங்களை நமஸ்கரித்து வந்தபடியால் அவர்கள்மீது தேவகோபம் ஏற்பட்டது. அதன்காரணமாக வேறுதேசங்களுக்குள் சிதறடித்தார்.
  1. அப்பொழுது, அவர்கள் தங்கள் இருதயத்திலே சிந்தனைசெய்து, தங்கள்  தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும்  கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்தால் உன் தேவனும் கர்த்தருமாகிய நான் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவேன்
  2.   உங்கள்  இருதயத்தையும் உங்கள் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணுங்கள்.
  3. அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும்படி உங்கள்  தேவனாகிய கர்த்தர்கிய நான் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வேன்
          கர்த்தர் தாவீதுடன் ஏற்படித்திய உடன்படிக்கை(2 Sam. 7:5–19)

  1. 1.      நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
  2. 2.      அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
  3. 3.      நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
  4. 4.      உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
  5. 5.      உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்  என்று சொல்லச்சொன்னார்.

இந்த இராஜ்ஜியம் மட்டுமல்ல , எப்பொழுதும் உனது சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சந்த்தியை உனக்கு உண்டாக்குவேன். இது ஒரு நிபந்தனையற்ற உடன்படிக்கையாகும். தாவீதுடைய கீழ்ப்படிதலினாலோ அல்லது அவருடைய நீதியினாலோ ஏற்படுவதல்ல. இது ஆதாமுடன்செய்து கொண்ட உடன்இடிக்கையின் ஒரு பகுதியாகும்.அதாவது “ஸ்திரீயின் வித்து உன் தலையை நசுக்கும்” என்ற வாக்குறுதியின் பொருட்டு .மேசியா வெளிப்படுவதற்கான ஒரு வழியாகும்.கிறிஸ்து தாவீதின் வம்சத்தில் பிறந்தார்.( மத் 1: 1-16)
புதிய உடன்படிக்கை (எரே. 31:31–34; எபி. 8:7–12; லூக் 22:20)
இஸ்ரவேல் மக்களோடும், யூதா மக்களோடும் புதிய உடண்படிக்கையானது தெளிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. (Jer 31:31 ) இது எதிர்காலத்திற்குரிய உடன்படிக்கையாகும். இது மோசே யுடன்  செய்த உடன்படிக்கையைப்போல நிபந்தனையுள்ள உடன்படிக்கையல்ல.இங்கு நானே உங்களைச் சுத்தமாக்குவேன் என்றும் உங்கள் உள்ளத்தில் என் பரிசுத்த ஆவியை வைப்பேன் என்றும் என் கட்டளைகளில் உங்களை நடக்கப் பண்ணுவேன் என்றும் தெளிவாக்க் கூறுகி ன்றார். ( எசேக் 36:-25-27) நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிரு ப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.( எரே. 31: 33) நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.( எரே: 31: 34) இது என்றென்றைக்கும் நீடத்திருக்கும்(எரே.31:35-37) புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வார்கள். சபையானது புதிய ஏற்பாட்டின் உடன்படிக்கையுடன் தொடர்புபட்டது என்பதை கர்த்தருடைய இராப்போஜனத்தில் யேசு போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத் தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். இங்கு இந்தப் பாத்திரம் என்பது புதிய உடன்படிக்கை பிரதிபலிப்பதாகவும், அவருடைய இரத்தத்தினால் உறுதி செய்யப்படுவதாகவும் காணப்படுகிறது.


.
நன்றி

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

வெற்றி தந்த இயேசு கிறித்து

சிலுவைப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது! ஒருநாள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசர் பிலிப் அகஸ்டின் தனது படைவீரர்களை அழைத்தார். தன் கிரீடத்தைக் கழற்றி ஒரு மேஜை மேல் வைத்தார். அதன்மேல் "பாத்திரவானுக்கு' என்று எழுதி வைத்தார்.
இதைக்கண்ட வீரர்கள் ஏதும் புரியாமல் நின்றனர்.
அவர்களிடையே பேசிய ராஜா,""வீரர்களே! இந்த கிரீடத்தைச் சூட்டிக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. யாரொருவர் நம் தேசத்தைக் காக்க, இந்தப்போரில் கடுமையாகப் போரிட்டு வெற்றிக்கு காரணமாக இருக்கிறாரோ அவரே இதை எடுத்துக் கொள்ளலாம்.. ஆம்...இந்த தேசத்தின் ராஜாவாக அவரே இருப்பார்,'' என்று அறிவித்தார்.
இதைக்கேட்ட வீரர்கள் ஆனந்தமடைந்தார்கள்.
ஒவ்வொரு வீரனும் கடும் போரில் ஈடுபட்டனர். அதுவரை எதிரிகளிடம் பின்வாங்கியவர்கள் கூட ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். என்னதான் வீரர்கள் கடுமையாகப் போரிட்டாலும், பிலிப் அகஸ்டின் எதிரிகளுடன் செய்த சாகசங்களின் முன் அவர்களது வீரச்செயல் ஈடுபடவில்லை. இறுதியில், ராஜாவே வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அவரை அழைத்த வீரர்கள், தங்கள் கையாலேயே அவருக்கு கிரீடத்தை சூட்டினர்.
இதுபோலத்தான் இயேசுகிறிஸ்துவும்! ராஜாவாக இருந்த பிலிப் அகஸ்டின் தன் பதவியைத் துறந்துவிட்டு மீண்டும் போரிட்டு நிரந்தர ராஜாவாக மாறியது போல், இயேசுகிறிஸ்துவும் நமக்கு ராஜாவாக இருக்கிறார். இம்மையிலும் மறுமையிலும் நித்திய வாழ்விலும் நம் வாழ்வை நடத்த காரணமாக அவர் உள்ளார். அவர் கல்வாரிப்போரில் சாத்தானை எதிர்த்து வெற்றி கண்டார். இதன்மூலம் நம்மையும் வெற்றி பெறச்செய்தார். நம்மை பரிசுத்தமாக்கினார்.
பரலோக ராஜ்யத்திற்கு தகுதியுள்ளவர்களாகச் செய்தார். நாம் அவருக்கு செலுத்தும் துதியே அவர் விரும்பும் கிரீடமாயிருக்கிறது.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வேத ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை இணையத்தில் 24 மணி நேரமும் கேட்க -Tamil Bible Study, Tamil Songs, Tamil Music, Free MP3 Download - Trans World Radio India:

வேகமான இணைய இணைப்பு இருந்தால் Flash Player -ல் கேட்கவும் .

இல்லை என்றால் Switch HTML Style என்பதை கிளிக் செய்யவும் ..

நன்றி ...

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

You may like also

Categories

Popular