Tamil christian song ,video songs ,message ,and more

வெள்ளி, 24 ஜூன், 2011

கேள்வி பதில்கள் 1 - நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறீர்களா?

கேள்வி: நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறீர்களா?

பதில்:
நித்திய வாழ்விற்கான தெளிவான பாதையை வேதாகமம் நமக்கு காட்டுகிறது. முதலாவது, நாம் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்: ஏனெனில் "எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானோம்" (ரோமர். 3:23) தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நாம் செய்தோம், அது நம்மை தண்டனைக்கு உரியவர்களாக மாற்றுகிறது. நம் பாவங்கள் அனைத்தும் அநாதி தேவனுக்கு எதிரானவையாக இருக்கிற படியால், நித்திய தண்டனை மாத்திரமே சரியான தண்டனையாக இருக்கிறது. "பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவினால் உண்டான நித்திய ஜீவன்" (ரோமர் 6:23).


நித்திய தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து பாவமில்லாதவராக(1பேதுரு 2:22) இருந்த போதிலும், ஒரு மனிதனாகப் பிறந்து நமது தண்டனைக்கான கிரயத்தை செலுத்தும் படி மரித்தார். "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர் 5:8). நமக்கு உரிய தண்டனையை தம்மீது ஏற்றுக் கொண்டு (2கொரிந்தியர் 5:21),இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் (யோவான் 19:31- 42). மூன்றாம் நாட்களுக்குப் பின் அவர் மரித்தோரிலிருந்து எழும்பி(1கொரிந்தியர் 15:1-4) பாவத்தின் மேலும், மரணத்தின் மேலும் வெற்றி சிறந்ததை நிரூபித்தார். "அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, ... ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்"(1பேதுரு 1:4).

நாம் இரட்சிப்பைப் பெறும்படிக்கு, இயேசு யார், அவர் என்ன செய்தார், ஏன் செய்தார் என்பன போன்ற கிறிஸ்துவைக் குறித்த காரியங்களில் நாம் நம் சிந்தனையை விசுவாசத்தின் மூலமாக மாற்ற வேண்டும் (அப்போஸ்தலர் 3:19). நாம் நமது விசுவாசத்தை அவரில் வைத்து, நமது பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரித்தார் என்பதை நாம் நம்பினால், நாம் மன்னிப்பைப் பெற்று பரலோகத்தில் உள்ள நித்திய வாழ்வைக் குறித்த வாக்குத்தத்ததை பெறுவோம். "தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்ப கூர்ந்தார்" (யோவான் 3:16). " கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் "(ரோமர் 10:9). சிலுவை மீது கிறிஸ்து செய்துமுடித்தவற்றில் உள்ள விசுவாசம் மாத்திரமே நித்திய வாழ்வுக்கான ஒரே பாதை ஆகும். "கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இரு தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8,9).

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

கேள்வி: மன்னிப்பு பெற்றுவிட்டீர்களா? தேவனிடம் இருந்து நான் மன்னிப்பு பெறுவது எப்படி?

பதில்:
ஆதலால் சகோதரரே, இவர் (இயேசு) மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறது" என்று அப்போஸ்தலர் 13:38 சொல்கிறது


மன்னிப்பு என்றால் என்ன? அது எனக்கு அவசியமானதாக இருப்பது ஏன்?

மன்னிப்பு என்ற வார்த்தை கடந்தகால தவறுகளை மறந்து புதிய காரியங்களைச் செய்ய ஆரம்பித்தல், மன்னித்தல், கடனை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. எவரிடமாவது நாம் தவறு இழைத்திருந்தால் அவருடனான நல் உறவில் நிலைத்திருக்க அவரிடம் மன்னிப்பு எதிர்பார்க்கிறோம். ஒரு நபர் மன்னிக்கப்படத்தக்கவர் என்பதினால் மன்னிப்பு கொடுக்கப்படுவதில்லை எவரும் மன்னிப்பைப் பெற தகுதியானவர்கள் அல்ல. மன்னிப்பு என்பது அன்பு இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு செயல் ஆகும். மன்னிப்பு என்பது பிறர் நமக்கு என்ன செய்திருந்தாலும் அவருக்கு விரோதமாக மனதில் எதையும் வைத்திக் கொள்ளாதிருக்கும்படி எடுக்கும் ஒரு தீர்மானம் ஆகும்.

நாம் அனைவரும் தேவனிடமிருந்து மன்னிப்பை பெற வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று வேதாகமம் நமக்கு சொல்கிறது. நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யதக்க நீதிமான் பூமியிலில்லை" என்று பிரசங்கி 7:20 அறிவிக்கிறது. "நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிகிறவர்களாயிருப்போம் சத்தியம் நமக்குள் இராது." என்று 1யோவான் 1:8 கூறுகிறது.அடிப்படையில் எந்த ஒரு பாவமும் தேவனுக்கு விரோதமான செயலாயிருக்கிறது (சங்கீதம் 51:4). இதன் விளைவாக, நமக்கு தேவனின் மன்னிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லையெனில், நாம் நமது பாவங்களின் விளைவுகளினால் வேதனைப்பட்டுக்கொண்டு நமது நித்தியத்தன் கழிபோம் (மத்தேயு 25:46, யோவான் 3:36).

மன்னிப்பு - நான் பெறுவது எப்படி?

தேவன் அன்புள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் - நம் பாவங்களை மன்னிக்க ஆவலாகவும் இருக்கிறார். "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்" என்று நமக்கு 2பேதுரு 3:9 சொல்கிறது. தேவன் நம்மை மன்னிக்க விரும்புகிறார். ஆகவே நம் மன்னிப்புக்கு தேவையானவற்றை அவர் அளித்தார்.

நமது பாவங்களுக்கான சரியான தண்டனை மரணமே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர்6:23 அறிவிக்கிறது. நாம் நமது பாவங்களினால் சம்பாதித்தது நித்திய மரணம் ஆகும். ஆனால் தேவன் தமது பரிபூரண திட்டத்தில், இயேசுகிறிஸ்துவாக ஒரு மனிதனானார்(யோவான் 1:1,14). நமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" என்று 2கொரிந்தியர் 5:21 நமக்கு போதிக்கிறது. அமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். தேவனைப் பொறுத்தவரையில், முழு உலகத்தின் பாவத்திற்கும் மன்னிப்பை இயேசுவின் மரணம் அளித்தது. "நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல. சர்வலோகத்தின் பாவங்களை நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" என்று 1யோவான் 2:2 அறிவிக்கிறது. இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தது, பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியை அறிவிக்கிறது 1கொரிந்தியர் 15:1௨8. தேவனுக்குக்கு ஸ்தோத்திரம், இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, தேவனுடைய கிருபை வரமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் என்று ரோமர் 6:23 கூறுவது உண்மையானதாக இருக்கிறது.

உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? மீள முடியாத படித்தோன்றும் குற்ற மனப்பான்மையான் நீங்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இயேசுகிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவர் மீது நீங்கள் உங்கள் விசுவாசத்தை வைத்தால் உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. "அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய (இயேசுகிறிஸ்துவின்) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது" என்று எபேசியர் 1:7 கூறுகிறது. இயேசு நமக்காக கடனை செலுத்தி தீர்த்தார், ஆகவே நாம் மன்னிக்கப்பட முடியும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்கு மனீப்பை அருளும்படி இயேசு மரித்தார் என்பதை விசுவாசித்து, இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அப்போது அவர் உங்களை மன்னிப்பார். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் " என்கிற அற்புதமான செய்தியை யோவான் 3:16,17 உள்ளடக்கியிருக்கிறது.

மன்னிப்பு - உண்மையாகவே சுலபமானதா?

ஆம்! மன்னிப்பு சுலபமானதே! நீங்கள் தேவனிடமிருந்து மன்னிப்பை சம்பாதிக்க முடியாது. தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெறும்படிக்கு உங்களால் கிரயம் செலுத்தவும் முடியாது. தேவனுடைய இரக்கம் மற்றும் கிருபையினால், விசுவாசத்தின் மூலமாக மட்டுமே நீங்கள் அதைப் பெற முடியும். இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஜெபிக்கும்படி இங்கு ஒரு ஜெபம் தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது. கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவங்களுக்கான மன்னிப்பை அருளுகிறது. இந்த ஜெபமானது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை அவரிடம் வெளிப்படுத்தவும் உங்கள் மன்னிப்புக்கு தேவையானவற்றை அருளினதற்காக நன்றி சொல்வதற்குமான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: நான்கு ஆவிக்குரிய விதிகள் என்ன?

பதில்:
இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய இரட்சிப்பின் நற்செய்தியை பகிர்ந்துகொள்கிறதற்கான ஒரு வழியே நான்கு ஆவிக்குரிய பிரமாணங்கள் ஆகும். இது நற்செய்தியில் உள்ள முக்கியமான தகவலை நான்கு கருத்துக்களில் சொல்லும் எளிய ஒரு வழிமுறை ஆகும்.


நான்கு ஆவிக்குரிய விதிகளில் முதலாவது என்னவெனில், “தேவன் உன்னை நேசிக்கிறார். அவர் உன் வாழ்க்கைக்கு ஆச்சிரியமானதொரு திட்டம் வைத்திருக்கிறார்" என்பதாகும். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத்தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" என்று யோவான். 3:16 கூறுகிறது. “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்." என்று இயேசு வந்த காரணத்தை யோவான்10:10 நமக்கு தருகிறது. தேவனுடைய அன்பிலிருந்து நம்மை பிரிப்பது எது? ஒரு பரிபூரணமான வாழ்க்கையை நாம் பெறமுடியாதபடி தடுப்பது எது?

நான்கு ஆவிக்குரிய விதிகளில் இரண்டாவது என்னவெனில், "பாவத்தினால் மனுக்குலம் கறைபட்டுவிட்டது. ஆகவே தேவனிடமிருந்து மனுக்குலம் பிரிக்கப் பட்டுவிட்டது. அதன் விளைவாக நாம் தேவன் நம் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் ஆச்சரியமான திட்டத்தை அறிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது" என்பதே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர்6:23 பாவத்தின் விளைவுகளைக் கூருகிறது. "எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள்" என்று கூறி ரோமர் 3:23 அதை உறுதிப்படுத்துகிறது. தேவன் தம்மோடு மனிதன் ஐக்கியப்படும் படி அவனை உண்டாக்கினார். மாறாக மனிதன் பாவத்தை உலகத்துக்கு கொண்டுவந்துவிட்டான். அதினால் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டபின் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்த்த அந்த நல்ல உறவை நாம் பாழாக்கிக்கொண்டோம். இதற்கு தீர்வு என்ன?

நான்கு ஆவிக்குரிய விதிகளில் மூன்றாவது என்னவெனில், " இயேசுகிறிஸ்து மாத்திரமே நம்முடைய பாவத்திற்கு பரிகாரமாக தேவன் கொடுத்தது ஆகும். இயேசுகிறிஸ்துவின் மூலமாக நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனோடு உள்ள உறவை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்" என்பதே. "நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" என்று ரோமர் 5:8 கூறுகிறது. இரட்சிக்கப்படுவதற்கு நாம் எதை அறிந்து, விசுவாசிக்கவேண்டுமென்று 1கொரிந்தியர்15:3-4 பின்வருமாறு தெரிவிக்கிறது:" கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்." யோவான்14:6 ல் "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" என்று கூறி இயேசு இரட்சிப்புக்கு நானே வழியென்று தன்னைப் பற்றி பறைசாற்றினார். இந்த இரட்சிப்பு என்ற ஆச்சர்யமான பரிசை எப்படி நான் பெற்றுக்கொள்ளமுடியும்?

நான்கு ஆவிக்குரிய விதிகளில் நான்காவது என்னவெனில், " இரட்சிப்பின் ஈவைப்பெற்றுக்கொள்வதற்கும், தேவன் நமக்காக வைத்திருக்கிற அந்த ஆச்சரியமான திட்டத்தை அறிந்துகொள்வதற்கும் இயேசுகிறிஸ்துவே இரட்சகர் என்று அவர் மீது னம் விசுவாசத்தை வேண்டும்" என்பதே. "அவருடைய நாமத்தின் மீது விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுகொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்று யோவான் 1:12 இதை குறிப்பிடுகிறது "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்று அப்போஸ்தலர் 16:31 இதை மிகவும் தெளிவாகக் கூறுகிறது. நாம் தேவனுடைய கிருபையினால் மாத்திரமே, விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, இயேசுகிறிஸ்துவில் மாத்திரமே இரட்சிக்கப்பட முடியும்.(எபேசியர் 2:8,9)

இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள்.. இந்த ஜெபத்தை சொல்வது உங்களை இரட்சிக்காது. கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையே இரட்சிக்கும். இந்த ஜெபமானது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை அவரிடம் வெளிப்படுத்தவும் உங்கள் மன்னிப்புக்கு தேவையானவற்றை அருளினதற்காக நன்றி சொல்வதற்குமான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: எப்படி நான் தேவனோடு என்னை ஒப்புரவாக்குவது?

பதில்:
முதலாவது. தேவனோடு நம்மை ஒப்புரவாக்கி கொள்வதற்கு நம்மிடம் உள்ள தவறு என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பதில் "பாவம்". நன்மை செய்கிறவன் இல்லை. ஒருவனாகிலும் இல்லை. (சங்.14:3) "நாம் தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாக கலகம் பண்ணினோம். நாம் எல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்தோம் (ஏசா.53:6).


நமக்கு கிடைக்கிற வேதனைதரும் செய்தி என்னவென்றால், பாவத்தின் சம்பளம் மரணம். "பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் (எசே.18:4). நற்செய்தி என்னவென்றால், நமக்கு இரட்சிப்பு கொண்டுவரும்படியாய். அவர் நம்மை தொடர்ந்து வருகிறார் என்பதே. இழந்து போனதைத் தேடவும், இரட்சிக்கவுமே வந்தேன் என்று இயேசுகிறிஸ்து தாமே அறிக்கையிடுகிறார். (லூக். 19:10) அவர் வந்த நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதை "முடிந்தது". (யோ.19:30) என்று சிலுவையில் முழக்கமிடுகிறதை நம்மால் காணமுடிகிறது. நமது பாவங்களை ஒத்துக்கொள்வதுதான் தேவனோடு நமது உறவை சரிப்படுத்திக்கொள்வதற்கு முதற்படியாகும்.

இரண்டாவது. நம்மை தாழ்த்தி தேவனிடத்தில் நம் பாவங்களை அறிக்கை செய்வதும் (ஏசா.57:15) பாவத்தை விட்டுவிடுவதற்கு நாம் எடுக்கும் உறுதியுமாகும். "நீதியுண்டாக, இருதயத்தில் விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினால் அறிக்கைப்பண்ணப்படும்." (ரோ.10:10)

மனந்திரும்புதல், விசுவாசத்தோடு இணைக்கப்பட்டதாய் இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் தியாகமான மரணம், அவரது அற்புதமான உயிர்த்தெழுதல் மேலுள்ள விசுவாசமே இயேசுவை ஒருவருக்கு இரட்சகராக மாற்றும். என்னவென்றால் கர்த்தராகிய இயேசுவை நீ உன்வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோ.10:9). மேலும் பல வேதப்பகுதிகள் விசுவாசத்தின் அவசியத்தை போதிக்கிறது. யோ.20:27, அப்.16:31, கலா.2:16, 3:11, 26, எபே.2:8.

தேவனோடு ஒப்புரவாகிவிட்டேன் என்பது தேவன் உனக்காக எதைச் செய்தாரோ, அதற்காக உன்னையே பிரதிபலனாக அளிப்பது என்பதாகும். அவர் இரட்சகரை அனுப்பினார். நம்முடைய பாவங்களை நீக்கும்படியாக, பலியை நமக்காக கொடுத்தார். (யோ 1:29) அதுமட்டுமல்லாமல், நமக்கொரு வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறார், "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்" (அப். 2:21).

கெட்ட குமாரன் உவமையில் மனந்திரும்புதலைக் குறித்தும், மன்னிப்பைக் குறித்தும், அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. (லூக். 15:11-32) இளையகுமாரன், வெட்கப்படத்தக்க பாவங்களில் தகப்பனாரின் ஆஸ்தியை அழித்துப் போட்டான். தன் தவறை அவன் உணர்ந்து கொண்டபொழுது, தன் வீட்டிற்குத் திரும்பி வர தீர்மானித்தான் (வ.18) இனி, தான் மகனாக இருக்க முடியாது என்று அவனாகவே தவறாக நிச்சயித்தான். தகப்பனார் முன்பு அன்பு கூர்ந்ததைக் காட்டிலும், திரும்பி வந்த தன் மகன் மீது அதிகமாய் அன்பு கூர்ந்தார். எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டது. பெரிய களிகூறுதல் உண்டாயிற்று (வ.24). தேவன் தனது வாக்குத் தத்தங்களை நிறைவேற்றுவதற்கு நல்லவராகவே இருக்கிறார். மன்னிப்பைக் குறித்து அவர் கொடுத்த வாக்குத்தத்தமும் அப்படியே மாறாமல் இருக்கிறது. "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங். 34:18).

தேவனோடு ஒப்புரவாக வேண்டுமெனில் ஒரு மாதிரி ஜெபத்தை தருகிறோம். இந்த ஜெபமோ மற்ற ஜெபமோ உன்னை இரட்சிக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது மாத்திரமே பாவத்திலிருந்து இரட்சிப்பைக் கொண்டுவரும். இந்த ஜெபமானது தேவனிடத்தில், நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கும், அவர் கொடுத்திருக்கும் இரட்சிப்புக்கு நன்றி செலுத்துவதற்கு மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது.

"தேவனே உமக்கு விரோதமாக நான் பாவம் செய்தேன். நான் தண்டனைக்குறியவன் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய தண்டனையை, இயேசு கிறிஸ்து தம் மேலே ஏற்றுக்கொண்டார். ஆகவே நான் மன்னிக்கப்பட்டேன் என்று விசுவாசிக்கிறேன் என இரட்சிப்புக்காக உம்மையே விசுவாசிக்கிறேன். உம்முடைய ஆச்சரியமான கிருபைக்காக, மன்னிப்புக்காக, ஈவாகிய அந்த நித்திய ஜீவனுக்காக, நன்றி சொல்கிறேன்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: நான் ஒரு முஸ்லீம், கிறிஸ்தவனாக மாறுவதை நான் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

பதில்:
உண்மைக்கிறிஸ்தவர்கள் ஈசா/இயேசுவைப் பின்பற்றுபவர்கள் ஆவர். குரானில் இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிற படியால், உண்மையான முஸ்லீம்கள் ஈசாவின் போதனைகளைக் கற்று அவற்றிற்கு கீழ்ப்படிய வேண்டும் (சூரா3:48- 49; 5:46). ஈசாவைக் குறித்து குரான் சொல்வது என்ன?


# அல்லா ஈசாவை அனுப்பி, பரிசுத்த ஆவியினால் அவருக்கு உதவி செய்தார்(சூரா.2:87)
# ஈசாவை அல்லா உயர்த்தினார் (சூரா 2:253)
# ஈசா நீதிமானாகவும் மற்றும் பாவமில்லாதவராகவும் இருந்தார்(சூரா 3:46; 6:85; 19:19)
# ஈசா மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார் (சூரா 19:33௩4)
# ஒரு மதத்தை ஸ்தாபிக்கும்படி ஈசாவுக்கு அல்லா கட்டளையிட்டார் (சூரா 42:13)
# ஈசா பரலோகத்திற்கு (சொர்க்கத்திற்கு) ஏறிச் சென்றார்( சூரா 4:157௧58)

வேதாகமம் - இயேசுவின் வார்த்தை

ஈசாவின் சீடர்களால் இஞ்சிலில்( நற்செய்தி நூல்) அவருடைய போதனைகள் எழுதிவைக்கப் பட்டுள்ளது.ஈசா மற்றும் அவருடைய செய்தியில் நம்பிக்கை வைக்கும்படிக்கு அல்லாவினால் சீடர்கள் ஏவப்பட்டனர் என்று சூரா 5:111 குறிப்பிடுகிறது. அல்லாவின் உதவியாளர்களாக (சூரா 61:6,14), ஈசாவின் சீடர்கள் அவருடைய போதனைகளை துல்லியமாக பதிவுசெய்திருப்பர்.

தோரா(Torah) மற்றும் இன்ஜிலையும் (Gospels) நிலைநிறுத்தி அவ்விரண்டிற்கும் கீழ்படிய வேண்டுமென்றும் குர்ஆன் முஸ்லீம்களுக்கு போதிக்கிறகிறது (சூரா 5:44௪8). நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்குமானால், முகமதுவுக்கு இந்தப் போதனை வழங்கப்பட்டிருக்காது. ஆகவே, முகமதுவின் காலத்தில் இருந்த நற்செய்தி நூல்களின் பிரதிகள் நம்பத்தக்கவையாகவும் துல்லியமானவையாகவும் இருந்தன. முகமது வாழ்ந்த காலத்துக்கும் 450 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் உள்ள நற்செய்தி நூல் பிரதிகள் உள்ளன. மிகவும் பழமையான பிரதிகள், முகமதுவின் காலத்தில் உள்ள பிரதிகள் மற்றும் முகமதுவின் காலத்துக்கு பிந்தினவையாக குறிக்கப்பட்டிருக்கும் கைப்பிரதிகள் இவற்றை ஒப்பிட்டுப்பார்க்கும் போது , நற்செய்தி நூல்களின் அனைத்துப் பிரதிகளும் இயேசு மற்றும் அவருடைய போதனை குறித்த தங்கள் சாட்சியில் முரñபாடற்றவையாக இருக்கின்றன. நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்கின்றன என்று எந்தச் சான்றும் நிரூபிக்க முடியாது. ஆகவே, இயேசுவின் எல்லா போதனைகளும் வேதாகமத்தில் துல்லியமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.
v இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்

நற்செய்தி நூல்கள் உண்மை என்று அறிந்து கொள்ளுதல் போன்ற காரியங்கள் இயேசுவைக் குறித்து என்ன போதிக்கின்றன? இயேசு தான் கொலை செய்யப்பட்டு, மரித்து பின்பு மரித்தோரிலிருந்து எழும்புவேன் என்று கூறி தனது வாழ்வு நிகழ்வுகளை முன் அறிவித்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்திருக்கிறது (மத்தேயு 20:19). இயேசு முன் அறிவித்ததைப் போலவே அவை நடந்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்திருக்கின்றன (மத்தேயு 27- 28; மாற்கு 15,16; லூக்கா 23,24; யோவான் 19- 21)

பாவமில்லாத இயேசு கொல்லப்படுவதற்காக தன்னைத்தான் ஒப்புக்கொள்ள வேண்டும்? நீங்கள் உங்கள் நண்பனுக்காக உயிரைக்கொடுக்கும் அன்பைவிட பெரிய அன்பு வேறு இல்லை என்று இயேசு சொன்னார் (யோவான் 15:13). தனது தீர்க்கதரிசி தவறாக நடத்தப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் தேவன் ஏன் அனுமதித்தார்? நமக்காக தியாக பலியாக இயேசுவை அனுப்புமளவுக்கு அவர் நம்மை அன்புகூர்ந்தார் என்று யோவான் 3:16 சொல்கிறது.

இயேசு நமது பாவங்களுக்காக பலியானார்

இயேசு நமக்காக தன்னுடைய உயிரை ஏன் தியாகம் செய்யவேண்டும்? இது தான் இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் ஆகும். நம்முடைய தீயச் செயல்களை விட நல்ல செயல்கள் அதிகமாக உள்ளனவா இல்லையா என்பதைப்பார்த்து அல்லா நியாயம் தீர்ப்பார் என்று இஸ்லாம் போதிக்கிறது. தீய செயல்களை விட நற்செயல்களைச் அதிகமாக செய்ய வாய்ப்பு உண்டு என்றாலும் கூட, ஒரே ஒரு பாவத்தை செய்தவனைக் கூட பரலோகத்தில் அனுமதிக்க தேவனால் முடியாது. அவர் அவ்வளவு பரிசுத்தமானவராக இருக்கிறார் (யாக்கோபு2:10)பூரணமற்ற எதையும் பரிசுத்த தேவனால் பரலோகத்தில் அனுமதிக்கமுடியாது. நாமெல்லாரும் பாவம் செய்திருக்கிறோம் என்றும் அதனால் நாம் பரலோகத்திற்குள் நுழையமுடியாது என்பதை தேவன் அறிந்திருந்தார். நாம் மன்னிக்கப்படுவதற்கான ஒரே வழி பூரணமான ஒருவர் நமக்குப் பதிலாக மரித்து நமது பாவக்கடன்களை செலுத்தி தீர்ப்பதே என்பதை தேவன் அறிந்த்திருந்தார். தன்னால் மாத்திரமே அப்படிப்பட்ட மாபெரும் கிரயத்தை செலுத்த முடியும் என்பதை தேவன் அறிந்திருந்தார்.

நம்மை மீட்பதற்கான தேவனின் திட்டம்

ஆகவே, தேவன் ஒரு கன்னியிடம் பிறக்கும்படி தமது மகனை அனுப்பினார். தேவன் மரியாளுடன் பெற்றோர்களுக்குரிய உறவு வைத்திருì¸Å¢ø¨Ä. தேவனுடனான அவருடைய உறவு மற்றும் அவருடைய தெய்வீகத்தின் அடிப்படையில், இயேசு தேவகுமாரன் ஆவார்(யோவான் 1:1,14). தனது பாவமற்ற வாழ்க்கை, பரிபூரண செய்தி, பாவத்துக்காக மரணம் மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் போன்றவற்றால் இயேசு தன்னை தேவகுமாரன் என்று நிரூபித்தார்.

இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மரணம் ஆகியவை உங்களுக்கு தரும் செய்தி என்ன? பாவத்திலிருந்து இரட்சிக்கும்படி இயேசுவை தங்கள் இரட்சகராக நம்புபவர்களுக்கு பாவத்திலிருந்த்து மீட்பை தேவன் அருளுகிறார். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் (தேவன்) பிதாவினிடத்தில் வரான்". என்று இயேசு சொன்னார்.

தேவனிடம் செல்லும் ஒரே வழி நானே என்பதை இயேசு தெளிவாக போதித்தார். இயேசுவின் மூலமாக மட்டுமே நாம் பரலோகம் சென்றடைய முடியும். தேவன் நம் பாவங்களை மன்னித்து, அவருக்காக வாழ உதவி செய்வார். அத்துடன் நித்திய வாழ்வையும் நமக்கு தருவார். இப்படிப்பட்ட விலையேறப்பெற்ற பரிசை நாம் எப்படி வேண்டாமென தள்ளிவிட முடியும்? தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுக்குமளவுக்கு நம்மை அன்பு செய்த தேவனை எப்படி ஏற்றுக் கொள்ளாதிருக்க முடியும்?

ஒரு கிறிஸ்தவனாக மாறுதல்

சத்தியத்தைக் குறித்த உறுதி இல்லாதவர்களாக நீங்கள் இருந்தால், பின்வரும் ஜெபத்தை தேவனிடம் கூறுங்கள்: "தேவனே, தயவுசெய்து எனக்கு சத்தியத்தை வெளிப்படுத்தும். தவறாக இருப்பதை கண்டுகொண்டு அதை தள்ளிவிட உதவும். இரட்சிப்புக்கான சரியான வழிக்கு நேராக என்னை நடத்தும்." இப்படிப்பட்ட ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுப்பார்.

இயேசுவை உங்கள் இரட்சகராக நம்பும்படிக்கும், அவரைப் பின்பற்றவும் தேவன் உங்களை நடத்துவாரெனில், இயேசுவின் மூலமாக வரும் இரட்சிப்பை தேவனிடம் கேளுங்கள்.. இங்கே ஒரு மாதிரி ஜெபம் தரப்பட்டிருக்கிறது. " தேவனே, நான் எனது பாவத்தை நேசிப்பதையும், எனது சொந்தக் கிரியைகளின் மூலம் சொர்க்கத்திற்கு சென்றடைய முயற்சிப்பதையும் விட்டுவிடுகிறேன். எனது பாவங்களுக்காக மரிக்கும்படி இயேசுகிறிஸ்துவை அனுப்பினதற்காகவும், அவரை மரித்தோரிலிருந்த்து உயிரோடெழுப்பினதற்காகவும் நன்றி. இயேசுவை நான் எனது சொந்த இரட்சகராக நம்புகிறேன். ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன், என்னை உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular