Tamil christian song ,video songs ,message ,and more

புதன், 29 ஜூன், 2011

ஓசன்னா-14 ஜாலி ஆபிரகாம்(Jollee abraham Osanna-14)

சகோ.ஜாலி ஆபிரகாம் பாடிய ஓசன்னா-14
கேட்டு  பயன்  பெறுங்கள் .
நல்லவரே இயேசு
எந்தன் ஜெபவேளை
என் நேசர் இயேசுவோடு
மகிமை மாட்சிமை
ஒலி தரும் தீபங்கள்
நெஞ்சிலும் நாவிலும்
எந்தன் உள்ளம்
உமது கிருபை
கர்த்தர் நல்லவர்

ஞாயிறு, 26 ஜூன், 2011

துன்பம் தொடர்கதையல்ல!

தாவீது ராஜா பல பிரச்னைகளுடன் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பொற்கொல்லர் வந்து, ""ராஜாவே! ஏதாவது நகை செய்ய வேண்டுமா?'' என்றார்.
எரிச்சலில் இருந்த ராஜா, ""போ, எனக்கு ஒரு மோதிரம் செய்து வா, நான் துக்கத்தோடு இருக்கும் சமயங்களில் அதைப் பார்த்தால் மகிழ்ச்சி பொங்க வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்கும்போது அதைப் பார்த்தால் துக்கப்பட வேண்டும். அந்தளவுக்கு மோதிரத்தின் அமைப்பு இருக்க வேண்டும்,'' என்று சொல்லி அனுப்பி விட்டார்.
பொற்கொல்லர் திகைத்து விட்டார். அரசன் ஏதோ சிக்கலில் இருக்கும் சமயத்தில் நகை அனுமதி கேட்க வந்தது தவறாகப் போய் விட்டதே. இப்படி ஒரு மோதிரத்தை எப்படி செய்வது என திகைத்தார். செய்யாவிட்டால் உயிர் போய்விடுமே என அழுதார்.
அதைக்கண்ட சாலொமோன் என்ற சிறுவன், ""பொற்கொல்லரே! இதற்காகவா அழுகிறீர்கள்! சாதாரண ஒரு மோதிரம் செய்து, அதில் ""இது நிலைக்காது கடந்து போகும்'' என்று எழுதி ராஜாவிடம் கொடுத்து விடுங்கள். பிறகு நடப்பதைப் பாருங்கள்,'' என்றான்.
பொற்கொல்லரும் அதே போல மோதிரத்துடன் சென்றார். அன்றும் ராஜா துக்கத்தில் இருந்தார்.
மோதிரத்தை வாங்கிய அவர், அதில் எழுதியிருந்தை வாசித்தார்.
""ஆஹா... அருமையான வாசகம்... அப்படியானால், நமது துக்கம் கடந்து போய்விடும்,'' என்று தன்னைத் தேற்றிக்கொண்டார். மிகவும் ஆறுதலடைந்தார். சந்தோஷப்பட்டார்.
ஆம்...எந்த துக்கத்தையும் கர்த்தர் நீடிக்க விடமாட்டார். காயப்படுத்தியவருக்கும் காயம் கட்டுகிற தேவன் அல்லவா அவர்!
""இனி நீ அழுது கொண்டிராய். உன் கூப்பிடுதலின் சத்தத்திற்கு அவர் உருக்கமாய் இரங்கி அதை உடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார் (ஏசா.31:19) என்ற பைபிள் வசனம் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிரச்னைகள் வந்தால் அழாதீர்கள். அவரை அழையுங்கள், உருக்கமாக ஜெபியுங்கள். அவர் நம் குறைகளைத் தீர்ப்பார்.

தமிழ் கிறிஸ்தவ வசனங்கள் (TAMIL CHRISTIAN WALLPAPERS)

CLICK EN LARGE
கிளிக் செய்தால் படம் பெரிதாகும் 
உங்கள் கருத்துக்களை கமேண்டில் குறிப்பிடுங்கள் .
நன்றி


வெள்ளி, 24 ஜூன், 2011

கேள்வி பதில்கள் 2 - பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா?

கேள்வி: பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா?

பதில்:
“அடிப்படையிலே நான் நல்ல மனிதன், ஆகவே, நான் பரலோகம் செல்வேன்” " நான் சில தீய காரியங்களை செய்திருந்தாலும், அதைவிட அதிகமாக நல்லகாரியங்களை நான் செய்கிறபடியால், நநன் பரலோகம் செல்வேன்." “ நான் வேதாகமத்தின்படி வாழவில்லையென்பதற்காக, தேவன் என்னை நரகத்திற்கு அனுப்பமாட்டார். காலம் மாறிவிட்டது!” உண்மையிலேயே மிகவும் மோசமானவர்களான குழந்தைகளுக்கு எதிராக பாலியல்ரீதியாக குற்றம்செய்கிறவர்கள், கொலைகாரர்கள் போன்றவர்கள்தான் நரகத்திற்கு செல்வார்கள்.”


இவைகள் ஜனங்களிடத்திலே, காணப்படும் பொதுவான விளக்கங்களா ஆகும். ஆனால் உண்மையென்னவெனில் இவைகள் அனைத்தும் பொய்யானவைகள். உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் நம் சிந்தையில் இப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கிறான். சாத்தானும், அவனுடைய வழிகளைப் பின்பற்றுகிற எவரும் தேவனுக்கு பகைவர்கள் (1பேதுரு 5:8). சாத்தான் ஒரு ஏமாற்றுக்காரன், அவன் எப்பொழுதுமே தன்னை நல்லவனாக காண்பிக்கிறான் (2கொரிந்தியர் 11:14). ஆனால் தேவனைச் சார்ந்திராத மனங்கள் அனைத்தின் மீதும் அவனுக்கு ஆளுகை உண்டு. "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." (2கொரிந்தியர் 4:4).

தேவன் சிறிய பாவங்களைக் கண்டு கொள்வதில்லை அல்லது நரகமானது மிகவும் மோசமானவர்களுக்கே நரகம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவது ஒரு பொய் ஆகும். "ஒரு சிறிய பொய்" உட்பட எல்லாப் பாவமும் தேவனைவிட்டு நம்மை பிரிக்கிறது. எல்லாரும் பாவஞ்செய்து தாங்களாகவே சொந்த பிரயாசத்தினால் பரலோகத்தில் பிரவேசிக்கத்தக்க அளவில் நல்லவர்களாக இல்லை(ரோமர் 3:23). பரலோகத்திற்குள் செல்வது என்பது நன்மையானதைக் காட்டிலும், தீமை குறைந்த அளவில் இருப்பதை அடிப்படையாக வைத்து நடைபெறுகிற ஒரு காரியம் அல்ல. "(இரட்சிப்பு) கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது அப்படியல்லவென்றால் கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது (ரோமர் 11:6). பரலோகத்தில் செல்வதற்கான வழியைப் பெற நாம் எதுவும் செய்ய முடியாது(தீத்து. 3:5).

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்@ கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது@ அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்" (மத்தேயு 7:13). தேவனை நம்புவது என்பது மிகவும் குறைவாக இருக்கிற ஒரு கலாச்சாரத்தில் எல்லோரும் பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட, தேவன் அதை மன்னிக்கமாட்டார். "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்;ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்" (எபேசியர். 2:2).

தேவன் உலகத்தை சிருஷ்டித்த பொழுது, அது பூரணமானதாகவும், நல்லதாகவும் இருந்தது. பின்பு அவர்ஆதாமையும், ஏவாளையும் சிருஷ்டித்தார். மேலும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிவதோ? அல்லது தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுவதோ? அல்லது இல்லையோ என்ற தெரிந்துகொள்ளுதலாகிய சுய சித்தத்தை, அவர்களுக்கு தேவன் கொடுத்தார். ஆனால் அவர்கள் தேவனுக்கு கீழ்படியக் கூடாதபடிக்கு சாத்தானால் சோதனைக்குட்படுத்தப்பட்டு, பாவம் செய்தார்கள். இது அவர்கள்( அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொருவரும்) தேவனோடு ஒரு நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளக் கூடிய நிலையிலிருந்து பிரித்துவிட்டது. தேவன் பரிபூரணமுள்ளவர், அவர் பரிசுத்தமானவர். ஆகவே பாவத்தை நியாயந்தீர்த்தே ஆக வேண்டும். நாம் பாவிகளாயிருப்பதினாலே நம் சுய முயற்சியினால் நாம் தேவனுடன் நம்மை சீர்பொருந்தச் செய்யமுடியாது. ஆகவே நாம் பரலோகத்தில் தேவனுடன் இணைக்கப்படும்படியாக ஒரு வழியை உண்டாக்கினர். "தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனையடையும்படி, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16). " பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ,நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்(ரோமர் 6:23). நாம் அழியாதபடி, நமக்கு வழியைக் காண்பிக்கும்படி இயேசு கிறிஸ்து பிறந்து அவர் தாமே நமது பாவங்களுக்காக மரித்தார். அவர் தாம் மரித்து மூன்று நாட்களுக்குப் பிறகு கல்லறையிலிருந்து உயிர்த்தெழும்பி, மரணத்தின் மீதான தனது வெற்றியை நிரூபித்தார். ஜெயத்தை பெற்றுக் கொண்டதற்கு (ரோமர் 4:25). தேவனுக்கும், நமக்கும் நடுவாக இருந்த பிளவை கிறிஸ்து இணைத்தார். நாம் விசுவாசித்தால் மாத்திரமே நாம் அவருடன் ஒரு தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்க முடியும்

“ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” (யோவான் 17:3). அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள், சாத்தானும் கூட விசுவாசிக்கிறான். இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு, மனந்திரும்பி, பாவங்களைவிட்டு விலகி அவரோடு ஒரு தனிப்பட்ட உறவை உருவாக்கி, அவரைப் பின்பற்ற வேண்டும். நாம் செய்கிற மற்றும் நம்மிடம் இருக்கிற அனைத்துக் காரியங்களிலும் இயேசு கிறிஸ்துவை நாம் நம்ப வேண்டும். "அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை" (ரோமர் 3:22).கிறிஸ்துவின் மூலமாகவேயன்றி இரட்சிப்பு இல்லையென்பதை வேதாகமம் தெளிவாக நமக்கு போதிக்கிறது. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று யோவான் 14:6-ல் இயேசு கிறிஸ்து: சொல்லியிருக்கிறார்.

இரட்சிப்புக்கான ஒரே வழி. இயேசு கிறிஸ்துவே, ஏனென்றால் அவஒருவர் மாத்திரமே நமது பாவங்களுக்கான கிரயத்தை செலுத்த முடியும் (ரோமர் 6:23). வேறு எந்த மதமும், பாவத்தின் ஆழம் அல்லது ஆபத்தைக் குறித்தும், அதின் விளைவைக் குறித்தும் போதிப்பதில்லை. இயேசு கிறிஸ்து மாத்திரமே தரக் கூடிய பாவத்திற்கான நித்திய விலைக்கிரயத்தை, வேறு எந்த ஒரு மதமும் அருளுவதில்லை. மதத்தை தோற்றுவித்தவர்களில் எவரும் தேவனாக இருந்து மனிதனானதில்லை (யோவான் 1:1, 14). நம் கடனைச் செலுத்தி தீர்க்கும்படி இயேசு தேவனாக இருக்கவேண்டியதாயிருந்தது. அவர் மரிக்கும் படி ஒரு மனிதனாக இருக்க வேண்டியதாயிருந்தது. இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. "இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" (அப்போஸ்தலர் 4:12).
கேள்வி: மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறீக்கிறது?

பதில்:
மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறிக்கிறது? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வேதாகமத்தின் சிறந்த பகுதி யோவான் 3:1-21 ஆகும். ஆலோசனை சங்கத்தில் ஒரு உறுப்பினராகவும்(யூதர்களை ஆளுகை செய்பவர்களில் ஒருவன்), பிரபலமான பரிசேயராகவும் இருந்த நிக்கோதேமுவிடம் இயேசு கிறிஸ்து பேசிக் கொண்டிருந்தார். நிக்கோதேமு இராத்திரி வேளையிலே இயேசுவிடம் வந்தான். இயேசுவிடத்தில் கேட்கும்படி நிக்கோதேமுவிடம் கேள்விகள் இருந்தன.


இயேசு கிறிஸ்து நிக்கோதேமுவிடம் பேசும்பொழுது, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்கு சொல்கிறேன்” என்று சொன்னார். “அதற்கு நிக்கோதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படி பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம் தரம் பிரவேசித்து, பிறக்கக்கூடுமோ? என்றான். இயேசு பிரதியுத்தரமாக, ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டானென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நான் உனக்கு சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்” என்றார். (யோவான் 3:3-7)

‘மறுபடியும் பிறத்தல்’ என்கிற பதம் எழுத்தின்படி ‘மேலிருந்து பிறத்தல்" என்பதைக் குறிக்கிறது. நிக்கோதேமுவுக்கு ஒரு உண்மையான தேவையிருந்தது. ஆவிக்குரிய மாற்றம் எனப்படும் இருதய மாற்றம் அவனுக்கு தேவையாயிருந்தது. புதுப்பிறப்பு, மறுபடியும் பிறந்தவர்களாக இருத்தல் என்பது விசுவாசிக்கிற ஒரு நபரிடம் நித்திய வாழ்வு உட்செலுத்தபடும் தேவனுடைய ஒரு செயல் ஆகும் (2கொரிந்தியர் 5:17, தீத்து. 3:5, 2பேதுரு 1:3, 1யோவான் 2:29; 3:9; 4:7; 5:1-4,18). இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உள்ள விசுவாசத்தின் மூலமாக “தேவனுடைய பிள்ளைகள் ஆகுதல்” என்கிற கருத்தையும் "மறுபடிப் பிறத்தல்" என்பது குறிப்பதாக யோவான் 1:12,13 கூறுகிறது.

"ஒருவன் ஏன் மறுபடியும் பிறப்பது அவசியமானதாக இருக்கிறது?" என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இயற்கையாகவே வரும். “அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்த்தார்” என்று எபேசியர் 2:1ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். ரோமருக்கு எழுதும்போது, ரோமர் 3:23ல் அப்போஸ்தலன் எழுதியதாவது, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்.” ஆகவே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படிக்கும், தேவனோடு ஒரு உறவைப் கொள்ளும்படிக்கும், மறுபடியும் பிறத்தல் ஒரு நபருக்கு அவசியமாகிறது.

இது எப்படி நடக்கும்? “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” என்று எபேசியர் 2:8,9 ஆகிய வசனங்கள் குறிப்பிடுகிறது.. ஒருவன் "இரட்சிக்கப்படும்பொழுது", அவன் அல்லது அவள் மறுபடியும் பிறக்கின்றனர், ஆவியில் புதுப்பிக்கப்படுகின்றனர். மேலும் புது பிறப்பின் உரிமையினால், இப்போது தேவனுடைய ஒரு பிள்ளையாக இருக்கின்றனர். சிலுவையில் தாம் மரித்தபோது பாவத்திற்கான விலைக்கிரயத்தை செலுத்தி தீர்த்த ஒருவரகிய, இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது, என்பது ஆவிக்குரியப் பிரகாரமாக "மறுபடியும் பிறத்தல்" ஐக் குறிக்கிறது. “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்” (2கொரிந்தியர் 5:17).

இதுவரை இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசியாமல் இருந்திருந்தால், ஆவியானவர் உங்கள் இருதயங்களில், இப்பொழுது ஏவினால் அதற்கு நீங்கள் ஒப்புக் கொடுப்பீர்களா? நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. மனந்திரும்புதலுக்கான ஜெபத்தைச் செய்து, கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இன்று மாறுவீர்ககளா? "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும், தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்" (யோவான் 1:12, 13).

இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, மறுபடியும் பிறக்க விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். நான் மன்னிக்கப்பட முடியும். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

கேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது?

பதில்:
துரித உணவு விடுதிகள் நாம் விரும்புகிறபடியே நமது உணவை வாங்க அனுமதிப்பதினால் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சில காபி கடைகள் தங்களிடம் நூற்றுக்கும் அதிகமான விதங்களில் மற்றும் (மணங்களில்) வாசனைகளில் காபி தருகிறோம் என்று சொல்லி பெருமைபட்டு கொள்கின்றனர். அப்படியே வீடுகளையும், கார்களையும் வாங்கும் போதும் நாம் விரும்புகிறபடி நாம் நமக்கு ஏற்ற விதத்தில் கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தே வாங்குகிறோம். உங்கள் சொந்த தேவைகள் மற்றும் விருப்பத்திற்குத்தக்கதாக நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


அதுபோல உங்களுக்கு சரியானதாக இருக்கும் ஒரு மார்க்கத்தைக் குறித்து என்ன? குற்றங்கள் இல்லாத, நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காத மற்றூம் அதைச் செய் இதைச் செய் என்று கூறி நம்மை அதிகம் தொந்தரவிபடுத்தாத மார்க்கத்தை எப்படி கண்டுபிடிப்பது? நான் குறிப்பிட்டபடி பல மதங்கள் உள்ளன. ஆனால் மதமானது ஐஸ்கிரீமில் நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை வாங்குவது போன்ற ஒரு காரியமா?

எத்தனையோ குரல்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. சே, முகமது அல்லது கன்பூசியஸ், புத்தர், சார்லஸ் டேஸ் ரசல் அல்லது ஜோசப் சுமித் என்பவர்களுக்கு மேலாக இயேசுவை ஏன் ஒருவர் கருதக் வேண்டும்? மொத்தத்தில், எல்லாசாலைகளும் பரலோகத்திற்குத்தானே வழிகாட்டுகின்றன? அடிப்படையில், எல்லா மதங்களும் ஒன்றுதானே? உண்மை என்னவெனில், எப்படி எல்லா சாலைகளும் இந்தியாவிற்கு நேராக செல்வதில்லையோ, அதுபோல எல்லா மதங்களும் பரலோகத்திற்கு வழிகாட்டுவது இல்லை.

இயேசுகிறிஸ்து மாத்திரமே மரணத்தை ஜெயித்தவராகையால், இயேசு மாத்திரமே தேவன் கொடுத்த அதிகாரத்தோடு பேசுகிறார் முகமது, கன்பூசியஸ், மற்றவர்கள் இந்த நாள்வரை கல்லறையிலேயே இருக்கிறார்கள். ஆனால் இயேசுவோ, ரோமர்களின் கொடூரமான சிலுவையில் மரித்து, மூன்று நாட்களுக்கு பின்பு, தமது சொந்த வல்லமையினாலே உயிர்த்து கல்லறையை விட்டு வெளியே வந்தார். மரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நம் கவனத்திற்குரியவர்கள். மரணத்தின் மீது வல்லமை உடையவர்கள் எவரும் சொல்பவை கேட்கப்படத்தக்கவை.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஆதரிக்கும் சான்றுகள் மிகவும் அதிகமானவையாக இருக்கின்றன. முதலாவதாக, உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்கூடாகக் கண்ட 500 பேருக்கும் அதிகமான சாட்சிகள் இருந்தனர். அதாவது ஏராளமான நேரடி சாட்சிகள் இருந்தன. 500பேரின் குரல்களை நாம் ஒதுக்கிதள்ள முடியாது. காலியான கல்லறையும் ஒரு சாட்சியாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் மரித்து போன சிதைந்த நிலையில் உள்ள சடலத்தைக் காண்பித்து உயிர்த்தெழுதலைக்குறித்த அனைத்து பேச்சுக்களையும் இயேசுவின் எதிரிகள் எளிதில் நிறுத்தியிருக்கலாம், ஆனால் அவ்வாறு காண்பிக்க அவர்களிடம் அவரின் சடலம் இல்லை. கல்லறை காலியாக இருந்தது. சீடர்கள் அவருடைய சரீரத்தை களவாடி இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அபடிப்பட்ட ஒரு நிலையை தவிர்க்கும்படி முனெச்சரிக்கையாக, இயேசுகிறிஸ்துவின் கல்லறை மூன்று நாட்களும் இராணுவவீரர்களால் பாதுகாக்கப்பட்டு இருந்தது. அவரது நெருங்கிய சகாக்கள் இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவுடன் பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டதைக் கருத்தில் கொள்ளும்போது, அந்த பய பீதியில் இருந்த அந்த மீனவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ வீரர்களோடு நேருக்குநேர் மோதி சடலத்தை திருடிச் செல்வது என்பது, இயலாத காரியம். அவர்களில் அனேகர் இரத்த சாட்சிகளாக மரித்தனர். ஒரு பொய்க்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திருக்க மாட்டார்கள். எளிய உண்மை என்னவெனில், இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எவரும் மறுக்க முடியாது.

மரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நாம் சொல்பவை நாம் கேட்கப்படதக்கவை. இயேசுகிறிஸ்து மரணத்தின் மேல் உள்ள தனது அதிகாரத்தை நிரூபித்து உள்ளார். ஆகவே அவர் சொல்வதை நாம் கேட்க வேண்டும். இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி நானே என்று இயேசு உரிமைப் பாராட்டினார் (யோவான்14:6). பல வழிகளில் அவர் ஒரு வழியல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவே வழி.

மேலும் இந்த இயேசு சொல்லுகிறதாவது, “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). நாம் வாழுகிற உலகம் கடினமான போராட்டம் நிறைந்த உலகம். அநேகர் காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, புண்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அப்படித்தானே? இப்போது நமக்கு என்ன தேவை? மீட்பா அல்லது சாதாரண மதமா? உயிருள்ள இரட்சகரா அல்லது செத்துப்போன "தீர்க்கதரிசிகளில்" ஒருவரா? அர்த்தமுள்ள ஒரு உறவா? அல்லது வெறுமையான சடங்காச்சாரங்களா? இயேசுவைத் தவிர தெரிந்து கொள்ளப்படத்தக்கவர் வேறு யாரும் இல்லை.

நீங்கள் மன்னிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், இயேசுவே அந்த சரியான "மதம்" (அப்போஸ்தலர் 10;:43). நீங்கள் தேவனோடு அர்த்தமுள்ள ஒரு நல்ல உறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால்,இயேசுவே அந்த சரியான "மதம்"(யோவான் 10:10). பரலோகத்தில் ஒரு நித்திய வீடு உங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இயேசுவே அந்த சரியான "மதம்" (யோவான் 3:16). உங்கள் இரட்சகராக இயேசுகிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வையுங்கள், நீங்கள் வருத்தப்படவேண்டிய மாட்டீர்கள். உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக அவரில் நம்பிகை வையுங்கள். நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.

நீங்கள் தேவனுடன் ஒரு "சரியான உறவு" வைத்துக் கொள்ள விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

கேள்வி: இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவது என்பது எதைக் குறிக்கிறது?

பதில்:
இயேசு கிறிஸ்துவை நீங்கள் உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா? இந்தக் கேள்வியை சரியாக புரிந்துகொள்ளவேண்டுமெனில், நீங்கள் முதலாவதாக "இயேசுகிறிஸ்து," "சொந்தமான," மற்றும் "இரட்சகர்" ஆகிய பதங்களைப் புரிந்து கொள்ளவேண்டும்.


இயேசு கிறிஸ்து யார்? இயேசு கிறிஸ்து ஒரு நல்ல மனிதர், மிகப்பெரிய போதகர், அல்லது தேவனுடைய தீர்க்கதரிசி என்று கூட பலர் ஒப்புக்கொள்வர். இயேசுவைக் குறித்த இந்தக் காரியங்கள் நிச்சயமாகவே உண்மையானவை, ஆனால் அவர் உண்மையில் யாராக இருக்கிறார் என்பதை இவை முழுமையாக குறிப்பிடுவதில்லை. இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன், மனித உருவில் வந்த இறைவன் என வேதாகமம் நமக்கு கூறுகிறது (யோவான் 1:1,14) நமக்கு போதிக்க, நம்மை சுகமாக்க, நம்மை சரிப்படுத்த, நம்மை மன்னிக்க மற்றும் நமக்காக மரிக்க தேவன் உலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்து தேவன், சிருஸ்டிகர் மற்றும் மாட்சிமையுள்ள ஆண்டவர் ஆவார். இந்த இயேசுவை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?

இரட்சகர் என்றால் என்ன? நமக்கு ஏன் ஒரு இரட்சகர் தேவை? நாம் எல்லாரும் பாவம் செய்தோம் என்றும் நாம் எல்லோரும் தீய செயல்களை செய்திருக்கிறோம் என்றும் வேதாகமம் நமக்கு கூறுகிறது (ரோமர் 3:10,18) நம் பாவத்தின் விளைவாக நாம் தேவகோபத்துக்கும் நியாத் தீர்ப்புக்கும் உரியவர்களானோம். முடிவிலாத அனாதி தேவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களுக்கான நீதியான தண்டனை நித்திய தண்டனையே (ரோமர் 6:23); வெளிப்படுத்தல் 20:11-15). ஆகவே தான் நமக்கு ஒரு இரட்சகர் தேவை.

இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து நமக்கு பதிலாக நம்முடைய இடத்தில் அவர் மரித்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திற்கான விலைமதிப்பற்ற கிரயம் ஆகும் (2கொரிந்தியர் 5:21) நமது பாவங்களுக்கான தண்டனையை இயேசு தீர்த்தார் (ரோமர் 5:8). நாம் செலுத்தாமலிருப்பதற்காக இயேசு அதை செலுத்தி தீர்த்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க போதுமானதாயிருந்தது என்று அவருடைய உயிர்த்தெழுதல் நமக்கு நிருபிக்கிறது ஆகவேதான் இயேசு ஒருவர் மாத்திரமே இரட்சகர் ஆக இருக்கிறார் (யோவான். 14:6, அப்போஸ்தலர். 4:12) உங்கள் இரட்சகர் இயேசுவை நம்புகிறீர்களா?

இயேசு உங்கள் "சொந்த" இரட்சகரா? ஆலயத்திற்கு செல்வது, சில சடங்காச்சாரங்களை செய்வது, சில பாவங்களை தவிர்ப்பது ஆகியவைதான் கிறிஸ்தவம் என அனேகர் கருதுகின்றனர். அது அல்ல கிறிஸதவம். உண்மையான கிறிஸ்தவம் என்பது இயேசுவுடனான தனிப்பட்ட உறவு ஆகும். உங்கள் சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் என்பது அவரில் உங்கள் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை வைப்பதைக் குறிக்கிறது. வேறொருவருடைய விசுவாசத்தினால் எவரும் இரட்சிக்கபடுவதில்லை.இரசிக்கப்படுகிறதற்கான ஒரே வழி இயேசுவை தனிப்பட்ட முறையில் உங்கள் இரட்சகராகவும், உங்கள் பாவங்களுக்கான விலைக்கிரயமாக அவரின் மரணத்தையும் அவருடைய உயிர்த்தெழுதலை நித்திய ஜீவனுக்கான உத்திரவாதமாகவும் ஏற்றுக் கொள்ளுவதே! (யோவான்3:16) இயேசு உங்கள் சொந்த இரட்சகரா?

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள்.. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவிலும், சிலுவையில் அவர் செய்து முடித்த கிரியையிலும் வைக்கும் விசுவாசமும் மாத்திரமே பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

கேள்வி: இரட்சிப்பின் திட்டம் என்றால் என்ன?

பதில்:
நீங்கள் பசியுடன் இருக்கிறீர்களா? சரீரபிரகாரம் பசி அல்ல. உன் வாழ்கையில் ஏதோ ஒரு காரியத்தை குறித்தான ஆவல்? உனக்குள் உன்னை திருப்திபடுத்தாத காரியங்கள் ஏதாகிலும் உண்டா? அப்படியானால் இயேசுவே வழி! இயேசு சொன்னார் "ஜீவ அப்பம் நானே என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்" (யோ. 6:35).


குழப்பமா? வாழ்க்கையின் பாதை தெரியவில்லையா? யாரோ ஒருவர் உன் வாழ்க்கையின் ஒளியை அனைத்துவிட்டது போல் இருக்கின்றதா? ஆப்படியானால் இயேசுவே வழி! இயேசு சொன்னார் "நான் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன் என்னை பின்பற்றுகிறவன் இருளிளே நடவாமல் ஜீவ ஒளியைப் அடைந்திருப்பான் என்றார்"(யோ.8:12).

உன் வாழ்கையில் கதவுகள் அடைபட்டுபோனதா? அனேக வழிகளை நீ முயற்சித்தும் அவைகள் வெறுமையும் அர்த்தமற்றதாய் இருக்கிறதா? உன் வாழ்வை ஏதாவது ஒரு வழியில் நிறப்பவேண்டும் என்றிருக்கிறாயா? ஆப்படியானால் இயேசுவே வழி! "நானே வாசல், என் வழியாய் உட்பிரவேசித்தால் மேய்ச்சலை கண்டடைவான்" (யோ. 10:9).

என்று இயேசு சொல்கிறார். மற்றவர்கள் எப்பொழுதும் உங்களை வெறுக்கிறார்களா? உன்னுடைய உறவில் ஆழமில்லையா? உறவு வெறுமையாய் தோன்றுகிறதா? யாராவது உன்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்களா? அப்படியானால் வழி இயேசுவை! இயேசு சொன்னார்" நானே நல்ல மேய்ப்பன்.

என்ன நடக்கும் என்று ஆச்சரிய படுகின்றாயா? அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்கிறேன் என்று சந்தேகப்படுகின்றாயா? நீ மரித்த பின்பு வாழ விரும்புகிறாயா? அப்படியானால் வழி இயேசுவே! இயேசு சொன்னார்" நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காய் தன் ஜீவனை கொடுக்கிறான்" (யோ. 10: 11,14).

இந்த வாழ்க்கைக்கு பின் என்ன நடக்கும் என்று ஆச்சரிய படுகின்றாயா "நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுசாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" (யோ. 11:25-26, பிர. 7:20, ரோ. 3:23) நம்முடைய பாவத்தினாலே நாம் தேவனை விட்டு பிரிக்கப்பட்டோம் தேவனோடு ஐக்கியம் விட்டு போனது (யோ. 3:36).

உன்னுடைய வாழ்க்கையில் குழப்பங்கள் மாற உன்னுடைய பாவத்தை சுமந்து தீர்த்த கிறிஸ்துவிடம் வா (II கொரி. 5:21) நீ இரட்சிப்படைய வேண்டும் என்பதே அவர் திட்டம் அவர் விருப்பமும் கூட. அவர் ஒருவரால் மாத்திரம் உன் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்க முடியும் அவர் ஒருவரே இரட்சிப்பின் வழி அவரை நோக்கி பார்! இரட்சிப்பார்! இரட்சிப்படைவாய்.
 
கேள்வி: கிறிஸ்தவம் என்றால் என்ன?

பதில்:
இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்வது "கிறிஸ்தவம்" அல்லது "கிறிஸ்தவன்" என்று "வெப்ஸ்டர்" என்ற வேத விளக்கவுரை விளக்கம் அளிக்கிறது.


"கிறிஸ்தவம்" மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு "கிறிஸ்தவர்கள்" என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. இது கேளிக்கையாய் வழங்கப்பட்ட பெயர். இதன் உண்மையான அர்த்தம் "கிறிஸ்துவை சேர்ந்த கூட்டம்" அல்லாத கிறிஸ்துவை "பின்பற்றுகிற கூட்டம்" "கிறிஸ்தவம்" என்ற வார்த்தை மறுபிறப்பு அடையாமல், பெயருக்கு ஆலயம் செல்வதினால் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களாளே அதன் மேன்மைக்கு பாதிப்புண்டானது சபைக்கு செல்வது, நல்லவர்களாய் ஜீவிப்பது, சபையில் பணிவிடைகள் செய்வது நம்மை கிறிஸ்தவனாக மாற்றாது.

திருச்சபைக்கு செல்வதினால் கிறிஸ்தவனாய் மாறமுடியாது. திருச்சபையில் அங்கம் வகிப்பதாலும், தவறாமல் சபைக்கு செல்வதாலும் கிறிஸ்தவனாக முடியாது (தீத்து 3:5) சொல்கிறது. நம்முடைய நீதியின் கிரியையினால் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தினால் நம்மை இரட்சித்திருக்கிறார். உண்மை கிறிஸ்தவன் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ 1:12) உண்மை கிறிஸ்தவன் தேவபிள்ளையாய் மாறி, அவருடைய குடும்பத்தின் அங்கமாய் மாறவேண்டும். உண்மை கிறிஸ்தவனின் அடையாளம் மற்றவர்களை நேசிக்கிறவனும், தேவ வார்த்தைக்கு கீழ்படிந்தவனுமாய் இருக்க வேண்டும் (1யோ2:4, 2:10).
 
கேள்வி: ரோமரின் இரட்சிப்பு பாதை என்றால் என்ன?

பதில்:
ரோமரின் இரட்சிப்பு பாதை என்றால் ரோமரின் புஸ்தகத்திலிருந்து இரட்சிப்பின் பாதைக்கு நடத்துகிறதான வசனங்களை கொண்டு சுவிசேஷம் அறிவித்தல். இது ஓர் எளிய வழி ஆனால் தேவன் எப்படி இரட்சிப்பை அருளினார். நமக்கு ஏன் இரட்சிப்பு வேண்டும் நாம் எப்படி இரட்சிப்பை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் வரும் பலன் என்ன என்று போதிக்கின்றதான வல்லமையான வழி.


ரோமரின் இரட்சிப்பு பாதையில் முதல் வசனம் (ரோ 3:23) "நாம் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையறற்றவர்களானோம்" ஒருவரும் பேதைகளல்ல. தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்தோம் (ரோமர் 3:10-18) வரையுள்ள வசனங்கள் நம் வாழ்க்கையின் பாவகாரியங்களை படம் பிடித்து காட்டுகின்றதாயிருக்கிறது. இரண்டாவது வசனம் (ரோமர் 6:23) பாவத்தினால் வரும் பலனை போதிக்கிறது பாவத்தினால் நாம் சம்பாதித்தது மரணம்.

சரிரபிரகாரமான மரணம் மாத்திரம் அல்ல கிருபை வரமோ நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காய் மரித்ததினால் தேவன் நம் மேல் வைதத அன்பை தெரியப் பண்ணினார். கிறிஸ்து நமக்கு நித்திய ஜீவன் அருளும் பொருட்டு பாவமில்லாத அவர் பாவமானார்.

நான்காவது (ரோமர் 10:9) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் "நமக்காய் அவர் மரித்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நாம் இரட்சிக்கப்படுவோம் (ரோ 10:13) சொல்கிறது "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிற எவனும் இரட்சிக்கபடுவான்" நித்திய மரணத்தின்று நம்மை மீட்ட இயேசுவினை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டு அவரிடம் வந்தால் நிச்சயம் அவர் பாவமன்னிப்பு அளித்து நித்திய வாழ்வை தருவார். இறுதியாக (ரோ 5:1)ம் வசனம் "இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்". ரோ 8:1 சொல்கிறது. "கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினையில்லை" கிறிஸ்து நமக்காய் நம்முடைய பாவங்களுக்காய் மரித்ததினாலே நாம் ஆக்கினை அடையமாட்டோம். இறுதியாக தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்த வசனத்தை பார்போம் ரோ8:38-39 "மரணமானாலும் ஜீவனானாலும். கர்த்தராகிய இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

கேள்வி: பாவிகளின் ஜெபம் என்றால் என்ன? நான் ஜெபிக்கலாமா?

பதில்:
பாவிகளின் ஜெபம் என்பது தான் ஒரு பாவி, எனக்கு இரட்சகர் வேண்டும் என்று அறிந்தவன் அல்லது உனர்ந்தவன் தேவனிடம் ஜெபிக்கும் ஜெபம். இந்த ஜெபத்தை செய்வதினால் அதின் மூலம் நமக்கு நன்மை ஒன்று பயக்காது. பாவிகளின் ஜெபம் என்பது நான் பாவி, செய்த தவறு என்ன? தனக்கு அதினின்று இரட்சிப்பு தேவை என்று உணரவைப்பதே.


பாவிகளின் ஜெபத்தின் முதல் நிலை நாம் அனைவரும் பாவிகள் என்று உணரவைப்பதே (ரோ3:10) "அந்தபடியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" என்று வேதம் தெளிவhய் சொல்கிறது நாம் அனைவரும் பாவிகள் தேவனுடைய இரக்கமும், மன்னிப்பும் நமக்கு தேவை (தீத்து 3:5) பாவத்தினாலே நாம் நித்திய தண்டனையை வருவித்து கொண்டோம். பாவிகளின் ஜெபமானது நியாயத்தீர்ப்புக்கு பதிலாய் கிருபையையும் தேவகோபத்திற்கு பதிலாய் இரக்கத்தையும் வேண்டி தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறதாயிருக்கிறது.

இரண்டாம் நிலையானது தேவன் பாவத்திலிருந்து நம்மை மீட்க அவர் பட்ட பாடுகளை உணர்த்துகிறது. நம்முடைய பாவங்களுக்காய் அவர் காயப்பட்டு மரித்து கல்வாரி சிலுவையில் மரணத்தை ஜெயமாக விழுங்கினார் (கொலோ2:15;இ 1கொரி 15) மரித்த கிறிஸ்து உயிரோடு எழுநதுஇ இன்றைக்கும் ஜீவித்து கொண்டிருக்கிறார். நாம் செய்ய வேண்டியது அவரை (1 கொரி. 15:1-15) விசுவாசித்து. அவர் எனக்காக நான் நித்திய ஜீவனை அடையும்படி அவர் மரித்தார் என்று நம்புவாயானால் நிச்சயமாய் அவர் உன் பாவத்தை மன்னித்து உன்னை இரட்சிப்பார்.

கேள்வி பதில்கள் 1 - நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறீர்களா?

கேள்வி: நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறீர்களா?

பதில்:
நித்திய வாழ்விற்கான தெளிவான பாதையை வேதாகமம் நமக்கு காட்டுகிறது. முதலாவது, நாம் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்: ஏனெனில் "எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானோம்" (ரோமர். 3:23) தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நாம் செய்தோம், அது நம்மை தண்டனைக்கு உரியவர்களாக மாற்றுகிறது. நம் பாவங்கள் அனைத்தும் அநாதி தேவனுக்கு எதிரானவையாக இருக்கிற படியால், நித்திய தண்டனை மாத்திரமே சரியான தண்டனையாக இருக்கிறது. "பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவினால் உண்டான நித்திய ஜீவன்" (ரோமர் 6:23).


நித்திய தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து பாவமில்லாதவராக(1பேதுரு 2:22) இருந்த போதிலும், ஒரு மனிதனாகப் பிறந்து நமது தண்டனைக்கான கிரயத்தை செலுத்தும் படி மரித்தார். "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர் 5:8). நமக்கு உரிய தண்டனையை தம்மீது ஏற்றுக் கொண்டு (2கொரிந்தியர் 5:21),இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் (யோவான் 19:31- 42). மூன்றாம் நாட்களுக்குப் பின் அவர் மரித்தோரிலிருந்து எழும்பி(1கொரிந்தியர் 15:1-4) பாவத்தின் மேலும், மரணத்தின் மேலும் வெற்றி சிறந்ததை நிரூபித்தார். "அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, ... ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்"(1பேதுரு 1:4).

நாம் இரட்சிப்பைப் பெறும்படிக்கு, இயேசு யார், அவர் என்ன செய்தார், ஏன் செய்தார் என்பன போன்ற கிறிஸ்துவைக் குறித்த காரியங்களில் நாம் நம் சிந்தனையை விசுவாசத்தின் மூலமாக மாற்ற வேண்டும் (அப்போஸ்தலர் 3:19). நாம் நமது விசுவாசத்தை அவரில் வைத்து, நமது பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரித்தார் என்பதை நாம் நம்பினால், நாம் மன்னிப்பைப் பெற்று பரலோகத்தில் உள்ள நித்திய வாழ்வைக் குறித்த வாக்குத்தத்ததை பெறுவோம். "தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்ப கூர்ந்தார்" (யோவான் 3:16). " கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் "(ரோமர் 10:9). சிலுவை மீது கிறிஸ்து செய்துமுடித்தவற்றில் உள்ள விசுவாசம் மாத்திரமே நித்திய வாழ்வுக்கான ஒரே பாதை ஆகும். "கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இரு தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8,9).

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

கேள்வி: மன்னிப்பு பெற்றுவிட்டீர்களா? தேவனிடம் இருந்து நான் மன்னிப்பு பெறுவது எப்படி?

பதில்:
ஆதலால் சகோதரரே, இவர் (இயேசு) மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறது" என்று அப்போஸ்தலர் 13:38 சொல்கிறது


மன்னிப்பு என்றால் என்ன? அது எனக்கு அவசியமானதாக இருப்பது ஏன்?

மன்னிப்பு என்ற வார்த்தை கடந்தகால தவறுகளை மறந்து புதிய காரியங்களைச் செய்ய ஆரம்பித்தல், மன்னித்தல், கடனை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. எவரிடமாவது நாம் தவறு இழைத்திருந்தால் அவருடனான நல் உறவில் நிலைத்திருக்க அவரிடம் மன்னிப்பு எதிர்பார்க்கிறோம். ஒரு நபர் மன்னிக்கப்படத்தக்கவர் என்பதினால் மன்னிப்பு கொடுக்கப்படுவதில்லை எவரும் மன்னிப்பைப் பெற தகுதியானவர்கள் அல்ல. மன்னிப்பு என்பது அன்பு இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு செயல் ஆகும். மன்னிப்பு என்பது பிறர் நமக்கு என்ன செய்திருந்தாலும் அவருக்கு விரோதமாக மனதில் எதையும் வைத்திக் கொள்ளாதிருக்கும்படி எடுக்கும் ஒரு தீர்மானம் ஆகும்.

நாம் அனைவரும் தேவனிடமிருந்து மன்னிப்பை பெற வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று வேதாகமம் நமக்கு சொல்கிறது. நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யதக்க நீதிமான் பூமியிலில்லை" என்று பிரசங்கி 7:20 அறிவிக்கிறது. "நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிகிறவர்களாயிருப்போம் சத்தியம் நமக்குள் இராது." என்று 1யோவான் 1:8 கூறுகிறது.அடிப்படையில் எந்த ஒரு பாவமும் தேவனுக்கு விரோதமான செயலாயிருக்கிறது (சங்கீதம் 51:4). இதன் விளைவாக, நமக்கு தேவனின் மன்னிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லையெனில், நாம் நமது பாவங்களின் விளைவுகளினால் வேதனைப்பட்டுக்கொண்டு நமது நித்தியத்தன் கழிபோம் (மத்தேயு 25:46, யோவான் 3:36).

மன்னிப்பு - நான் பெறுவது எப்படி?

தேவன் அன்புள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் - நம் பாவங்களை மன்னிக்க ஆவலாகவும் இருக்கிறார். "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்" என்று நமக்கு 2பேதுரு 3:9 சொல்கிறது. தேவன் நம்மை மன்னிக்க விரும்புகிறார். ஆகவே நம் மன்னிப்புக்கு தேவையானவற்றை அவர் அளித்தார்.

நமது பாவங்களுக்கான சரியான தண்டனை மரணமே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர்6:23 அறிவிக்கிறது. நாம் நமது பாவங்களினால் சம்பாதித்தது நித்திய மரணம் ஆகும். ஆனால் தேவன் தமது பரிபூரண திட்டத்தில், இயேசுகிறிஸ்துவாக ஒரு மனிதனானார்(யோவான் 1:1,14). நமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" என்று 2கொரிந்தியர் 5:21 நமக்கு போதிக்கிறது. அமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். தேவனைப் பொறுத்தவரையில், முழு உலகத்தின் பாவத்திற்கும் மன்னிப்பை இயேசுவின் மரணம் அளித்தது. "நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல. சர்வலோகத்தின் பாவங்களை நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" என்று 1யோவான் 2:2 அறிவிக்கிறது. இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தது, பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியை அறிவிக்கிறது 1கொரிந்தியர் 15:1௨8. தேவனுக்குக்கு ஸ்தோத்திரம், இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, தேவனுடைய கிருபை வரமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் என்று ரோமர் 6:23 கூறுவது உண்மையானதாக இருக்கிறது.

உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? மீள முடியாத படித்தோன்றும் குற்ற மனப்பான்மையான் நீங்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இயேசுகிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவர் மீது நீங்கள் உங்கள் விசுவாசத்தை வைத்தால் உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. "அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய (இயேசுகிறிஸ்துவின்) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது" என்று எபேசியர் 1:7 கூறுகிறது. இயேசு நமக்காக கடனை செலுத்தி தீர்த்தார், ஆகவே நாம் மன்னிக்கப்பட முடியும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்கு மனீப்பை அருளும்படி இயேசு மரித்தார் என்பதை விசுவாசித்து, இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அப்போது அவர் உங்களை மன்னிப்பார். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் " என்கிற அற்புதமான செய்தியை யோவான் 3:16,17 உள்ளடக்கியிருக்கிறது.

மன்னிப்பு - உண்மையாகவே சுலபமானதா?

ஆம்! மன்னிப்பு சுலபமானதே! நீங்கள் தேவனிடமிருந்து மன்னிப்பை சம்பாதிக்க முடியாது. தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெறும்படிக்கு உங்களால் கிரயம் செலுத்தவும் முடியாது. தேவனுடைய இரக்கம் மற்றும் கிருபையினால், விசுவாசத்தின் மூலமாக மட்டுமே நீங்கள் அதைப் பெற முடியும். இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஜெபிக்கும்படி இங்கு ஒரு ஜெபம் தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது. கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவங்களுக்கான மன்னிப்பை அருளுகிறது. இந்த ஜெபமானது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை அவரிடம் வெளிப்படுத்தவும் உங்கள் மன்னிப்புக்கு தேவையானவற்றை அருளினதற்காக நன்றி சொல்வதற்குமான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: நான்கு ஆவிக்குரிய விதிகள் என்ன?

பதில்:
இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய இரட்சிப்பின் நற்செய்தியை பகிர்ந்துகொள்கிறதற்கான ஒரு வழியே நான்கு ஆவிக்குரிய பிரமாணங்கள் ஆகும். இது நற்செய்தியில் உள்ள முக்கியமான தகவலை நான்கு கருத்துக்களில் சொல்லும் எளிய ஒரு வழிமுறை ஆகும்.


நான்கு ஆவிக்குரிய விதிகளில் முதலாவது என்னவெனில், “தேவன் உன்னை நேசிக்கிறார். அவர் உன் வாழ்க்கைக்கு ஆச்சிரியமானதொரு திட்டம் வைத்திருக்கிறார்" என்பதாகும். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத்தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" என்று யோவான். 3:16 கூறுகிறது. “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்." என்று இயேசு வந்த காரணத்தை யோவான்10:10 நமக்கு தருகிறது. தேவனுடைய அன்பிலிருந்து நம்மை பிரிப்பது எது? ஒரு பரிபூரணமான வாழ்க்கையை நாம் பெறமுடியாதபடி தடுப்பது எது?

நான்கு ஆவிக்குரிய விதிகளில் இரண்டாவது என்னவெனில், "பாவத்தினால் மனுக்குலம் கறைபட்டுவிட்டது. ஆகவே தேவனிடமிருந்து மனுக்குலம் பிரிக்கப் பட்டுவிட்டது. அதன் விளைவாக நாம் தேவன் நம் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் ஆச்சரியமான திட்டத்தை அறிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது" என்பதே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர்6:23 பாவத்தின் விளைவுகளைக் கூருகிறது. "எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள்" என்று கூறி ரோமர் 3:23 அதை உறுதிப்படுத்துகிறது. தேவன் தம்மோடு மனிதன் ஐக்கியப்படும் படி அவனை உண்டாக்கினார். மாறாக மனிதன் பாவத்தை உலகத்துக்கு கொண்டுவந்துவிட்டான். அதினால் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டபின் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்த்த அந்த நல்ல உறவை நாம் பாழாக்கிக்கொண்டோம். இதற்கு தீர்வு என்ன?

நான்கு ஆவிக்குரிய விதிகளில் மூன்றாவது என்னவெனில், " இயேசுகிறிஸ்து மாத்திரமே நம்முடைய பாவத்திற்கு பரிகாரமாக தேவன் கொடுத்தது ஆகும். இயேசுகிறிஸ்துவின் மூலமாக நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனோடு உள்ள உறவை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்" என்பதே. "நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" என்று ரோமர் 5:8 கூறுகிறது. இரட்சிக்கப்படுவதற்கு நாம் எதை அறிந்து, விசுவாசிக்கவேண்டுமென்று 1கொரிந்தியர்15:3-4 பின்வருமாறு தெரிவிக்கிறது:" கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்." யோவான்14:6 ல் "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" என்று கூறி இயேசு இரட்சிப்புக்கு நானே வழியென்று தன்னைப் பற்றி பறைசாற்றினார். இந்த இரட்சிப்பு என்ற ஆச்சர்யமான பரிசை எப்படி நான் பெற்றுக்கொள்ளமுடியும்?

நான்கு ஆவிக்குரிய விதிகளில் நான்காவது என்னவெனில், " இரட்சிப்பின் ஈவைப்பெற்றுக்கொள்வதற்கும், தேவன் நமக்காக வைத்திருக்கிற அந்த ஆச்சரியமான திட்டத்தை அறிந்துகொள்வதற்கும் இயேசுகிறிஸ்துவே இரட்சகர் என்று அவர் மீது னம் விசுவாசத்தை வேண்டும்" என்பதே. "அவருடைய நாமத்தின் மீது விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுகொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்று யோவான் 1:12 இதை குறிப்பிடுகிறது "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்று அப்போஸ்தலர் 16:31 இதை மிகவும் தெளிவாகக் கூறுகிறது. நாம் தேவனுடைய கிருபையினால் மாத்திரமே, விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, இயேசுகிறிஸ்துவில் மாத்திரமே இரட்சிக்கப்பட முடியும்.(எபேசியர் 2:8,9)

இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள்.. இந்த ஜெபத்தை சொல்வது உங்களை இரட்சிக்காது. கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையே இரட்சிக்கும். இந்த ஜெபமானது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை அவரிடம் வெளிப்படுத்தவும் உங்கள் மன்னிப்புக்கு தேவையானவற்றை அருளினதற்காக நன்றி சொல்வதற்குமான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: எப்படி நான் தேவனோடு என்னை ஒப்புரவாக்குவது?

பதில்:
முதலாவது. தேவனோடு நம்மை ஒப்புரவாக்கி கொள்வதற்கு நம்மிடம் உள்ள தவறு என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பதில் "பாவம்". நன்மை செய்கிறவன் இல்லை. ஒருவனாகிலும் இல்லை. (சங்.14:3) "நாம் தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாக கலகம் பண்ணினோம். நாம் எல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்தோம் (ஏசா.53:6).


நமக்கு கிடைக்கிற வேதனைதரும் செய்தி என்னவென்றால், பாவத்தின் சம்பளம் மரணம். "பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் (எசே.18:4). நற்செய்தி என்னவென்றால், நமக்கு இரட்சிப்பு கொண்டுவரும்படியாய். அவர் நம்மை தொடர்ந்து வருகிறார் என்பதே. இழந்து போனதைத் தேடவும், இரட்சிக்கவுமே வந்தேன் என்று இயேசுகிறிஸ்து தாமே அறிக்கையிடுகிறார். (லூக். 19:10) அவர் வந்த நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதை "முடிந்தது". (யோ.19:30) என்று சிலுவையில் முழக்கமிடுகிறதை நம்மால் காணமுடிகிறது. நமது பாவங்களை ஒத்துக்கொள்வதுதான் தேவனோடு நமது உறவை சரிப்படுத்திக்கொள்வதற்கு முதற்படியாகும்.

இரண்டாவது. நம்மை தாழ்த்தி தேவனிடத்தில் நம் பாவங்களை அறிக்கை செய்வதும் (ஏசா.57:15) பாவத்தை விட்டுவிடுவதற்கு நாம் எடுக்கும் உறுதியுமாகும். "நீதியுண்டாக, இருதயத்தில் விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினால் அறிக்கைப்பண்ணப்படும்." (ரோ.10:10)

மனந்திரும்புதல், விசுவாசத்தோடு இணைக்கப்பட்டதாய் இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் தியாகமான மரணம், அவரது அற்புதமான உயிர்த்தெழுதல் மேலுள்ள விசுவாசமே இயேசுவை ஒருவருக்கு இரட்சகராக மாற்றும். என்னவென்றால் கர்த்தராகிய இயேசுவை நீ உன்வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோ.10:9). மேலும் பல வேதப்பகுதிகள் விசுவாசத்தின் அவசியத்தை போதிக்கிறது. யோ.20:27, அப்.16:31, கலா.2:16, 3:11, 26, எபே.2:8.

தேவனோடு ஒப்புரவாகிவிட்டேன் என்பது தேவன் உனக்காக எதைச் செய்தாரோ, அதற்காக உன்னையே பிரதிபலனாக அளிப்பது என்பதாகும். அவர் இரட்சகரை அனுப்பினார். நம்முடைய பாவங்களை நீக்கும்படியாக, பலியை நமக்காக கொடுத்தார். (யோ 1:29) அதுமட்டுமல்லாமல், நமக்கொரு வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறார், "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்" (அப். 2:21).

கெட்ட குமாரன் உவமையில் மனந்திரும்புதலைக் குறித்தும், மன்னிப்பைக் குறித்தும், அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. (லூக். 15:11-32) இளையகுமாரன், வெட்கப்படத்தக்க பாவங்களில் தகப்பனாரின் ஆஸ்தியை அழித்துப் போட்டான். தன் தவறை அவன் உணர்ந்து கொண்டபொழுது, தன் வீட்டிற்குத் திரும்பி வர தீர்மானித்தான் (வ.18) இனி, தான் மகனாக இருக்க முடியாது என்று அவனாகவே தவறாக நிச்சயித்தான். தகப்பனார் முன்பு அன்பு கூர்ந்ததைக் காட்டிலும், திரும்பி வந்த தன் மகன் மீது அதிகமாய் அன்பு கூர்ந்தார். எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டது. பெரிய களிகூறுதல் உண்டாயிற்று (வ.24). தேவன் தனது வாக்குத் தத்தங்களை நிறைவேற்றுவதற்கு நல்லவராகவே இருக்கிறார். மன்னிப்பைக் குறித்து அவர் கொடுத்த வாக்குத்தத்தமும் அப்படியே மாறாமல் இருக்கிறது. "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங். 34:18).

தேவனோடு ஒப்புரவாக வேண்டுமெனில் ஒரு மாதிரி ஜெபத்தை தருகிறோம். இந்த ஜெபமோ மற்ற ஜெபமோ உன்னை இரட்சிக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது மாத்திரமே பாவத்திலிருந்து இரட்சிப்பைக் கொண்டுவரும். இந்த ஜெபமானது தேவனிடத்தில், நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கும், அவர் கொடுத்திருக்கும் இரட்சிப்புக்கு நன்றி செலுத்துவதற்கு மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது.

"தேவனே உமக்கு விரோதமாக நான் பாவம் செய்தேன். நான் தண்டனைக்குறியவன் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய தண்டனையை, இயேசு கிறிஸ்து தம் மேலே ஏற்றுக்கொண்டார். ஆகவே நான் மன்னிக்கப்பட்டேன் என்று விசுவாசிக்கிறேன் என இரட்சிப்புக்காக உம்மையே விசுவாசிக்கிறேன். உம்முடைய ஆச்சரியமான கிருபைக்காக, மன்னிப்புக்காக, ஈவாகிய அந்த நித்திய ஜீவனுக்காக, நன்றி சொல்கிறேன்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: நான் ஒரு முஸ்லீம், கிறிஸ்தவனாக மாறுவதை நான் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

பதில்:
உண்மைக்கிறிஸ்தவர்கள் ஈசா/இயேசுவைப் பின்பற்றுபவர்கள் ஆவர். குரானில் இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிற படியால், உண்மையான முஸ்லீம்கள் ஈசாவின் போதனைகளைக் கற்று அவற்றிற்கு கீழ்ப்படிய வேண்டும் (சூரா3:48- 49; 5:46). ஈசாவைக் குறித்து குரான் சொல்வது என்ன?


# அல்லா ஈசாவை அனுப்பி, பரிசுத்த ஆவியினால் அவருக்கு உதவி செய்தார்(சூரா.2:87)
# ஈசாவை அல்லா உயர்த்தினார் (சூரா 2:253)
# ஈசா நீதிமானாகவும் மற்றும் பாவமில்லாதவராகவும் இருந்தார்(சூரா 3:46; 6:85; 19:19)
# ஈசா மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார் (சூரா 19:33௩4)
# ஒரு மதத்தை ஸ்தாபிக்கும்படி ஈசாவுக்கு அல்லா கட்டளையிட்டார் (சூரா 42:13)
# ஈசா பரலோகத்திற்கு (சொர்க்கத்திற்கு) ஏறிச் சென்றார்( சூரா 4:157௧58)

வேதாகமம் - இயேசுவின் வார்த்தை

ஈசாவின் சீடர்களால் இஞ்சிலில்( நற்செய்தி நூல்) அவருடைய போதனைகள் எழுதிவைக்கப் பட்டுள்ளது.ஈசா மற்றும் அவருடைய செய்தியில் நம்பிக்கை வைக்கும்படிக்கு அல்லாவினால் சீடர்கள் ஏவப்பட்டனர் என்று சூரா 5:111 குறிப்பிடுகிறது. அல்லாவின் உதவியாளர்களாக (சூரா 61:6,14), ஈசாவின் சீடர்கள் அவருடைய போதனைகளை துல்லியமாக பதிவுசெய்திருப்பர்.

தோரா(Torah) மற்றும் இன்ஜிலையும் (Gospels) நிலைநிறுத்தி அவ்விரண்டிற்கும் கீழ்படிய வேண்டுமென்றும் குர்ஆன் முஸ்லீம்களுக்கு போதிக்கிறகிறது (சூரா 5:44௪8). நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்குமானால், முகமதுவுக்கு இந்தப் போதனை வழங்கப்பட்டிருக்காது. ஆகவே, முகமதுவின் காலத்தில் இருந்த நற்செய்தி நூல்களின் பிரதிகள் நம்பத்தக்கவையாகவும் துல்லியமானவையாகவும் இருந்தன. முகமது வாழ்ந்த காலத்துக்கும் 450 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் உள்ள நற்செய்தி நூல் பிரதிகள் உள்ளன. மிகவும் பழமையான பிரதிகள், முகமதுவின் காலத்தில் உள்ள பிரதிகள் மற்றும் முகமதுவின் காலத்துக்கு பிந்தினவையாக குறிக்கப்பட்டிருக்கும் கைப்பிரதிகள் இவற்றை ஒப்பிட்டுப்பார்க்கும் போது , நற்செய்தி நூல்களின் அனைத்துப் பிரதிகளும் இயேசு மற்றும் அவருடைய போதனை குறித்த தங்கள் சாட்சியில் முரñபாடற்றவையாக இருக்கின்றன. நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்கின்றன என்று எந்தச் சான்றும் நிரூபிக்க முடியாது. ஆகவே, இயேசுவின் எல்லா போதனைகளும் வேதாகமத்தில் துல்லியமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.
v இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்

நற்செய்தி நூல்கள் உண்மை என்று அறிந்து கொள்ளுதல் போன்ற காரியங்கள் இயேசுவைக் குறித்து என்ன போதிக்கின்றன? இயேசு தான் கொலை செய்யப்பட்டு, மரித்து பின்பு மரித்தோரிலிருந்து எழும்புவேன் என்று கூறி தனது வாழ்வு நிகழ்வுகளை முன் அறிவித்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்திருக்கிறது (மத்தேயு 20:19). இயேசு முன் அறிவித்ததைப் போலவே அவை நடந்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்திருக்கின்றன (மத்தேயு 27- 28; மாற்கு 15,16; லூக்கா 23,24; யோவான் 19- 21)

பாவமில்லாத இயேசு கொல்லப்படுவதற்காக தன்னைத்தான் ஒப்புக்கொள்ள வேண்டும்? நீங்கள் உங்கள் நண்பனுக்காக உயிரைக்கொடுக்கும் அன்பைவிட பெரிய அன்பு வேறு இல்லை என்று இயேசு சொன்னார் (யோவான் 15:13). தனது தீர்க்கதரிசி தவறாக நடத்தப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் தேவன் ஏன் அனுமதித்தார்? நமக்காக தியாக பலியாக இயேசுவை அனுப்புமளவுக்கு அவர் நம்மை அன்புகூர்ந்தார் என்று யோவான் 3:16 சொல்கிறது.

இயேசு நமது பாவங்களுக்காக பலியானார்

இயேசு நமக்காக தன்னுடைய உயிரை ஏன் தியாகம் செய்யவேண்டும்? இது தான் இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் ஆகும். நம்முடைய தீயச் செயல்களை விட நல்ல செயல்கள் அதிகமாக உள்ளனவா இல்லையா என்பதைப்பார்த்து அல்லா நியாயம் தீர்ப்பார் என்று இஸ்லாம் போதிக்கிறது. தீய செயல்களை விட நற்செயல்களைச் அதிகமாக செய்ய வாய்ப்பு உண்டு என்றாலும் கூட, ஒரே ஒரு பாவத்தை செய்தவனைக் கூட பரலோகத்தில் அனுமதிக்க தேவனால் முடியாது. அவர் அவ்வளவு பரிசுத்தமானவராக இருக்கிறார் (யாக்கோபு2:10)பூரணமற்ற எதையும் பரிசுத்த தேவனால் பரலோகத்தில் அனுமதிக்கமுடியாது. நாமெல்லாரும் பாவம் செய்திருக்கிறோம் என்றும் அதனால் நாம் பரலோகத்திற்குள் நுழையமுடியாது என்பதை தேவன் அறிந்திருந்தார். நாம் மன்னிக்கப்படுவதற்கான ஒரே வழி பூரணமான ஒருவர் நமக்குப் பதிலாக மரித்து நமது பாவக்கடன்களை செலுத்தி தீர்ப்பதே என்பதை தேவன் அறிந்த்திருந்தார். தன்னால் மாத்திரமே அப்படிப்பட்ட மாபெரும் கிரயத்தை செலுத்த முடியும் என்பதை தேவன் அறிந்திருந்தார்.

நம்மை மீட்பதற்கான தேவனின் திட்டம்

ஆகவே, தேவன் ஒரு கன்னியிடம் பிறக்கும்படி தமது மகனை அனுப்பினார். தேவன் மரியாளுடன் பெற்றோர்களுக்குரிய உறவு வைத்திருì¸Å¢ø¨Ä. தேவனுடனான அவருடைய உறவு மற்றும் அவருடைய தெய்வீகத்தின் அடிப்படையில், இயேசு தேவகுமாரன் ஆவார்(யோவான் 1:1,14). தனது பாவமற்ற வாழ்க்கை, பரிபூரண செய்தி, பாவத்துக்காக மரணம் மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் போன்றவற்றால் இயேசு தன்னை தேவகுமாரன் என்று நிரூபித்தார்.

இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மரணம் ஆகியவை உங்களுக்கு தரும் செய்தி என்ன? பாவத்திலிருந்து இரட்சிக்கும்படி இயேசுவை தங்கள் இரட்சகராக நம்புபவர்களுக்கு பாவத்திலிருந்த்து மீட்பை தேவன் அருளுகிறார். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் (தேவன்) பிதாவினிடத்தில் வரான்". என்று இயேசு சொன்னார்.

தேவனிடம் செல்லும் ஒரே வழி நானே என்பதை இயேசு தெளிவாக போதித்தார். இயேசுவின் மூலமாக மட்டுமே நாம் பரலோகம் சென்றடைய முடியும். தேவன் நம் பாவங்களை மன்னித்து, அவருக்காக வாழ உதவி செய்வார். அத்துடன் நித்திய வாழ்வையும் நமக்கு தருவார். இப்படிப்பட்ட விலையேறப்பெற்ற பரிசை நாம் எப்படி வேண்டாமென தள்ளிவிட முடியும்? தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுக்குமளவுக்கு நம்மை அன்பு செய்த தேவனை எப்படி ஏற்றுக் கொள்ளாதிருக்க முடியும்?

ஒரு கிறிஸ்தவனாக மாறுதல்

சத்தியத்தைக் குறித்த உறுதி இல்லாதவர்களாக நீங்கள் இருந்தால், பின்வரும் ஜெபத்தை தேவனிடம் கூறுங்கள்: "தேவனே, தயவுசெய்து எனக்கு சத்தியத்தை வெளிப்படுத்தும். தவறாக இருப்பதை கண்டுகொண்டு அதை தள்ளிவிட உதவும். இரட்சிப்புக்கான சரியான வழிக்கு நேராக என்னை நடத்தும்." இப்படிப்பட்ட ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுப்பார்.

இயேசுவை உங்கள் இரட்சகராக நம்பும்படிக்கும், அவரைப் பின்பற்றவும் தேவன் உங்களை நடத்துவாரெனில், இயேசுவின் மூலமாக வரும் இரட்சிப்பை தேவனிடம் கேளுங்கள்.. இங்கே ஒரு மாதிரி ஜெபம் தரப்பட்டிருக்கிறது. " தேவனே, நான் எனது பாவத்தை நேசிப்பதையும், எனது சொந்தக் கிரியைகளின் மூலம் சொர்க்கத்திற்கு சென்றடைய முயற்சிப்பதையும் விட்டுவிடுகிறேன். எனது பாவங்களுக்காக மரிக்கும்படி இயேசுகிறிஸ்துவை அனுப்பினதற்காகவும், அவரை மரித்தோரிலிருந்த்து உயிரோடெழுப்பினதற்காகவும் நன்றி. இயேசுவை நான் எனது சொந்த இரட்சகராக நம்புகிறேன். ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன், என்னை உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

வாழ்க்கையை மாற்றக்கூடிய தீர்மானங்கள் எடுத்த உங்களுக்கு அத்தீர்மானத்தினால் என்ன?

1. இரட்சிப்பை அறிந்துகொண்ட நிச்சயம்.

Iயோ. 5:3, "உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன்" இரட்சிப்பை நாம் அறிந்துகொள்ளவேண்டும் என்றும், நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்கின்ற நம்பிக்கையின் உறுதி, நம்மில் காணப்படவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இரட்சிப்பை விளக்ககூடிய முக்கியமான குறிப்புகளை சுருக்கமாக பார்ப்போம்.

a) தேவன் அருவருக்கின்ற காரியங்களையெல்லாம் நாம் செய்திருக்கின்றோம் (ரோ. 3:23)

b) நம்முடைய பாவத்தினால்,தேவனை விட்டு நித்தியக்காலம் பிரியவேண்டிய தண்டனை உண்டானது.

c) நம்முடைய பாவத்திற்கு சிலுவையில் கிறிஸ்து தண்டனை ஏற்றார் (ரோ.5:8)

d) II கொரி. 5:21) நம்முடைய இடத்திலே, நம் நிமித்தம் அவர் தண்டனை அனுபவித்தார். கிறிஸ்துவின் மரணம் நம்முடைய பாவத்தில் இருந்து நம்மை மீட்க போதுமானது என்று அவருடைய உயிர்த்தெழுதல் நிருபிக்கிறது.

என்னுடைய பாவத்திற்கு பரிகாரமாய் கிறிஸ்து மரித்தார், என்று நம்பி அவர்மேல் விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ, தேவன் அவர்களை மன்னித்து இரட்சிப்பை அளிக்கிறார்(யோ. 3:16, ரோ. 5:8- 11) இதுவே இரட்சிப்பின் செய்தி. இயேசு கிறிஸ்துவே உங்கள் வாழ்வின் இரட்சகர் என்கிற விசுவாசம் உங்களில் காணப்படும் போது நீங்கள் இரட்சிப்பை அடைவீர்கள். தேவன் உங்கள் பாவங்களை மன்னித்து நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை என்று வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். (ரோ. 8:38-39; மத். 28:20) மறவாதே, உன்னுடைய இரட்சிப்பு இயேசு கிறிஸ்த்துவுக்குள் பாதுகாக்கப்பட்டுள்ளது (யோ. 10:28-29). இயேசு கிறிஸ்து மாத்திரம் உன் இரட்சகர் என்று அவர் மீது நம்பிக்கைவைப்பாயானால், நீ நிச்சயமாய் உன் நித்தியத்தை பரலோகத்தில் தேவனோடு கழிக்கலாம்.

2. வேதத்தை உபதேசிக்கின்ற ஒரு நல்ல சபையை கண்டுபிடி

சபையை ஒரு கட்டிடமாக நினைக்க வேண்டாம். விசுவாசி தான் சபை இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளுதல் (அ) அவசியமானதும் திருச்சபை அடிப்படை குறிக்கோளின் ஒன்றுமாக இருக்கிறது உங்கள் விசுவாசத்தை கிறிஸ்துவின் மேல் வைத்து உங்கள் பகுதியில் வேதத்தை விசுவாசித்து அதன் சத்தியத்தை போதிக்கின்ற சபையை கண்டுப்பிடித்து அதின் போதகரோடு பேசுங்கள். நீங்கள் கிறிஸ்துவில் வைத்து இருக்கிற புதிய விசுவாசத்தை போதகரும் அறிந்து கொள்ளட்டும். திருச்சபையின் இரண்டாம் குறிக்கோள் வேதத்தை உபதேசிப்பதே. தேவனின் கட்டளைகளை உங்கள் வாழ்க்கையில் எப்படி அப்பியாசப்படுத்துகிறது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள இது வழிவகுக்கிறது வேதத்தை புரிந்துகொண்டு வாழ்ந்தால் நீங்கள் வெற்றியுள்ள. வல்லமையுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழலாம்.

II திமோ. 3:16-17 சொல்கிறது "வேதவாக்கியங்கலெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது அவைகள். உபதேசத்திற்க்கும். சீர்திருத்தத்திற்கும். நீதியை படிப்பித்தலுக்கு பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது." திருச்சபையின் மூன்றாம் குறிக்கோள் ஆராதிப்பது. ஆராதிப்பது என்பது தேவன் நமக்கு செய்த எல்லா காரியங்களுக்கும் நன்றி செலுத்துவதாகும் தேவன் நம்மை இரட்சித்தார். நம்மை நேசிக்கிறார். நம் தேவைகளை சந்திக்கிறார். நமக்கு வழிகாட்டி நடத்துகிறார் நாம் அவருக்கு நன்றி செலுத்தாமல் இருப்பது எப்படி? தேவன் பரிசுத்தர். நீதியுள்ளவர், அன்பானவர், இரக்கம் உள்ளவர். கிருபை நிறைந்தவர், வெளிப்படுத்தல் 4:11 "கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுகொள்கிறதற்குப் பாத்திராராயிருக்கிறீர் என்று அறிவிக்கிறது.

3. தேவனுக்கென்று தினமும் நேரத்தை ஒதுக்குதல்

தேவனோடு தினமும் நேரத்தை செலவிடுவது முக்கியமானதாகும் சிலர், அந்த நேரத்தை "அமைதிநேரம்" என்று வேறு சிலர் அதை "தியானநேரம்" என்றும் அழைக்கின்றனர். ஏனென்றால் நம்மை தேவனோடு சமர்ப்பிக்கிற நேரமாய் அது இருக்கிறது சிலர் காலையிலும் சிலர் மாலையிலும் நேரத்தை ஒதுக்குகின்றனர் எந்த நேரத்தில் அல்லது எப்பொழுது கூடுவது அந்த நேரத்தை எப்படி அழைப்பது அதுவல்ல முக்கியம். தேவனோடு நாம் தினமும் நேரத்தை செலவழிப்பதால் என்ன? எந்த நிகழ்ச்சி நம்மை தேவனுக்கென்று நேரத்தை ஒதுக்க வைத்தது?

ய) ஜெபம்: நேரத்தை ஆண்டவரோடு பேசுவதும் ஆண்டவரோடு உங்கள் கஷ்டங்களையும். கவலைகளையும் சொல்வதும் ஞானத்தை கேட்பதும் அவருடைய வழிநடத்துதலை கேட்பதும். உன் தேவைகளை சந்திக்கும்படி கேட்பதும். நீ தேவனை எவ்வளவாய் நேசிக்கிறாய் என்று சொல்வதும் உன் வாழ்வில் செய்த எல்லா உபகாரங்களுக்காய் அவரை போற்றி புகழ்வது இவைகளே ஜெபம்.

டி) வேதம் வாசிப்பது: சபையில் ஓய்வுநாள் பாடைசாலையில் வேத ஆராச்சி கூட்டம் ஆகிய இடங்களில் வேதம் போதிக்கப்பட்டுவருகிறது. ஆனாலும் உங்களுக்கு நீங்களே வேதம் வாசிக்க வேண்டும். வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது எப்படி நல்ல தீர்மானங்கள் எடுக்க கிறிஸ்துவின் வழிநடத்துதல், தேவசித்தத்தை அறிவது எப்படி பிறருக்கு எப்படி ஊழியம் செய்வது ஆவிக்குரிய வாழ்வில் வளருவது எப்படி போன்ற அநேக காரியங்களுக்கு விளக்கங்கள் அடங்கிய வேதம் நமக்கு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. நாம் நம்முடைய வாழ்க்கையின் மூலமாய் தேவனை எப்படி பிரியப்படுத்துவது. நாம் அதின் மூலம் திருப்தி அடைவது எப்படி என்பதை போதிக்கின்ற தேவனுடைய ஆலோசனைகள் அடங்கிய முக்கிய கையேடு வேதாகமம்.

4. ஆவிக்குரிய காரியத்தில் உங்களுக்கு உதவுபவருடன் ஐக்கியத்தை மேம்படுத்த வேண்டும்:

I கொரி. 15:33 சொல்கிறது "மோசம் போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷனைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்" பாவ வாழ்க்கை வாழ்கிறவர்களோடு நாம் ஐக்கியம் வைப்போம் என்றால் நம்முடைய வாழ்க்கை அதேபோல் மாறிப்போகும். நாம் சூழலில் இருக்கிறோமோ அந்த சூழல் நம்மை மாற்றிவிடும் ஆகவே தேவனை நேசித்து, தேவனுக்கு ஒப்புகொடுத்து வாழ்கின்ற கர்த்தரின் மக்களின் மத்தியில் வாழ்வது நமக்கு அவசியமாய் இருக்கிறது.

தேவனோடு உறவாடுகின்ற, நேரத்தை செலவு செய்கின்ற நண்பர்களை தெரிந்துகொள் (எபி. 10:24,25) நண்பர்கள் ஒருவருக்கொருவர் புத்தி சொல்கிறவர்களாயும், பாவத்திலே கடினபடாதபடி ஒருவருக்கொருவர் ஆவிக்குரிய காரியத்தில் தேறினவர்களாயிருங்கள் வசனத்தினால் தேற்றுகிறவர்களாயும் இருங்கள்.

5. ஞானஸ்நானம்

பெற்றிருக்க வேண்டும் அநேகருக்கு ஞானஸ்நானத்தை குறித்து தவறான சிந்தைகள் உண்டு. "ஞானஸ்நானம்" என்ற வார்த்தைக்கு "தண்ணீரில் மூழ்குதல்" என்று அர்;த்தம். ஞானஸ்நானம் என்பது நீ கிறிஸ்துவுக்கு உன்னை ஒப்புக்கொடுத்து அவரை பின்பற்றுகிறாய் என்பதை வெளிப்படையாய் அறிக்கை செய்தல். "தண்ணீரில் மூழ்கப்படுதல்" என்பது ஒப்புக்கொடுத்து அவரை பின்பற்றுகிறாய் என்பதை வெளிப்படையாய் அறிக்கை செய்தல். "தண்ணீரில் மூழ்கப்படுதல்" தேவனோடு நாம் அடக்கம் பண்ணப்படுகிறோம் என்பதையும் "தண்ணீரில் இருந்து எழும்புதல்" தேவனுடைய உயிர்த்தெழுதலை நமக்கு காண்பிக்கிறது ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவின் மரணம். அடக்கம், உயிர்த்தெழுதல் என்பவைகளை நம்மை கண்டுகொள்ள செய்கிறது (ரோ. 6:3-4) ஞானஸ்நானம் உங்களை இரட்சிக்காது உங்கள் பாவங்களை கழுவாது ஞானஸ்நானம் என்பது கீழ்படிதலின் ஒருபடியும் கிறிஸ்து ஒருவரே இரட்சிப்புக்கு வழி என்று வெளிப்படையாய் பறைசாற்றுதலும் ஆகும்.

பெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்

கேள்வி: ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா?

பதில்:
ஒருவர் ஒருமுறை இரட்சிக்கப்பட்டிருந்தால் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா? மக்கள் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக அறிந்துகொள்ளும் போது அவர்கள் கர்த்தரோடே ஒரு உறவுக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். இந்த உறவு அவர்களுடைய இரட்சிப்பை எப்பொழுதுமே பாதுகாக்கப்பட்ட ஒன்றாக உத்திரவாதம் அளிக்கிறது. பல வேத பகுதிகள் இந்த உண்மையை அறிவிக்கின்றன.


(a) “எவர்களை முன்குறித்திருக்கிறாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார் எவர்களை அழைத்திருக்கிறார் அவர்களை நீதிமான்களாக்கியுமிருகிறார், எவர்களை நீதிமான்களாக்கியிருக்கிறாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” என்று ரோமர் 8:30 கூறுகிறது. கர்த்தர் நம்மைத் தெரிந்துகொண்ட பொழுதிலிருந்தே பரலோகத்தில் அவருடைய பிரசன்னத்தில் மகிமையடைச்செய்தது போலிருக்கும். விசுவாசி ஒரு நாள் மகிமையில் பிரவேசிப்பதை எதுவும் தடைசெய்ய முடியாது ஏனென்றால் கர்த்தர் இதை முன்னதாகவே பரலோகத்தில் திட்டம் பண்ணியிருக்கிறார். ஒருவர் நீதிமானாக்கப்பட்டால் அவர் இரட்ச்சிப்புக்கு உத்திரவாதம் உண்டு – அவருக்கு இருக்கும் பாதுகாப்பு. அவர் ஏற்கனவே பரலோகத்தில் மகிமைப்பட்டுவிட்டது போன்றது.

(b) ரோமர் 833-34ல் பவுல் இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார் “தேவன் தெரிந்து கொண்டவர் மேல் குற்றஞ்சாட்டுகிறவர் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறார்; அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர் நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.” தேவன் தெரிந்து கொண்டவர் மேல் குற்றஞ்சாட்டுகிறவர் யார்? யாருமில்லை ஏனென்றால் கிறிஸ்துவே நமக்காக ப்ரிந்து பேசுகிறவராக இருக்கிறார். யார் நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பவர்? ஒருவருமில்லை ஏனெனில் நமக்காக மரித்த கிறிஸ்துவே நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர். நமக்காகப் பரிந்து பேசுகிறவரும், நம்மை நியாயந் தீர்க்கிறவரும் நம் இரட்சகரே.

(c) விசுவாசிகள் விசுவசிக்கும்போது மறுபடி பிறக்கிறார்கள் (மறுபடி ஜெனிப்பிக்கப்படுதல்) (யோவான் 3:3, தீத்து 3:5). ஒரு கிறிஸ்தவர் இரட்சிப்பை இழப்பதற்கு, அவர் மறுபடி ஜெனிப்பிக்கப்படாமலிருக்க வேண்டும். மறுபடி பிறத்தல் எடுத்துக்கொள்ளப்படும் என்பதற்கு வேதாகமம் எந்த சான்றும் கொடுக்கவில்லை.

(d) பரிசுத்த ஆவியானவர் எல்லா விசுவாசிகளுக்குள்ளும் தங்கி வாசம் செய்கிறார் (யோவான் 14:17; ரோமர் 8:9); எல்லா விசுவாசிகளையும் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணுகிறார் (1 கொரிந்தியர் 12:13). ஒரு விசுவாசி இரட்சிக்கப்பட்டதிலிருந்து விலகிப் போகவேண்டுமானால், அவருக்குள் “வாசம் பண்ணப்படாமலும்” கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து பிரிந்திருக்கவும் வேண்டும்.

(e) யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறாரோ அவருக்கு “நித்திய வாழ்வு உண்டு என்று யோவான் 3:15 கூறுகிறது. கிறிஸ்துவில் நீங்கள் இன்று விசுவாசித்து நித்திய வாழ்வைப் பெற்றுக் கொண்டு நாளை அதை இழந்துபோனால் அது “நித்தியமானதாக” ஒருபோதும் இருந்திருக்க முடியாது. ஆகவே நீங்கள் இரட்சிப்பை இழந்தால் வேதாகமத்தில் நித்திய ஜீவனைக் குறித்த வாக்குத்தத்தங்கள் தவறாயிருக்கும்.

(f) விவாத்தின் இறுதியான் முடிவுக்கு வேதபகுதியே சிறந்த விளக்கத்தை அளிக்கிறது என்று கருதுகிறேன், “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானுலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும் வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” ரோமர் 8:38-39). உங்களை இரட்சித்த தேவனே உங்களை காக்க வல்லவர். நாம் ஒருமுறை இரட்சிக்கப்பட்டோமானால் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டிருப்போம். நம்முடைய இரட்சிப்பு மிக நிச்சயமாக நித்தியத்திற்கும் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

கேள்வி: கலப்பினத் திருமணத்தைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?

பதில்:
கலப்பினத் திருமணம் செய்துகொள்ள கூடாது என்று பழைய ஏற்பாடு இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டது (உபாகமம் 7:3-4). இருப்பினும், இதன் காரணம் அடிப்படையாக இனம் சார்ந்ததல்ல, மாறாக மதம் சார்ந்தது. தேவன் மற்ற இனத்தாருடன் சம்பந்தங்கலவாதிருக்கும்படிக் கட்டளை கொடுத்ததின் நோக்கம் அவர்கள் விக்கிரகாராதனைக்காரர்களும் பொய்யான தெய்வங்களை வணங்குகிறவர்களுமாயிருந்ததுதான். விக்கிரகாரதனைக்காரர்கள், அந்நிய தெய்வங்களை வணங்குகிறவர்கள், மற்றும் புறஜாதியாருடனும் கலப்புத்திருமணம் செய்தால் இஸ்ரவேலர்கள் கர்த்தரைவிட்டு விலகிப் போவார்கள். இதைப்போன்ற ஒரு கோட்பாடே புதிய ஏற்பாட்டிலும் கூறப்பட்டாலும் அதன் நிலை வேறு: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” (2 கொரிந்தியர் 6:14). இஸ்ரவேலர்கள் (ஒரே மெய்யான தேவனில் விசுவாசங் கொண்டவர்கள்) விக்கிரகாராதனைக்காரர்களைத் திருமணஞ் செய்துகொள்ளக்கூடாது என்று கட்டளையிடப்பட்டதைப் போலவே, கிறிஸ்தவர்களும் (ஒரே மெய்யான தேவனில் விசுவாசங் கொண்டவர்கள்) அவிசுவாசிகளைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று கட்டளை பெற்றனர். இந்தக் கேள்விக்குக் குறிப்பிட்டு பதிலளிக்க வேண்டுமென்றால், இல்லை, கலப்புத்திருமணம் தவறு என்று வேதாகமம் கூறவில்லை.


மார்ட்டின் லூதர் சொன்னதைப் போலவே, குணத்தை வைத்து ஒரு மனிதரை எடைபோடலாமே ஒழிய நிறத்தை வைத்து அல்ல. இனத்தை வைத்து பாரபட்சம் பார்ப்பதற்கு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் இடமில்லை (யாக்கோபு 2:1-10). துணையைத் தெரிந்தெடுக்கும்பொழுது, தன்னை மணம் செய்துகொள்ளப்போகிறவர் இயேசுக் கிறிஸ்துவின் மீது விசுவாசங்கொண்டு மறுபடி பிறந்தவரா எனப்தை ஒரு கிறிஸ்தவர் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். துணையை தெரிந்தெடுக்க வேதாகமம் கூறும் தரம் கிறிஸ்துவில் நம்பிக்கை, நிறமல்ல (யோவான் 3:3-5). கலப்பினத்திருமணம் சரியா தவறா என்ற காரியமல்ல, மாறாக, அது ஞானத்தையும், பகுத்தறிதலையும் ஜெபத்தையும் குறித்தது.

அதை ஏற்றுக்கொள்ள முடியாத வேற்று மனிதர்களால் கலப்புத்திருமணம் செய்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் பிரச்சினைகள்தான் கலப்பினத்திருமணங்களை குறித்து நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரணம். ஒதுக்கப்ப்டுவதும் கேலிக்குள்ளாவதும் பல கலப்பினத் தம்பதிகள் அனுபவிக்கும் ஒன்று. சில வேளைகளில் இது சொந்த வீட்டாரிடமிருந்தே வருகிறது. தங்களது குழந்தைகளின் நிறம் பெற்றோரிடமிருந்தும் கூடப்பிறந்தவர்களிடமிருந்தும் மாறுபடும்பொழுது சில கலப்பினத் தம்பதிகள் மத்தியில் பிரச்சினை வருகிறது. திருமணம் செய்வதற்கு முடிவெடுக்கும்பொழுது இந்தக் காரியங்களைக் கறுத்தில்கொண்டு அவற்றிர்க்குத் தயாராயிருக்க வேண்டும். மீண்டுமாக, ஒரு கிறிஸ்தவர் யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் வேதாகமம் இடும் ஒரே கட்டுப்பாடு அந்த நபர் கிறிஸ்துவின் உடலாகிய சபையிலே அங்கத்தினரா என்பதுதான்.
 கேள்வி: பெண் சபை மேய்ப்பர்கள்/பிரசங்கியார்கள்? ஊழியத்தில் உள்ள பெண்கள் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்:
பெண்கள் மேய்ப்பர்களாகவும் பிரசங்கிகளாகவும் பணியாற்றுவதைப் பற்றியதான கேள்வியைவிட பெரிய சர்ச்சை இன்றைய நாளிலே சபையிலே வேறொன்றுமில்லை. இதன் விளைவாக, ஆண்களா பெண்களா என்ற விவாதமாக இதைப் பார்க்கமலிருப்பது மிகவும் முக்கியம். பெண்கள் மேய்ப்பர்களாக பணியாற்றக் கூடாது, வேதாகமம்கூட பெண்கள் ஊழியத்தில் ஈடுபடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கிறது என்று நம்புகிற பெண்களும் உண்டு. பெண்கள் மேய்ப்பர்களாக பணியாற்றலாம், பெண்கள் ஊழியத்தில் ஈடுபடுவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று நம்புகிற ஆண்களும் உண்டு. இது ஆணாதிக்கமோ வேற்றுமை பாராட்டுதலோ குறித்த பிரச்சினை அல்ல. இது வேதாகம விளக்கம் அல்லது புரிதலைப் பற்றியது.


“ஸ்த்ரீயானவள்...”(1 தீமோத்தேயு2:11-12) என்று வேதாகமம் எடுத்துரைக்கிறது. கர்த்தர் சபையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு பொறுப்புக்களை நியமிக்கிறார். இது மனிதகுலம் உண்டாக்கப்பட்டதின் மற்றும் பாவம் உலகில் தோன்றிய விதத்தின் விளைவு (1 தீமோத்தேயு2:13-14). கர்த்தரே, பெண்கள் போதிக்கும் மற்றும் ஆண்களின் மீது ஆவிக்குரிய அதிகாரம் செலுத்தும் பொறுப்புகளில் பணியாற்றுவதை, அப்போஸ்தலர் பவுலின் வழியாக, கட்டுப்படுத்துகிறார். இது பெண்கள் சபையிலே மேய்ப்பர்களாக பணியாற்றுவதை விலக்குகிறது. மேய்ப்பர்கள் என்பது ஆண்களுக்குப் பிரசங்கிப்பதையும், போதிப்பதையும், ஆண்கள்மேல் ஆவிக்குரிய அதிகாரம் செலுத்துவதயும் உள்ளடக்கும்.

பெண்கள் ஊழியத்தில் ஈடுபடுவதைக் குறித்தான இந்தக் கண்ணோட்டத்திற்க்கு பல “மறுப்புகள்” கூறப்படுகின்றன. ஒரு பொதுவான மறுப்பு என்னவென்றால் முதாலாம் நூற்றாண்டிலே பெண்கள் படிப்பறிவில்லாதவர்கள், ஆகையால் பவுல் அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறார் என்பது. ஆனாலும் 1 தீமோத்தேயு 2:13-14 -ல் படிப்பறிவைக் குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை. படிப்பறிவு ஊழியத்திற்கு ஒரு தகுதியாய் இருக்குமேயானால், இயேசுவின் சீடர்களில் பெரும்பாலோனோர் தகுதி பெற்றிருக்க முடியாது. பொதுவாக சொல்லப்படும் இரண்டாவது மறுப்பு பவுல் எபேசுவிலுள்ள பெண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கிறார் என்பது (1 தீமோத்தேயு எபேசுவிலிருந்த சபைக்கு மேய்ப்பராயிருந்த தீமோத்தேயுவிற்கு எழுதப்பட்டது என்பது. எபேசு பட்டணம் ஆர்டிமிஸ் என்ற உண்மையற்ற கிரேக்க/ரோம தேவதையின் கோயிலுக்குப் பேர்பெற்றது. ஆர்டிமிஸ்ஸின் வழிபாட்டிலே பெண்களே அதிகாரம் பெற்றிருந்தனர். ஆனாலும் 1 தீமோத்தேயுக்கான நிருபம் ஆர்டிம்ஸ்ஸைப் பற்றி எங்கும் குறிப்பிடுவதில்லை. பவுலும் ஆர்டிமிஸ் வழிபாட்டை கட்டுப்பாடுகளுக்கான காரணமாகக் 1 தீமோத்தேயு2:11-12 –ல் குறிப்பிடுவதில்லை

பொதுவாகக் கூறப்படும் மூன்றாவது மறுப்பு என்னவெனில், பவுல் கணவர்களையும் மனைவியரையும் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறாரே தவிர பொதுவாக ஆண்களையும் பெண்களையும் குறித்தல்ல. இப்பகுதியில் உள்ள கிரேக்கச் சொற்கள் கணவர்களையும் மனைவியரையும் குறிப்பிடலாம், ஆனாலும் இவ்வார்த்தைகளின் முதன்மைப் பொருள் ஆண்களையும் பெண்களையுமே குறிக்கிறது. மேலும் இதே சொற்கள் 8 முதல்10 வரை உள்ள வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8ஆவது வசனத்தில் சொல்லப்பட்டபடி கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி செபிக்க வேண்டியது கணவர்கள் (புருஷர்கள்) மட்டும்தானா? தகுதியான வஸ்திரத்தினாலும், நற்கிரியைகளினாலும் தேவனை ஆராதிக்க வேண்டியது பெண்கள் (ஸ்திரீகள்) மட்டும்தானா? அப்படி இல்லை. 8 முதல் 10 வரை உள்ள வசனங்கள் கணவரையும் மனைவியரை மட்டுமல்ல அனைத்து ஆண்களையும் பெண்களையும் குறிக்கிறது. 11 முதல் 14 முடிய உள்ள வசனங்களில் கணவரையும் மனைவியரையும் மட்டும் குறிக்க மாறுகிறது என்று சொல்வதற்கான சூழ்நிலைக்காரணங்கள் ஒன்றுமில்லை.

ஊழியத்தில் பெண்கள் ஈடுபடுவதை பற்றிய இந்த கருத்துக்கு மற்றொரு மறுப்பு வேதாகமத்தில் தலைமை பதவி பெற்றிருந்த பெண்கள், குறிப்பாக பழைய ஏற்பாட்டின் மிரியாம், தெபொராள், ஹுல்தாள் போன்றவர்களின் எடுத்துக்காட்டாகும். இந்த மறுப்பு சில முக்கியமான காரணங்களை கவனத்தில் கொள்வதில்லை. முதலாவதாக, இருந்த 13 நியாயாதிபதிகளில் தெபொராள் மாத்திரமே பெண் நியாயாதிபதி. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பல டஜன் தீர்க்கதரிசிகளில் ஹுல்தாள் ஒருத்தி மாத்திரமே ஒரே பெண் தீர்க்கதரிசி. மிரியாமுக்கும் தலைமைப் பதவிக்கும் உள்ள ஒரே சம்பந்தம் அவள் மோசே ஆரோன் என்பவர்களின் சகோதரி எனப்படுவதே. அத்தாலியா, யெசெபெல் என்று ராஜாக்களின் காலத்தில் இருந்த இரண்டு முக்கியமான் பெண்களை தேவனுக்கேற்ற பெண் தலைவர்கள் என்று சற்றேனும் கருதமுடியாது. இன்னும் சொல்லப்போனால், பழைய ஏற்பாட்டில் பெண்களின் அதிகாரம் என்பது ஒரு தேவையில்லாத கருத்து. கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபைக்கு 1 தீமோத்தேயு மற்றும் இதர சபை கண்காணிப்பு பற்றிய நிருபங்கள் ஒரு புதிய கோட்பாட்டுக் கண்ணோட்டத்தை முன் வைக்கின்றன. அது இஸ்ரவேல் ராஜ்ஜியத்திற்கோ, பழைய ஏற்பாட்டு அமைப்புக்கோ அல்லாமல் சபைக்கு அதிகார கட்டமைப்பை பற்றியது.

புதிய ஏற்பாட்டில் பிரிஸ்கில்லாளும் பெபேயாள் போன்றவர்களை வைத்தும் இது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பிர்ஸ்கில்லாளும் ஆக்கில்லாளும் கிறிஸ்துவுக்காக உண்மையுள்ள ஊழியக்காரர்களாக அப்போஸ்தலர் நடபடிகள் 18 ஆம் அதிகாரத்தில் கூறப்படுகின்றனர். பிரிஸ்கில்லாளின் பெயர் அவள் கணவரின் பெயருக்கு முன்னரே வருவது அவளது முக்கியத்துவத்தைக் குறிப்பதற்காக இருக்கலாம். ஆனாலும் 1 தீமோத்தேயு 2:11-14ல் கூறப்படுவதற்கு முரண்பாடான ஊழிய காரியத்தில் பிரிஸ்கில்லாள் ஈடுபட்டதாக எங்கும் விவரிக்கப்படவில்லை. பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாளும் அப்பொல்லோவை தங்கள் வீட்டினுள் சேர்த்து கர்த்தருடைய வார்த்தையை போதித்து அவனை சீஷத்துவத்துக்குள் நடத்தினார்கள் (அப்போஸ்தலர் நடபடிகள் 18:26).

ரோமர் 16:1 –ல் பெபேயாள் ஊழியக்கார்ருக்குப் பதில் உதவிக்காரர் என்று கருதப்படும்பொழுதுகூட அது சபையிலே பெபேயாள் ஒரு போதகர் என்று குறிப்பதாயில்லை. “போதக சமர்த்தன்” என்பது மூப்பர்களுக்காக கொடுக்கப்பட்ட தகுதியேயன்றி உதவிக்காரருக்குக் கொடுக்கப்பட்டதல்ல (1 தீமோத்தேயு 3:1-13; தீத்து 1:6-9). மூப்பர்கள்/கண்காணிப்பாளர்கள்/உதவிக்காரர் இவர்களைப் பற்றி “ஒரே மனைவியுடைய புருஷனும்”, “பிள்ளைகள் நல்லொழுக்கமுள்ளவர்களாய் கீழ்ப்படியப்பண்ணுகிறவர்களும்”, “மதிக்கப்படத்தக்கவர்களாயும்” என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா தகுதிகளுமே தெளிவாக ஆண்களையே குறிக்கிறது. இதோடு கூட மூப்பர்கள்/கண்காணிப்பாளர்கள்/உதவிக்காரர் பற்றிக் குறிப்பிட 1 தீமோத்தேயு 3:1-13-லும் தீத்து 1:6-9-லும் ஆண்பால் துணைப்பெயர்கள் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன.

1 தீமோத்தேயு 2:11-14வின் கட்டமைப்பு “காரணத்தை” தெளிவுபடுத்துகிறது. 13ஆம் வசனம் “என்னத்திலானெனில்” என்று ஆரம்பித்து 11-12ஆம் வசனங்களில் பவலின் கூற்றுக்கான “காரணங்களைக்” குறிப்பிடுகிறது. எதனால் பெண்கள் போதிக்கவோ, ஆண்கள் மேல் அதிகாரம் செலுத்தவோ கூடாது? ஏனென்றால் “முதலில் ஆதாம் படைக்கப்பட்டான், பின்பு ஏவாள். ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஏவாளே வஞ்சிக்கப்பட்டாள்.” தேவன் ஆதாமை முதலாவதாக படைத்தபின்பு ஏவாளை ஆதாமுக்குத் “துணையாகப்” படைத்தார். படைப்பின் இந்த வரிசையமைப்பு குடும்பங்களுக்கும்(எபேசியர் 5:22-23) சபைக்கும் பொதுவாகப் பொருந்தும். ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள் என்பது பெண்கள் சபைமேய்ப்பர்களாக பொறுப்பேற்கவோ ஆண்களின் மீது அதிகாரம் செலுத்தவோ கூடாது என்பதற்கும் காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் விரைவில் வஞ்சிக்கப்படுபவர்கள் ஆகவே அவர்கள் போதிக்கக்கூடாது என்று சிலரை நம்பவைக்கிறது. இது விவாதத்திற்குரிய கருத்து. பெண்கள் விரைவில் வஞ்சிக்கப்படுபவர்கள் என்றால் குழந்தைகளுக்கும் (விரைவில் வஞ்சிக்கப்படக்கூடியவர்கள்) பெண்களுக்கும் (மிக விரைவில் வஞ்சிக்கப்படக்கூடியவர்கள்) அவர்களை ஏன் போதிக்க அனுமதிக்க வேண்டும். எழுதப்பட்டது இப்படிக் கூறவில்லை. ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள் என்பதால் பெண்கள் ஆண்களுக்குப் போதிக்கவோ ஆண்கள் மேல் அதிகாரம் செலுத்தவோ கூடாது. இதன் காரணமாக, சபையிலே போதிப்பதற்கான் முதன்மையிடத்தை கர்த்தர் ஆண்களுக்கு கொடுத்துள்ளார்.

பல பெண்கள் விருந்தோம்பல், இரக்கம், போதனை, பணிவிடை ஆகிய வரங்களில் சிறந்து விளங்குகின்றனர். உள்ளுர் சபையின் பெரும்பாலான ஊழியம் பெண்களைச் சார்ந்துள்ளது. சபையிலே ஆண்களின் மேல் ஆவிக்குரிய அதிகாரம் செலுத்துவதற்கு மட்டுமே பெண்கள் தடைசெய்யப்படுகின்றனர், பொது இடத்தில் ஜெபிப்பதற்கோ, தீர்க்கதரிசனம் உரைப்பதற்கோ அல்ல (1 கொரிந்தியர் 11:5). பரிசுத்த ஆவியின் வரங்களை உபயோகிப்பதற்கு வேதாகமம் எங்கும் தடைசெய்வதில்லை (1 கொரிந்தியர் 12). மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்கும், ஆவியின் கனியை நிரூபித்துக் காண்பிப்பதற்கும் (கலாத்தியர் 5:22-23), இழந்துபோனவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கவும் (மத்தேயு28:18-20; அப்போஸ்தலர் நடபடிகள்1:8-1; 1 பேதுரு3:15) ஆண்களைப் போலவே பெண்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

சபையிலே ஆவிக்குரிய போதனையை வழங்கும் பதவிகளில் பணியாற்ற கர்த்தர் ஆண்களை மட்டுமே பிரதிஷ்டை செய்துள்ளார். இது ஆண்கள் போதிப்பதில் சிறந்தவர்கள் அல்லது பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்லது அறிவில் குறைந்தவர்கள் (இது உண்மையல்ல) என்பதால் அல்ல. சபை நடைபெறும்படி கர்த்தர் வடிவமைத்த வெறும் ஒரு வழிதான் இது. தங்களுடைய வாழ்க்கையின் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் ஆண்களே ஆவிக்குரிய தலைமைக்கு ஒரு மாதிரி அமைக்க வேண்டும். சற்றே குறைவான அதிகாரமுள்ள பாத்திரங்களை பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் மற்ற பெண்களுக்கு போதிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள் (தீத்து 2:3-5). பெண்கள் குழந்தைகளுக்குப் போதிப்பதையும் வேதாகமம் தடைசெய்வதில்லை. ஆண்களுக்குப் போதிப்பதற்கும் அவர்கள் மேல் ஆவிக்குரிய அதிகாரம் செலுத்துவதற்கும் மட்டுமே பெண்கள் தடைசெய்யப்பட்டுள்ளார்கள். இது தர்க்கரீதியாக மேய்ப்பர்களாகவும் பிரசங்கிகளாகவும் பணியாற்றுவதிலிதிலிருந்து பெண்களை விலக்கிவைக்கிறது. இது பெண்களை எவ்விதத்திலும் மதிப்பில் குறைந்தவர்களாக்கவில்லை, மாறாக் இது அவர்களுக்கு தேவனுடைய ஊழியத்தின் பங்கில் அவருடைய திட்டத்திற்கும் அவர் அவர்களுக்கு அருளும் வரங்களுக்கும் ஏற்ற நோக்கத்தைக் கொடுக்கிறது.

 கேள்வி: தற்கொலையைப் பற்றிய கிறிஸ்தவ கண்ணோட்டம் என்ன? தற்கொலையைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது?

பதில்:
தற்கொலை செய்துகொண்ட ஒரு குறிப்பிட்ட ஆறுபேரைப் பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது. அபிமெலெக்கு (நியாதிபதிகள் 9:54), சவுல் (1 சாமுவேல் 31:4), சவுலின் ஆயுததாரி (1 சாமுவேல் 31:4-6), அகிதோப்பேல் (2 சாமுவேல் 17:23), சிம்ரி (I ராஜாக்கள் 16:18) மற்றும் யூதாஸ் (மத்தேயு 27:5). இதில் ஐந்துபேர் அக்கிரமக்காரரும் பாவிகளுமான மனிதர்கள் (சவுலின் ஆயுத்தாரியின் எப்படிப்பட்டவன் என்று கணிக்கப் போதுமான தகவல் சொல்லப்படவில்லை). சிலர் சிம்சோனின் சாவும் தற்கொலையே (நியாதிபதிகள் 16:23-31) என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிம்சோனின் நோக்கம் தன்னைத்தான் கொல்வது அல்ல, பெலிஸ்தரை கொன்று வீழ்த்துவதுதான். வேதாகமக் கண்ணோட்டத்தில் தற்கொலை, கொலைக்குச் சமம். தன்னைத்தான் கொல்வது என்பதைத் தவிர அது வேறொன்றுமில்லை. ஒரு மனிதன் எப்போது, எப்படி மரிப்பது என்று தீர்மானிப்பது தேவன் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.


வேதாகமத்தின்படி, ஒரு மனிதன் பரலோகத்திற்கு செல்வது என்பதைத் தீர்மானிப்பது தற்கொலை அல்ல. இரட்சிக்கப்படாத மனிதர் தற்கொலை செய்துகொண்டால் அவர் நரகத்திற்கு செல்வதைத் “துரிதமாக்கிக்கொண்டார்” என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனாலும் அந்த மனிதர் தற்கொலை செய்துகொண்டதற்காக அல்ல, கிறிஸ்துவின் மூலமாய் வரும் இரட்சிப்பை நிராகரித்தார் என்பதற்காகவே நரகத்திலிருப்பார். தற்கொலை செய்துகொள்ளும் ஒரு கிறிஸ்தவரைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? நாம் உண்மையாகவே கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொள்ளும் நிமிடத்திலிருந்தே நமக்கு நித்திய ஜீவனின் நிச்சயம் கிடைக்கிறது என்று வேதாகமம் போதிக்கிறது (யோவான் 3:16). வேதாகமத்தின்படி, நித்திய ஜீவன் நமக்கு உண்டு என்பதை எந்த சந்தேகமுமின்றி கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ளலாம் (1 யோவான் 5:13). தேவனுடைய அன்பைவிட்டு ஒரு கிறிஸ்தவனை எதுவும் பிரிக்க இயலாது (ரோமர் 8:38-39). “உண்டாக்கப்பட்ட எதுவும்” தேவனுடைய அன்பைவிட்டு ஒரு கிறிஸ்தவரைப் பிரிக்க முடியாது என்றால், தற்கொலை கூட ஒரு கிறிஸ்தவரைத் தேவனுடைய அன்பைவிட்டு பிரிக்க இயலாது. இயேசு நம்முடைய எல்லோருடைய பாவங்களுக்காகவும் மரித்தார். ஆகவே ஆன்மீகத் தாக்குதலும் பலவீனமும் நிகழும் ஒரு நேரத்தில் ஒரு கிறிஸ்தவர் தற்கொலை செய்துகொண்டாலும் அது இன்னமும் கிறிஸ்துவின் இரத்தால் மறக்கப்பட்ட பாவமாகவே அது இருக்கிறது.

தற்கொலை இன்னமும் தேவனுக்கெதிரான ஒரு கடுமையான பாவம். வேதாகமத்தின்படி, தற்கொலை என்பது கொலையே, அது எப்போதுமே தவறானது. கிறிஸ்தவர் என்று கூறிக்கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொல்லும்போது அவரது விசுவாசம் எப்படிப்பட்டது என்பதைக் குறித்தான கடுமையான சந்தேகங்களை எழுப்பத்தான் வேண்டும். தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் ஒருவரை, குறிப்பாக ஒரு கிறிஸ்தவரை, எந்தச் சூழ்நிலையும் நியாயப்படுத்த முடியாது. தேவனுக்காக வாழ்க்கையை வாழ்வது என்பதற்காகவே கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, எப்பொழுது மரிக்க வேண்டும் என்ற தீர்மானம் கர்த்தருடையது, கர்த்தருடையாதக மட்டுமே இருக்க வேண்டும். தற்கொலையைப் பற்றி விவரிக்கவில்லையெனினும், தற்கொலை செய்துகொள்ளும் ஒரு கிறிஸ்தவருக்கு நடப்பது என்ன என்பதைப் பற்றி 1 கொரிந்தியர் 3:15 நன்றாகவே விவரிக்கிறது: “அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியலக்கப்பட்டு தப்பினது போலிருக்கும்.”

கேள்வி: நித்திய பாதுகாப்பு வேதாகமப்படியானதுதானா?

பதில்:
மக்கள் கிறிஸ்துவை இரட்சகராக அறிந்துகொள்ளும்பொழுது, நித்திய பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கும், தேவனோடு கூடிய ஒர் உறவுக்குள் கொண்டுவரப் படுகிறார்கள். “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்” என்று யூதா 24 அறிவிக்கிறது. கர்த்தரின் வல்லமை விசுவாசியை வழுவாமல் காக்க முடியும். தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே நம்மை நிறுத்துவது அவரைப் பொறுத்தது, நம்மைப் பொறுத்ததன்று. நமது நித்திய பாதுகாப்பு நாம் நம்முடைய இரட்சிப்பை பாதுகாத்துக்கொள்வதல்ல, அது கர்த்தர் நம்மைக் காப்பதன் விளைவு.


“நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.” (யோவான் 10:28-29) என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உரைக்கிறார். இயேசுவும் பிதாவும் தங்களுடைய கரங்களில் நம்மை உறுதியாகப் பிடித்திருக்கிறார்கள். பிதா, குமாரன் இருவருடைய இறுக்கமான பிடியிலிருந்து நம்மைப் பிரிப்பவர் யார்?

விசுவாசிகள் “மீட்பின் நாளுக்கென்று முத்திரையிடப்பட்டிருக்கிறார்கள்” என்று எபேசியர் 4:30 கூறுகிறது. விசுவாசிகளுக்கு நித்திய பாதுகாப்பு இல்லையெனில், முத்திரையிடப்படுவது மீட்பின் நாளுக்கென்பதாக உண்மையில் அல்ல, வெறும் பாவத்தில் விழும், விசுவாசத்தை மறுதலிக்கும், நம்பிக்கை இழக்கும் நாள்வரை என்றுதான் இருக்க முடியும். யாரெல்லாம் இயேசுக் கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு “நித்திய ஜீவன் உண்டு” என்பதாக யோவான் 3:15-16 கூறுகிறது. ஒருவருக்கு நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டு பின்னர் அது எடுக்கப்பட்டுவிடுமெனில் அது முதலாவது “நித்தியமாக” இருக்கமுடியாது. நித்திய பாதுகாப்பு உண்மையில்லையெனில், வேதாகமத்தில் நித்திய ஜீவனைக் குறித்தான வாக்குத்தத்தங்கள் அனைத்தும் தவறானதாக இருக்கும்.

நித்திய பாதுகாப்புக்கான மிக வலிமையான வாதம் ரோமர் 8:38-39 ஆகும், “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ளா தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். நமது நித்திய பாதுகாப்பு, தம்மாலே மீட்கப்பட்டவர்களுக்கான கர்த்தருடைய அன்பை ஆதாரமாகக் கொண்டது. நமது நித்திய பாதுகாப்பு, கிறிஸ்துவாலே சம்பாதிக்கப்பட்டும், பிதாவாலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டும், பரிசுத்த ஆவியினாலே முத்திரையிடப்பட்டுமிருக்கிறது.

கேள்வி: மரணத்திற்குப்பின் நடப்பது என்ன?

பதில்:
மரணத்திற்குப்பின் நடப்பது என்ன என்பதைக் குறித்து கிறிஸ்தவ மதத்திற்குள்ளேயே கொஞ்சம் குழப்ப நிலைதான் உள்ளது. சிலர் மரணத்திற்குப்பின் கடைசி நியாயத்தீர்ப்பு வரை எல்லோரும் "நித்திரையடைகிறார்கள்", அதன்பின்பு பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனைவரும் அனுப்படுவார்கள் என்று கருதுகிறார்கள். வேறு சிலர் மரிக்கும் தருணத்தில்தானே மனிதர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு தங்களது நித்திய குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள். இன்னும் சிலர் மனிதர்கள் இறக்கும்பொழுது, கடைசி உயிர்த்தெழுதலுக்கும் கடைசி நியாயத்தீர்ப்பிற்கும், இறுதியாக, தங்கள் நித்திய குடியிருப்புக்கும் காத்திருக்கும்படி ஒரு "தற்காலிகமான" பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனுப்படுகிறார்கள் என்று கோருகிறார்கள். ஆகமொத்தம், மரணத்திற்குப்பின் நடப்பது என்ன என்பதைக் குறித்து வேதாகமம் என்னதான் சொல்லுகிறது?


முதலாவது, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது என்னவென்றால் மரணத்திற்குப்பின் விசுவாசிகளுடைய ஆத்துமா/ஆவி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனென்றால், கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்பதினால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன (யோவான் 3:16,18,36). விசுவாசிகளுக்கு, மரணம் என்பது "இந்த தேகத்திலிருந்து குடிபோகுதலும் கர்த்தரிடத்தில் குடியிருத்தலுமாம்" (2கொரிந்தியர் 5:6-8; பிலிப்பியர் 1:23). ஆனால், 1கொரிந்தியர் 15:50-54 மற்றும் 1தெசலோனேக்கியர் 4:13-17 போன்ற வேதபகுதிகள் விசுவாசிகள் மறுபடி எழுந்திருப்பதையும் மகிமையின் தேகம் கொடுக்கப்படுவதையும் விவரிக்கின்றன. விசுவாசிகள் மரித்தவுடனே கிறிஸ்துவோடுகூட இருக்கச் செல்வார்கள் என்றால், இந்த எழுந்திருக்குதலின் நோக்கம் என்ன? இப்படியிருக்கையில், மரித்தவுடன் விசுவாசிகளின் ஆத்துமா/ஆவி கிறிஸ்துவுடனே இருக்கச் செல்லுகிறதென்றும், மாம்சசரீரம் கல்லறையில் "நித்திரையில்" இருக்கும் என்று தோன்றுகிறது. விசுவாசிகளின் எழுந்திருக்குதலின்போது மாம்சசரீரமானது உயிர்த்தெழப்பட்டு, மகிமையடைந்து பின்பு ஆத்துமா/ஆவியுடன் மறுபடி இணைக்கப்படுகிறது. மீண்டுமாய் இணைக்கப்பட்ட இந்த மகிமையின் ஆவி ஆத்துமா சரீரமே புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகும்பொழுது விசுவாசிகள் சுதந்தரித்துக்கொள்ளும் நித்திய சொத்தாயிருக்கும் (வெளிப்படுத்தின விசேஷம் 21-22).

இரண்டாவது, இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு மரணம் என்பதன் பொருள் நித்திய ஆக்கினை. ஆனாலும், விசுவாசிகளுக்கு நடப்பதைப்போலவே, அவிசுவாசிகளும் தங்களுடைய கடைசி உயிர்த்தெழுதலுக்கும், நியாயத்தீர்ப்பிற்கும், நித்தியமாக வாழும்நிலைக்கும் காத்திரும்படி ஒரு தற்காலிகமான ஒரு குடியிருப்புக்கே அனுப்பப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. லூக்கா 16:22-23 ஐசுவரியமுள்ள மனுஷன் மரித்தவுடனே வேதனைக்குள்ளாகிறதாக கூறுகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 மரித்த அவிசுவாசிகள் அனைவரும் உயிர்தெழப்பட்டு, வெள்ளைச் சிங்காசனத்தின் முன் நியாயந்தீர்க்கப்பட்டு பின்பு அக்கினிக்கடலிலே தள்ளப்படுவதாக விவரிக்கிறது. ஆகவே அவிசுவாசிகள் மரித்தவுடனேயே நரகத்திற்கு (அக்கினிக்கடல்) அனுப்பப்படுவதில்லை பதிலாக நியாயத்தீர்ப்பிற்கும் தண்டனைக்குமெனெ ஒரு தற்காலிகமான இடத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவிசுவாசிகள் உடனடியாக அக்கினிக்கடலுக்கு அனுப்பப்படவில்லையெனினும் மரணத்திற்கு அடுத்த நிலை என்பது இன்பமானது ஒன்றுமில்லை. "இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே" (லூக்கா 16:24) என்றுதான் அந்த ஐசுவரியமுள்ள மனுஷனும் கூப்பிட்டான்.

ஆகவே, மரணத்திற்குப் பின்பு, ஒரு மனிதர் ஒரு "தற்காலிகமான" பரலோகத்திலோ, நரகத்திலோ வசிக்கிறார். இந்த தற்காலிகமான இடத்திற்குப்பின் கடைசி உயிர்தெழுதலின்போது அவருடைய நித்தியமாக வாழும்நிலையில் மாற்றம் இருக்காது. நித்தியமாக வாழும்படி குறிப்பிடப்படும் "இடத்தில்" மட்டுமே மாற்றம் இருக்கும். விசுவாசிகள் புதிய வானத்திலும் புதிய பூமியிலும் நுழையும்படி இறுதியாக அனுமதி பெறுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 21:1). அவிசுவாசிகள் அக்கினிக்கடலுக்கு இறுதியாக அனுப்பப்படுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15). இதுவே மனிதர்களின் இறுதியான, நித்தியமான குடியிருப்பு - இது அவர்கள் இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்துவில் மாத்திரம் நம்பிக்கை கொண்டிருந்தார்களா என்பதை மட்டுமே பொறுத்தமைகிறது (மத்தேயு 25:46; யோவான் 3:36). 

கேள்வி: செல்லப் பிராணிகள்/ மிருகங்கள் பரலோகத்திற்கு செல்லுமா? பிராணிகள்/ மிருகங்களுக்கு ஆத்துமாக்கள் உண்டா?

பதில்:
செல்லப் பிராணிகள்/ மிருகங்களுக்கு ஆத்துமாக்கள் உண்டா, செல்லப் பிராணிகள்/ மிருகங்கள் பரலோகத்தில் காணப்படுமா என்பவை பற்றி வெளிப்படையான போதனை வேதாகமத்தில் இல்லை. இருந்தாலும், பொதுவான வேதாகமக் கோட்பாடுகளை வைத்து இந்த காரியத்தைப் பற்றிய தெளிவை உண்டாக்கலாம். மனிதனும் (ஆதியாகமம் 2:7) மிருகங்களும் (ஆதியாகமம் 1:30; 6:17; 7:15, 22) ஜீவ சுவாசத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்னவெனில் மனிதன் தேவனுடைய சாயலாகவும் அவரின் ரூபத்தின் படியும் படைக்கப்பட்டான் (ஆதியாகமம் 1:26-27), ஆனால் மிருகங்களோ அப்படியல்ல. மனிதர் தேவனுடைய சாயலாகவும் அவரின் ரூபத்தின் படியும் படைக்கப்பட்டவர் என்பதால் ஆவிக்குரிய தன்மை, சிந்தை, உணர்வு மற்றும் விருப்பம் உள்ளவர்கள். மரணத்திற்குப் பின்னும் நிலைத்திருக்கும் ஒரு பகுதியை தங்களின் சுயத்தில் பெற்றுள்ளனர். ஆனால் செல்லப் பிராணிகள்/ மிருகங்களுக்கு “ஆத்துமா” அல்லது உடலல்லாத ஒரு அம்சம் இருக்குமேயானாலும் அதன் “குணம்” வேறாகவும், குறைந்த்தாகவுமே இருக்கமுடியும். செல்லப் பிராணிகள்/ மிருகங்களின் “ஆத்துமாக்கள்” மரித்தபின் நிலைப்பதில்லை என்பதே இந்த வேறுபாட்டின் பொருளாக இருக்க முடியும்.


ஆதியாகமத்திலுள்ள கர்த்தரின் சிருஷ்டிப்புச் செயல்முறையில் மிருகங்களும் ஒன்று என்பது நாம் கருத்தில்கொள்ள வேண்டிய இன்னொரு காரணம். தேவன் மிருகங்களைப் படைத்தபின்பு அது நல்லது என்று கண்டார் (ஆதியாகமம் 1:25). ஆகவே புதிய பூமியிலே (வெளிப்படுத்தின விசேஷம் 21:1) பிராணிகள் இருக்கக்கூடாது என்பதற்கான எந்தக் காரணமுமில்லை. ஆயிரமாண்டு ஆட்சியிலும் (ஏசாயா 11:6; 65:25) நிச்சயமாகவே மிருகங்கள் இருக்கலாம். இவைகளில் சில நாம் இந்த பூமியில் வைத்திருந்த செல்லப்பிராணிகளாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. கர்த்தர் நீதியுள்ளவர் ஆகவே இந்த விஷயத்தில் அவரது முடிவு என்னவானாலும் சரி அது நாம் பரலோகத்திற்குச் சென்றடையும்போது முழுவதும் ஒப்புக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கும்.

கேள்வி: பச்சைகுத்திக்கொள்ளுதல் அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதல் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்:
“செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக” (லேவியராகமம் 19:28) என்று பழைய ஏற்பாடு இஸ்ரவேலருக்கு கட்டளை கொடுக்கிறது. ஆகையால், இன்றைய விசுவாசிகள் பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு கீழே இல்லையென்றாலும் (ரோமர் 10:4; கலாத்தியர் 3:23-25; எபேசியர் 2:15) உடம்பில் குத்திக்கொள்வதைப் பற்றி ஒரு கட்டளை இருந்தது என்னும் உண்மை சில கேள்விகளை எழுப்பத்தான் செய்யும். ஒரு விசுவாசி உடம்பில் குத்திக்கொள்ள வேண்டுமோ இல்லையோ என்பதைப் பற்றி புதிய ஏற்பாடு எதுவும் கூறவில்லை.


பச்சைகுத்திக்கொள்ளுதல் அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதல் பற்றிய விஷயத்தில், நாம் தூய்மையான மனசாட்சியுடனே, நேர்மையாக கர்த்தரிடத்தில் அவருடைய நல்லநோக்கங்களுக்காக அந்தக் காரியத்தை ஆசீர்வதிக்கும்படி தீர்மானிக்க முடியுமா என்பது ஒரு நல்ல சோதனையாக் இருக்கும். “ஆகையால் நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர் 10:31). புதிய ஏற்பாடு பச்சைகுத்திக்கொள்ளுதல் அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதல் போன்றவற்றிர்க்கு எதிராக கட்டளையிடவில்லையெனினும் கர்த்தர் நம்மை பச்சைகுத்திக்கொள்ளவும் அலகு/உடம்பு குத்திக்கொள்ளவும் அனுமதிப்பார் என்று நம்ப ஒரு காரணமும் சொல்லவில்லை.

வேதாகமம் நேரடியாகக் குறிப்பிடாத காரியங்களில், இது கர்த்தருக்குப் பிரியமானதாக இருக்குமோ இல்லையோ என்று சந்தேகம் வருமாயின் அதைப் போன்ற காரியங்களில் ஈடுபடாமலிருப்பதே நல்லது என்பது ஒரு முக்கியமான வேதாகமக் கோட்பாடு. விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே என்று ரோமர் 14:23 நினைவுறுத்துகிறது. நமது சரீரம் மற்றும் ஆத்துமா தேவனாலே மீட்கப்பட்டது, அவருக்குச் சொந்தமானது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். 1 கொரிந்தியர் 6:19-20 பச்சைகுத்திக்கொள்ளுதல் அல்லது அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதலைப் பற்றி நேரடியாக் கூறவில்லையெனினும் இது நமக்கு ஒரு கோட்பாட்டை நிச்சயமாகவே வலியுறுத்துகிறது. “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.” இந்த பெரிய உண்மை நாம் நம்முடைய இந்த சரீரத்தை வைத்து என்ன செய்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதின் மேல் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். நமது சரீரம் தேவனுக்குச் சொந்தமானது என்றால், நாம் பச்சை/அலகு அல்லது உடம்பு குத்திக் அடையாளம் இட்டுக்கொள்ளும்பொழுது நமது தேவனின் தெளிவான அனுமதி நமக்கிருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

கேள்வி: காயீனின் மனைவி யார்? காயீனின் மனைவி அவனது சகோதரியா?

பதில்:
காயீனின் மனைவி யாரென்பதை வேதாகமம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவனது சகோதரியோ, மருமகளோ அல்லது பேத்தியோ போன்றவர்தாம் காயீனின் மனைவியாக இருந்திருக்க முடியும் என்ற ஒரே பதில்தான் இங்கு சாத்தியம். காயின் ஆபேலைக் கொலை செய்தபோது (ஆதியாகமம் 4:8) அவனது வயது என்ன என்பதையும் வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை. இருவரும் விவசாயிகள் என்பதனால் இருவரும் வயது வந்தவர்கள் எனலாம். சொந்தக் குடும்பமும் இருந்திருக்கலாம். ஆபேல் கொலை செய்யப்பட்டபோது, காயீனையும் அபேலையும் தவிர ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வேறு குழந்தைகளும் இருந்தார்கள் என்பது தெளிவு. நிச்சயமாகவே பின்பு இன்னும் பல குழந்தைகளைப் பெற்றார்கள் (ஆதியாகமம் 5:4). ஆபேலைக் கொலை செய்தபின் காயீன் தன் உயிருக்குப் பயந்திருந்தான் (ஆதியாகமம் 4:14) என்னும் உண்மை அப்பொழுதே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மேலும் பல குழந்தைகள் இருந்திருப்பார்கள், சொல்லப்போனால் பேரக்குழந்தைகளும் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. காயீனின் மனைவி (ஆதியாகமம் 4:17) ஆதாம் ஏவாளுடைய மகளோ அல்லது பேத்தியோதான்.


ஆதாமும் ஏவாளும் மட்டுமே முதலாவது படைக்கப்பட்ட மனிதர்கள் என்பதால் அவர்களது குழந்தைகளுக்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. மக்கள்தொகை அதிகமாகி குடும்பத்திற்குள்ளேயே திருமண உறவு ஏற்படுத்திக்கொள்வது தேவையில்லை (லேவியராகமம் 18:6-18) என்ற காலம் வரும்வரை குடும்பத்திற்குள்ளேயே எற்படும் திருமண உறவை கர்த்தர் தடுக்கவில்லை. மிகவும் நெருங்கிய, முறையில்லாத உறவினர்களிடையில் நிகழும் சேர்க்கை இக்காலத்தில் அதிகமாக மரபியல் சீர்கேடுகளில் முடிகிறது எதனாலெனில், ஒரே மரபியற்குழுவைச் சேர்ந்த இரண்டுபேர் (எ.கா. ஒரு சகோதரனும் சகோதரியும்) சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, கோளாறான குணங்கள் ஆற்றலடையும் ஆபத்தான நிலை உருவாகிறது. வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்தஅவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்போது பெற்றோர்கள் இருவரும் ஒரே கோளாறு பண்புகளைக் கொண்டிருக்கும் நிலைமை மிகக்குறைவு. மனிதகுல மரபியல் குறியீடு “மாசுபடுதல்” அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆண்டுகள் நூற்றாண்டுகளாக மரபணு குறைவுகள் தலைமுறை தலைமுறைகளாக பல மடங்குகளாக உயர்ந்து, பூதாகரமாக மாறிவிட்டது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எந்த மரபணுக்குறைவும் இருக்கவில்லை. அதனால் அவர்களும், அவர்களது சந்ததியில் அடுத்து வந்த சில தலைமுறைகளும் நமக்கு இன்று இருப்பதைவிட நல்ல ஆரோக்கியமான உடல்நிலை இருந்தது. ஆதாம் ஏவாளின் குழந்தைகளுக்கு எந்த மரபணுக் குறையும் இருக்கவில்லை. அதன் பலனாக குடும்பத்திற்குள்ளே நெருங்கிய உறவினர்களுக்கிடையே திருமணம் செய்துகொள்வது பாதுகாப்பானதாக இருந்தது.

கேள்வி: சுயப்புணர்ச்சி – வேதாகமத்தின்படி இது பாவமா?

பதில்:
வேதாகமம் (மூலம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்) சுயப்புணர்ச்சியைப் பற்றி குறிப்பிடுவதும் இல்லை சுயப்புணர்ச்சி பாவமா இல்லையா என்று கூறுவதும் இல்லை. சுயப்புணர்ச்சி குறித்த விஷயத்தில் அதிகமாக சுட்டிக்காட்டப்படும் வேதாகமப் பகுதி அதியாகம்ம் 38:9-10 ல் கூறப்படும் ஓனானின் கதை. தரையிலே “தன் வித்தை விழவிடுவது” பாவம் என்று சிலர் இந்தப் பகுதியின் விளக்கமாக அர்த்தஞ்சொல்லுவர். ஆயினும் இந்தப் பகுதி குறிப்பாய்ச் சொல்லுவது இதல்ல. “வித்தை தரையில் விழவிட்டதற்காக” கர்த்தர் ஓனானைத் கண்டிக்கவில்லை, மாறாக, தன் சகோதரனுக்கு சந்த்தியை உண்டாக்க வேண்டிய கடமையிலிருந்து தவறியதற்கே கர்த்தர் அவ்வாறு செய்தார். இந்த பகுதி சுயப்புண்ர்ச்சியைப் பற்றியதில்லை மாறாக ஒரு குடும்ப கடமையை நிறைவேற்றுவதைப் பற்றியதே. சுயப்புணர்ச்சி பாவம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் இரண்டாவது பகுதி மத்தேயு 5:27-30. இச்சைச் சிந்தனைகளை கொண்டிருப்பதற்கு எதிராக இயேசு பேசிவிட்டு பின்பு “உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால் அதை தறித்து எறிந்துபோடு” என்கிறார். இந்தப் பகுதிக்கும் சுயப்புணர்ச்சிக்கும் இடையில் இணை இருந்தாலும் இயேசு சுயப்புணர்ச்சியைத்தான் சுட்டிக்காட்டுகிறார் என்று கூறுவதற்கில்லை.


சுயப்புணர்ச்சி பாவம் என்று வேதாகமம் வெளிப்படையாக எங்கும் சொல்லவில்லையானாலும், சுயப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லும் செயல்கள் பாவமா என்பதைப் பற்றியும் ஒரு கேள்வியுமில்லை? இச்சையான சிந்தனை, பாலுணர்வுத் தூண்டல்கள் மற்றும் அல்லது நிர்வாண உடலுறவுக் படங்கள் போன்றவைகள்தான் அதிகமாக சுயப்புணர்ச்சிக்கு இட்டுச் செல்வன. இந்த பிரச்சினைகளையே சரி செய்ய வேண்டியிருக்கிறது. இச்சையினால் வரும் பாவங்களையும், ஒழுக்கந்தவறிய சிந்தனைகளையும், ஆடை நிர்வாண உடலுறவுக் காட்சிகள் ஆகியவற்றை கைவிடமுடியுமானால் சுயப்புணர்ச்சி ஒர் பிரச்சினையே இல்லை. மனிதர்கள் பலரும் சுயப்புணர்ச்சி சம்பந்தப்பட்ட குற்ற உணர்வுடனே போராடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் உண்மையில், சுயப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லும் விஷயங்களே அதிகமாக மனந்திரும்ப வேண்டியவைகளாக இருக்கின்றன.

சுயப்புணர்ச்சி பிரச்சினை பற்றி நோக்க சில வேதாகமக் கோட்பாடுகள் உண்டு. “வேசித்தனமும் மற்றெந்த அசுத்தமும் ஆகிய பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவும்கூடாது” என்று எபேசியர் 5:3 அறிவிக்கிறது. இந்த கடினமான சோதனைக்கு சுயப்புணர்ச்சி எப்படி தப்பித்துக்கொள்ள முடியும் என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை. “ஆகையால் புசித்தாலும், குடித்தாலும், என்னத்தைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர்10:31) என்று வேதாகமம் கூறுகிறது. எந்த காரியத்தில் கர்த்தருக்கு மகிமை கொடுக்கமுடியாதோ அதைச் செய்யக்கூடாது. ஆகவே ஒரு காரியம் தேவனுக்குப் பிரியமானது என்று முழுமையாக ஒப்புக்கொள்ள ஒரு மனிதருக்கு முடியாத பட்சத்தில் அந்தக் காரியம் பாவமே: “விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே” (ரோமர் 14:23). மேலும் நாம் நினைவில் கொள்ளவேண்டியது நம் உடல் கர்த்தரால் மீட்கப்பட்டதும் அவருக்குச் சொந்தமானதுமாகும். “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரிந்தியர் 6:19-20). இந்த பெரிய உண்மை நாம் நம்முடைய உடலை வைத்து என்ன செய்கிறோம் என்பதின் மேல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவேண்டும். இந்தக் கோட்பாடுகளை வைத்துப் பார்க்கும்பொழுது, சுயப்புணர்ச்சி பாவம் என்ற முடிவு வேதாகமப்படி சரிதான். தெளிவாகவே, சுயப்புணர்ச்சி கர்த்தருக்கு மகிமையை கொண்டு வருவதில்லை; ஒழுக்கந்தவறுகிறது போன்ற தோற்றத்தை அது தவிர்ப்பதுமில்லை, நம் உடல் கர்த்தருக்குச் சொந்தமானது என்ற சோதனையையும் இது தாண்டுவதில்லை.

கேள்வி: ஓரினச்சேர்க்கையைக் குறித்து வேதாகம்ம் என்ன சொல்லுகிறது? ஓரினச் சேர்க்கை பாவமா?

பதில்:
ஓரினச்சேர்க்கைச் செயல் பாவம் என்ற ஒரே கருத்தையே வேதாகமம் கூறிவருகிறது. (ஆதியாகமம் 19:1-13; லேவியராகமம் 18:22; ரோமர் 1:26-27; 1கொரிந்தியர் 6:9). கர்த்தரை மறுதலிப்பதும் கர்த்தருக்குக் கீழ்படியாமலிருப்பதின் விளைவுதான் ஓரினச்சேர்க்கை என்று ரோமர் 1:26-27 குறிப்பிட்டு போதிக்கிறது. மனிதர்கள் தொடர்ந்து பாவத்திலும் அவிசுவாசத்திலும் இருக்கும்பொழுது, கர்த்தரைவிட்டு பிரிந்து வாழும் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமற்றதும் நம்பிக்கையற்றதுமாகிறது என்பதைக் காண்பிக்கும்பொருட்டு கர்த்தர் அவர்களை துன்மார்க்கமும் தகாததுமாதுமான பாவத்திற்கு “ஒப்புக் கொடுக்கிறார்”. ஓரினச்சேர்க்கைப் “பாவம் செய்தவர்கள்” பரலோகராஜ்ஜியத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று 1கொரிந்தியர் 6:9 அறிவிக்கிறது.


ஓரினச்சேர்க்கை இச்சையுடையவனாக கர்த்தர் ஒரு மனிதரைப் படைப்பதில்லை. மனிதர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறுவதற்கு பாவமும் அவர்களது சொந்த விருப்பமும் தேர்வுமுமே இறுதியான காரணங்கள் என்று வேதாகமம் கூறுகிறது (ரோமர் 1:24-27). சில மனிதர்கள் பிறக்கும்பொழுதே வன்முறையிலும் மற்ற பாவங்களிலும் நாட்டமுடையவர்களாக பிறப்பதுபோல் ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுடையவராக பிறக்கலாம். இதை வைத்துக்கொண்டு ஒரு மனிதர் பாவ இச்சைகளுக்கு இடம் கொடுத்து பாவம் செய்ய விளைவதை அனுமதிக்க முடியாது. ஒரு மனிதர் பிறக்கும்பொழுதே மூர்க்கம்/கோபக் குணமுடையவராக இருந்தது பின்பு அவர் அந்த குணங்களுக்கு அடிமைபடுவதை சரி என்றாக்கிவிடுமா? இல்லவே இல்லை. ஓரினச்சேர்க்கையும் அதுபோலத்தான்.

ஆகிலும் மற்றெந்த பாவத்தையும்விட ஓரினச்சேர்க்கையை “பெரிதான” பாவம் என்று வேதாகமம் கூறவில்லை. எல்லாப் பாவமும் தேவனுக்கு விரோதமானதுதான். 1 கொரிந்தியர் 6:9-10-ல் பட்டியலிடப்படும் தேவனுடைய ராஜ்ஜியத்தைவிட்டு மனிதனைப் பிரிக்கும் பல காரியங்களில் ஒன்றுதான் ஓரினச்சேர்க்கை. ஒரு விபச்சாரிக்கும், விக்கிரகாராதனைக்கார்ருக்கும், கொலைகாரருக்கும், திருடர் போன்றவர்க்கும் தேவனுடைய மன்னிப்பு உண்டோ அப்படியே ஓரினச்சேர்க்கையாளருக்கும் உண்டு என்று வேதாகமம் கூறுகிறது. பாவத்தின்மேல் ஜெயத்திற்காக அளிக்கப்படும் பெலனை, ஓரினச்சேர்க்கையாளர்களையும் சேர்த்து, தங்களுடைய இரட்சிப்பிற்காக இயேசுக்கிறிஸ்துவில் விசுவாசங்கொள்ளுகிறவர்கள் எல்லோருக்கும் தேவன் வாக்குத்தத்தம் பண்ணுகிறார் (1 கொரிந்தியர் 6:11; 2 கொரிந்தியர் 517; பிலிப்பியர் 4:13).


 

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular